உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருள்களும் தரமான பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம். 1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் உணவை இப்படி சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட வேண்டும். இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்ல படியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து நாங்க ரெடி உணவை நல்லபடியாக ஜீரனமாக்கி இரத்தத்தில் கலக்குவதற்குத் தயார் என்று உடல் நம்மிடம் பேசும் பாசை தான் பசி. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நமது சிகிச்சையில் மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு. உதாரணமாகக் காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மதியம் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம் இரண்டு மணியாகிவிட்டது. சாப்பிடலாம் என்று நினைக்கிறோம், ஆனால் பசிக்கிறதோ என்று யோசித்தோமா? என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு மதியம் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும். ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது. உடலிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான், இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரெண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும் ? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரெண்டு மணிக்கு சுரந்து விடும் இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எஎடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும் பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது, வந்த நோயும் குணமாகும். ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபித்த சட்டம் இது? ஒரு சிலர் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். ஒரு சிலர் உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவை சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகு தான் சாப்பிட வேண்டும். "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்து பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிக முக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும் இந்த ஒரு விசயத்தைக் கடைபிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம்.எல்லோராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள் போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு(LUNCH TIME) உணவு இடைவேளை இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றல் என்ன செய்வது சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள். 2. உணவில் எச்சில் கலக்க வேண்டும். சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும், எச்சில் கலந்து உணவு மட்டுமே நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்டப் பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறை நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஒரு உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காதஒரு உணவு வயிற்ருக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்து தான் சாப்பிடுகிறோம் என்று எல்லோரும் சொல்வோம். ஆனால் எச்சில் கலப்பது கிடையாது. சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மேல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தை கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவி வாய்க்குள் அனுப்புவதற்கு மட்டுமே உதட்டை பிரியுங்கள். உணவு வாயுக்குள் நுழைந்த உடன் உதட்டை பிரிக்காமல் மென்று முழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் இருங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. எனென்றால் இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சில வெளிநாட்டுக்காரர்களும் நம்மூரில் வந்து சாப்பிடும் பொழுது வேடிக்கைப் பாருங்கள், அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்து சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது/ உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்துவிட்டாதீர்கள் சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சில நாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனது ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனது ஒழுங்காக இல்லை. ஆனால் உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே மருந்து மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்பதியாக நடக்கிறது. எனவே தயவு செய்து இனிமேல் ஒவ்வொருவாய் உணவையும் உதட்டை மூடிமென்று விழுங்குங்கள். உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்று சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவு தான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள், சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும் கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால். சப்பாத்தில் கூழ் போல மாறிவிடும். முழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்து விடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக் கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது. இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும் தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும்.ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா அப்படித்தான் வலிக்கும். அந்த வழியைத் தாங்கிக் கொண்டு ஒரு வரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தாப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று முழுங்கும் வரை உதட்டைப் பிரிக்க கூடாது. 3. சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம். ஜீரணம் வயிற்றில் தானே நடக்கிறது. அது எப்படிப் பாதிக்கும் என்ற சந்தேகம் வரும். நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும். உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம். உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது. அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனதால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா. எனவே, மனது நினைத்தால் மூத்திரப் பையில் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனதால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனதால் நினைத்தால் நமது உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனதில் தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டு செய்கிறது. அதே போல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும். உதாரணம் நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு களைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நமது இருதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருக்கும். பட பட வென இருக்கும் உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். நாம் கனவில் தானே ஓடினோம். பின்னர் ஏன் வியர்வை வந்தது. நெஞ்சு படபடக்கிறது. ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனது நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும். எனவே, உணவை உண்ணும் பொழுது, நமது கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாக சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தன் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தயவு செய்து இனிச் சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வையுங்கள். ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். ஐயா உலகில் நோய்களுக்கான காரணம் என்ன என்று, அந்த ஞானி கூறினார். சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று. மீண்டும் கேட்டார்கள். உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி? அதற்கு அந்த ஞானி சொன்னார் சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும் என்று, இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன ? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை. எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவருக்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நமது குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோயால் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்து பழகுங்கள். உணவு சாப்பிடும் பொழுது, உணவை கையில் எடுத்து இந்த உணவு வயிற்றிற்குள் சென்று ஜீரணமாகி இரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்று எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். "பசியின்றி எதையும் உண்ணாதீர்கள் உண்ணும் பொழுது உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்" எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம். 4. உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். உணவைப் பற்களால் அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களை ஒரு கேள்வி கேட்கும் 'அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது' அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் கிரைண்டர் போல் கல் இருக்கிறதா? என்ன வயிறு நம்மைப் பார்த்து கேட்கும். வயிற்றில் பற்களும் இல்லை. பிளேடுகளும் இல்லை. கல்லும் இல்லை. பிறகு நாம் சாப்பிடும் உணவை வயிறு எப்படி ஜீரணம் செய்கிறது என்றால், வயிறு என்பது ஒரு குடம் போல வயிற்றில் Hydrocloric Acid (HCL) என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணம் செய்கிறது. இந்த அமிலத்தின் சக்தி என்னவென்றால், நம் வயிற்றில் பசிக்கும் பொழுது சுரக்கும் HCL அமிலத்தை எடுத்து ஒரு இரும்பின் மேல் ஊற்றினால் இரும்பே உருகும். நமது உள்ளங்கையில் ஊற்றினால் உள்ளங்கையில் ஓட்டை விழுந்து விடும். இப்படி இரும்பையே உருக்கும் சக்தி வாய்ந்த அமிலம் தான் ஒவ்வொரும் முறை பசிக்கும் பொழுதும் நமது இரைப்பையில் உற்பத்தியாகிறது. இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையை ஒன்று செய்யாதா என்று சந்தேகம் வரும் இரைப்பையிலிருக்கும் இந்த அமிலத்திற்கும் இடையே முயூக்கஸ் என்ற ஒரு சளிப்படலம் இருக்கும். இந்த சளிப்படலம் தான் அமிலத்தை இரைப்பையுடன் சேராமல் இரைப்பைக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுக்கக்கிறது. பசி எடுத்த பிறகு நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் சுரந்த அமிலம்தான் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் இந்த முயூக்கஸ் சளிப்படலத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும். இப்படிப் பசி எடுத்து சாப்பிடாமல் வயிற்றை காய போடும் நபர்களுக்கு சில காலங்களுக்குப் பிறகு இந்த அமிலம் சளிப் படலத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இறைப்பையைத் தொடும் இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையைத் தொட்டவுடன் இரைப்பை பாதித்துப் புண் ஏற்படும். அப்பொழுது அதி பயங்கரமாக வயிற்று வலி ஏற்படும் இதுவே அல்சர் என்று கூறுவார்கள். அல்சர் வராமல் இருப்பதற்கு நேரம் ஒழுங்காக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார்யாரெல்லாம் நேரம் நேரம் பார்த்து ஒழுங்காக சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு தான் அல்சர் வரும். நேரம் பார்த்துச் சாப்பிட்டால் அல்சர் வரும் பசி எடுத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கும் பசி எடுத்துச் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு சாப்பிடுகிறார். அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். மணி மதியம் 2 ஆனவுடன் அவர் சரியான நேரம் பார்த்துப் பசி இல்லாத போது சாப்பிட்டால் என்ன ஆகும். ஏற்கனவே ஜீரணமாகாத உணவு வயிற்றில் இருக்கும் பொழுது அதுவும் கெட்டுப் போகும் புதிதாக சாப்பிடப் போகும் புதிய உணவும் கெட்டுப் போகும். இதே போல் காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு எடுத்துக் கொள்கிறார். அதிக வேலை செய்கிறார். மதியம் பனிரெண்டு மணிக்கு நன்றாகப் பசிக்கிறது. இவர் நான் நேரம் பார்த்துதான் சாப்பிடுவேன் என்ற இரண்டு மணி வரை தாமதமாகக் காத்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நேரம் பார்த்துச் சாப்பிடுவது நோய் பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம். உலக மருத்துவர்கள் நேரம் பார்த்துத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். தயவு செய்து நேரம் பார்த்து