HOW TO KEEP THE MIND HAPPY AT ALL TIMES?

Crypto and Banking

We recommend the following high-quality options for secure Bitcoin transactions and online banking services:

BTC and ETH QR code generator websites

This collection comprises of a variety of online platforms, designed to generate QR codes for Ethereum (ETH) and Bitcoin (BTC) addresses. These websites offer a user-friendly interface with step-by-step guides to help users create custom QR codes that serve as a direct channel to their crypto wallet addresses. Users could conveniently use these generated QR codes for transactions, thus making the process of sending and receiving cryptocurrencies faster and more efficient. The collection includes online tools with different features such as customization of QR codes, error correction capability, and optional encryption for extra security. The generated QR codes from these sites can be used in print and digital format which are scannable with most smartphone cameras or QR code scanner apps. These websites work as powerful tools for streamlining cryptocurrency transactions and promoting the wider use of digital currencies.

CRA Login Canada Revenue Agency

CRA Login section including CRA My Account login, CRA representing a client, CRA business login, MyCRA Login and more. Canada Revenue Agency.


Last updated: March 20, 2024
by and Alex Morrell is a senior correspondent at Business Insider covering Wall Street at large.

நாம் அனைவரும் ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நேற்று 24 மணி நேரத்தில் நம் மனம் எத்தனை நிமிடங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி யார் யோசித்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஞாபகம் வரும். சிலருக்குப் பல வருடங்களாக அப்படியொரு சம்பவமே நடந்திருக்காது. மனம் ஒரு நாளில் எவ்வளவு

நிமிடம், எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இதுவே மனித சக்தி. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும் வீரியத்துடன் வேலை செய்யும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஒரு நூறு நபரை அழைத்து உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், எது நடந்தால் இருக்கும் என்று கேட்டால் பலர், நான் முதலமைச்சர் ஆக வேண்டும், அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் பரீட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக இருப்பேன். நாங்கள் பெரிய பங்களா வீடு வாங்க வேண்டும், எனது காதலியைத் திருமணம் செய்ய வேண்டும், என் கணவர் தலையில் முடி முளைக்க வேண்டும் என இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்வார்கள். சற்று யோசித்து பார்த்தால் அவர்கள் சொன்ன எந்தவொரு விசயமும் இப்பொழுது உடனடியாக நடைபெறாது. இதற்குப் பல வருடங்கள் ஆகலாம். சிலரின் ஆசைகள் நிறைவேறாமல் கூட போகலாம். அப்படி இருக்கையில் அந்த ஆசை நிறைவேறாத வரை அவர் வருத்தத்தில் தான் இருப்பார்களா? இப்படி நாம் எப்பொழுதோ நடக்கவிருக்கும் ஒரு சம்பவத்திற்காக நம் மகிழ்ச்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

மகிழ்ச்சி என்பது நமது லட்சியம், ஆசை போன்ற விஷயங்கள், நடந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். ஒருவர் வருடங்களாக காத்திருந்து முதலமைச்சராகப் பதவியேற்றால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், நம் மனதிற்கு பிடித்த ஜிலேபியை சாப்பிடும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. 30 வருடங்களாகக் கடினமாக உழைத்துக் குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து அந்த பணத்தில் வாங்கிய ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுது நம் மனம் என்ன மகிழ்ச்சி அடைகிறதோ அதே மகிழ்ச்சி ஒரு குழந்தையைக் கொஞ்சும்போளுது கிடைக்கிறது. இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நமது மனம் மகிழ்ச்சி எதனால் கிடைக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யாது. கிடைத்தால் போதும் என சந்தோஷப்படும். இதை புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

