கொய்யா பழமும், மருத்துவ பயனும்

koyya

கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைஇகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.

கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும், மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு,போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம்.

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்றும், காரணம் கொய்யாவில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, பல தொந்திரவுகள், வயிற்று உபாதைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலாக சத்துக்கள் உள்ளன என்றும், மலிவு விலையில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலான வலிமை கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.