சில குழந்தைகள் ஒரே பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருக்கும். அதை பார்க்கும் பெற்றோர்களுக்குப் போரடிக்கும். ஆனால் அந்தக் குழந்தைக்குப் போரடிக்காது. இதற்குக் காரணம் என்னவென்றால், குழந்தைகள் எப்பொழுதும் மனதிற்கு பிடித்தால் மட்டுமே ஒரு காரியத்தைச் செய்யும். ஆனால் சற்றுப் பெரியதாகி வயதாகிவிட்டால் மனதிற்குப் பிடிக்காத காரியத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். எனவே தான் குழந்தைகள் மனதிற்குப் பிடித்த காரியத்தை மட்டுமே செய்வதால் முகம் மலர்ச்சியாகவே உள்ளது. படுத்தால் உடனே தூங்குகிறது. நிம்மதியாக இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது நமக்கு மனதிற்குப் பிடித்த பாட்டைக் கேட்கும் பொழுது வரலாம், பிடித்த சினிமாப் பார்க்கும் பொழுது வரலாம், குழந்தையைக் கொஞ்சும் பொழுது வரலாம், காதலன் காதலியைப் பார்க்கும் பொழுது வரலாம், இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது வரலாம், பிடித்த உணவை உண்ணும்பொழுது வரலாம், எனவே நம் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சி நம் அருகில் இருக்கிறது. ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் தேடிகொண்டிருக்கிறோம்.

எனவே மகிச்சி என்பது எப்படி கிடைத்தது என்பதை மனம் ஆராய்ச்சி செய்யாது. எப்படியாவது கிடைத்தல் போதும் என்பதைப் புரிந்து கொண்டு பெரிய பெரிய ஆசைகளையும், லட்சியங்களையும் அடைவதற்கு முயற்சி செய்து அந்த சந்தோசத்திற்காக அந்த மகிழ்ச்சிக்காகக் காத்திருக்காமல் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கும் சந்தோஷத்தில் இருக்கும் பொழுது தயவு செய்து வெளியே வராதீர்கள்.

உதாரணமாக உங்களுக்கு மனதிற்கு பிடித்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சமயம் உங்கள் செல்போன் அழைக்கும் பொழுது நாம் என்ன செய்கிறோம்? உடனே மகிழ்ச்சியான அந்தக் காரியத்தை உடனே நிறுத்தி விட்டு நாம் செல்போனில் பேச ஆரம்பித்து விடுகிறோம். அந்த செல்போனில் வரும் வார்த்தைகள் ஒரு வேளை உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் மகிழ்ச்சியிலிருந்து வெளியேறி வேறு வேலையைச் செய்கிறோம். எப்பொழுதுமே நாம் வேலைக்கும், வசதிக்கும், பணத்திற்கும், இலாபத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறோம். மகிழ்ச்சிக்குத் தருவதில்லை. அதனால் தான் அது நம்மிடம் மகிழ்ச்சி இருப்பதில்லை.

எனவே மனதிற்கு பிடித்தாமான ஒரு காரியத்தை பாடல் கேட்பதோ, குழந்தையுடன் விளையாடும் பொழுதோ, அடுத்த வேலை வரும் பொழுது தயவு செய்து அதை தள்ளிபோட முயற்சி செய்யுங்கள். ஒரு நாளில் எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அதுதான் நம்முடைய அற்புதமான சக்தி. எனவே மகிழ்ச்சியான நேரத்தில் இருக்கிறோம் எனபதைப் புரிந்து கொண்டால் அதிலிருந்து வெளியே வருவதற்கு யோசியுங்கள். அந்த நேரத்தை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

நான் எப்பொழுதும் ஒரு மனதிற்குப் பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது செல்போனில் யாராவது கூப்பிட்டால் அதை எடுத்துப் பேச மாட்டேன் அந்தப் பாட்டு முடிந்த சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் அதை இரசித்து அமைதியாக இருந்து பிறகு மட்டுமே நான் அந்த செல்போனை எடுப்பேன் இப்படி எந்த விஷயம் நம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அந்த விஷயத்திலிருந்து வெளியே வருவதற்கு நாம் உடனே முயற்சிக்கக் கூடாது. இதற்காக சில வேலைகள், சில இலாபங்கள், சில பொருட்கள் அல்லது பணம் குறைந்தாலும், பரவாயில்லையென்று நினைக்க வேண்டும். எண்ணினாலும் மகிழ்ச்சிக்கு யாரும் உலகில் விலை கொடுக்க முடியாது. நமது உடலிலுள்ள சொத்து, ஆரோக்கியம், மனதில் சொத்து மகிழ்ச்சி. இதேபோல் நான் சில படங்களை 100 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். இப்பொழுது மீண்டும் அந்தப் படத்தை மற்றும் ஒரு முறை பார்ப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஏனென்றால் அந்தப் படத்தை பார்க்கும் பொழுது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சில சினிமாப் படங்களை பார்க்கும் பொழுது என மனதிற்கு பிடிப்பதில்லை. அதை நான் பார்க்கவே மாட்டேன். அதேபோல் எனது செல்போனில் சில பாடல்களை நான் பலமுறை கேட்டுவிட்டேன். ஏனென்றல் எனக்கு அந்தப் பாடல்கள் பிடித்திருக்கின்றன. அதை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த பாடலை கேட்கும்பொழுது ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று ஆராய்ச்சி செய்ய மாட்டேன். ஏனென்றால் நல்ல விஷயத்தைத் தயவு செய்து ஆராய்ச்சி செய்யாதீர்கள். செய்தால் அதை ரசிக்க முடியாது.அப்பொழுது மனம் மகிழ்ச்சியாக இருக்காது.

எனவே தயவு செய்து நமது மனதிற்குப் பிடித்த காரியங்களை திரும்பத் திரும்ப செய்யுங்கள். ஆனால் உடனே மனதிற்குப் பிடித்த காரியம் செய்யா வேண்டுமென்று சொல்லிவிட்டவுடன் நாம் மனம் எல்லாவற்றிக்கும் ஆசைப்படும். அப்படி மனதிற்குப் பிடித்த எல்லா காரியங்களைச் செய்யவும் முடியாது. எனவே ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த காரியங்களைச் செய்யுங்கள் நம் மனதிற்குப் பிடித்த காரியத்தை செய்யும்பொழுது அதனால் மற்றவரின் உடலிற்கோ, மனதிற்கோ எந்த விதமான தீங்கும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும்.

தனியாக நாம் ஒரு அறைக்குள் இருக்கும்பொழுது நிர்வாணமாக இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சி என்று தோன்றினால் கண்டிப்பாக இருக்கலாம், இதனால் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நடுரோட்டில் நிர்வாணமாகச் செல்வது நம் மனதிற்குப் பிடித்திருந்தால் அதை செய்யக் கூடாது ஏனென்றால் அதனால் பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே சிறிது நேரம் யோசித்து பாருங்கள். மனதிற்குப் பிடித்த காரியங்கள் எந்தச் செலவும் இல்லாமல் நம் கண் முன்னே நிறைய உள்ளன. அதை யாரும் அனுபவிப்பதில்லை. இப்படி எந்தச் செலவும், செய்யாமல் எங்கேயும் செல்லாமல் இருந்த இடத்திலேயே மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பொழுது நாம் மகிழ்ச்சி எனபது தேடும் பொருளாக வெகுநாட்களாக தேடிக் கொண்டு வந்திருக்கிறோம்.

மனம், புத்தி, ஆழ்மனப் பதிவுகள், உயிர், ஆன்மா, மற்றும் ஆரா இவை அனைத்திற்கும் உள்ள சம்பந்தம், இதன் சக்தியை எப்படி அதிகப்படுத்துவது? இந்த விசயங்களைப் பற்றி விரைவில் ஒரு புத்தகம் எழுத உள்ளோம். அந்தோ புத்தகம் வரும் பொழுதும் அதைப் படித்து மேலும் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

Thanks to : ValaiTamil

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.