யாரும் சாப்பிடாதீர்கள், பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். எனவே, சாப்பிடும் பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும். நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக முழுங்கி விடுகிறோம். நாம் மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்து கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கை வேண்டிய சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்த்து விடுகிறது. ஏனென்றால் பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல இரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36 வாய் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாகவும், மலமாகவும் மாறுகிறது. மேலும் தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே ஒரு காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காதது மட்டும் தான். வயிற்றில் அமிலம் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆகுவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள். ஒரு உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிற மூலமாக உங்கள் உணவை ஜீரணம் சித்து விட்டு மீதமுள்ள அமிலங்கள் அடுத்து வரும் உணவுகளுக்குத் தயாராக இருக்கும். எனவே நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயாசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்துப் பின்னர் விழுங்க வேண்டும். நம்மில் பலர் தொப்பை மற்றும் உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி (WALKING) செல்வது வழக்கம். 4 கி.மீ. வாக்கிங் சென்று வந்த பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும். சிலர் புதிய டெக்னாலாஜி மூலமாக (வைபரேட்டர்) VIBERATOR MACHINE வயிற்றில் மாற்றிக் கொண்டும் VIBERATOR-னில் ஏறி நின்று கொண்டும் ஏலக்ட்ரானிக் முறையின் மூலமாக அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும். பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும். பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள். எனவே, நமது சிகிச்சையில் உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான். உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்களது எடை பல கிலோக்கள் குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை வைபரேட்டர் மெசின்(MACHINE) பயன்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் நபராக நீங்க இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம் அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம். நமது சிகிச்சையில் உங்கள் மனதுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனதிற்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாரளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும். நமது சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும், உடல் எடை குறையும். பிறகு தான் நோய்கள் குணமாகும் எனவே, நமது சிகிச்சையை பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள். உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருக்கிறது என்று பொருள். நமது சிகிச்சையை செய்யும் பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வரும். இப்பொழுது அதிகரிக்கும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசையினால் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான உடம்பு. இப்படி அதிகரிக்கும் உடல் எடை இனி குறையாது. எனவே, தயவு செய்து ஒரு கைகளில் உணவை எடுத்து வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைந்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும் சந்தோசமாக இருக்கும் வயிறு சந்தோஷமாக இருந்தால் தான் நோய்கள் குணமாகும். நாம் ஆரோக்கியமாக இருப்போம். 5. வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி சாப்பிடுவதற்கு முன்பு அரைமணிநேரம். தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும் சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தி விட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்).வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே, தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுது தான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன்.எனவே, ஒரு அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன் என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும். சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டு விடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூல் போல செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நடிவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரனத்தைக் கெடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் 1 1/2 மணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. 1 1/2 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது. இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வரண்டு போதல், நாக்கு வரண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும் பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனதில் சந்தேகம் எழலாம். உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நமது நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக்கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது. சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது. சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் இருந்தால் இந்த ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நமது மனது குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைக் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்ற குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைகிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நமது கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது. தொண்டை தாகமாக இருந்தால் நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதற்கு ஒரு அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும்.தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சு குழிக்குக் கீழே நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரை லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு செம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து முழுங்கும் அளவிற்கு கடித்தால் போதும், பிறகு ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாரளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள். பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலது கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக் கொண்டு உறிஞ்சி குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேசனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர்கள் டெக்னிக்ளாக பிரச்சாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம்(ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே, சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும். பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்தி விடாதீர்கள்.இந்தச் சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. நோய்களுக்கும் மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நல்ல பழக்கங்கள் எந்தக் கலாச்சாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக் குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள். நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ, இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது. எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும். என்ற கட்டாயம் இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது. சிலர் நாம் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வலி இருந்தால் சொல்லுங்கள் என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது. 6. சாப்பிடும் பொழுது TV பார்க்கக் கூடாது. நாம் சாப்பிடும் பொழுது TV பார்த்தால் அந்த உணவு சரியாக ஜீரணம் ஆகாது. கண்தானே TV பார்க்கிறது. வயிறு ஜீரணம் செய்ய வேண்டியது தானே என்ற கேட்கலாம். நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சி நேராக மனதிற்கு சென்று மனது அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது அந்த விஷயம் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரகின்றணன். மற்ற ஜீரண சுரப்பிகள் சுரப்பது இல்லை. TV யில் ஒரு நாடகத்தைப் பார்த்துக் கொண்டு கண்ணில் கண்ணீருடன் சோகமாக சாப்பிடும் நபருக்கு ஜீரண சுரப்பி சுரப்பதில்லை. கண்ணீர் சுரப்பி சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது. நமது உடலில் ஒரு குறிப்பிட்டநேரத்தில் குறிப்பிட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது நமது உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, தயவு செய்து டிவி சீரியல் பார்த்து கொண்டு சாப்பிடாதீர்கள் டி.வி. யில் வரும் நாடகங்கள் கோபம், டென்ஷன், பயம், தில்லுமுல்லு ஏமாற்று வேலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையே காட்டுகின்றன இந்த கதைகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும் பொழுது உடலில் எதிர்மறை சுரப்பிகள் சுரக்கிறதே தவிர ஜீரண சுரப்பிகள் சுரப்பது எல்லை. டி.வி. யில் ஒரு படம் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் நாம் அந்தப் படத்தின் ஹீரோவாகவே அல்லது ஹீரோயின்னாவோ மாறிவிடுவோம். அப்பொழுது அந்தப் படத்தின் எந்த மாதிரி உணர்ச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் தெரிகிறதோ நமது உடலிலும் அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, படம், சீரியல் போன்ற எதையும் பார்க்க வேண்டாம். மேலும், படம், சீரியல் மட்டுமல்ல டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடவே கூடாது, ஏனென்றால் நமது கவனத்தை டி.வி.யில் வரும் காட்சிகள் சிதறடிக்கும். டி.வி.யில் செய்தி பார்த்துத் கொண்டே சில பேர் சாப்பிடுவார்கள். சில நேரங்களில் குண்டு வெடித்து 50 பேர் பலி என்ற செய்தியைக் காட்டும் பொழுது சில கோரக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் அந்த உணவு ஜீரணமாகாது. எனவே, சாப்பிடும் பொழுது டி.வி. PROJECTOR, HOME THEATRE, DVD PLAYER போன்ற எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சிகளில் தோன்றும் அருவருப்பான, கோரமான காட்சிகள் நமது மனதைப பாதித்து ஜீரண சக்தியைக் கெடுக்கின்றன. நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டை பற்றி மட்டுமே கவனிக்க வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். எனவே, டி.வி. என்பது நமது கவனத்தை சிதறடிக்கும் ஒரு பொருள். எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிட்டாதீர்கள். 7. சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கக் கூடாது சிலர் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால், நாம் புத்தகம் படிக்கும் விசயங்களிலேயே இருக்கும். அப்பொழுது நமது மனம் ஜீரண சுரப்பிகளைச் சுரக்க வைப்பதற்குக் கட்டளையிடாது. சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டு சாப்பிடும் பொழுது திடீரென உணவைப் பார்த்து எங்கே இட்லியைக் காணோம் என்று கேட்டபார்கள். அந்த அளவுக்கு நாம் எவ்வளவு சாப்பிட்டோம், எப்படி சாப்பிட்டோம் உதட்டை மூடிச் சாப்பிட்டோமோ, சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தோமா என்று ஒன்றுமே தெரியாது. இப்படி புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் எல்லாவித நோய்களும் வரும். எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்காதீர்கள். 8. சாப்பிடும் பொழுது பேசக் கூடாது சாப்பிடும் பொழுது நம்மில் பலர் பேசிக் கொண்டோ சாப்பிடுகிறோம். இப்படிச் சாப்பிடும் பொழுது பேசுவதால் அந்தச் சாப்பிடு சரியான ஜீரணமாகாமல் தரம் குறைந்த சர்க்கரை, தரம் குறைந்த கொழுப்பு போன்ற பொருள்களை உருவாக்குகிறது. சாப்பிடும் பொழுது பேசினால் என்ன தவறு என்று கேட்டால் பேசுவதற்காக வாயைத் திறக்கும் பொழுது வாய்க்குள் காற்று நுழைந்து விடுகிறது. உணவு எச்சில் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜீரண வேலையைச் செய்து கொண்டிருக்கும் பொழுது காற்று உள்ளே செல்வதால் ஜீரண வேலை கெடுகிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி. சாப்பிடும் பொழுது வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். சாப்பிடும் பொழுது விதிமுறை நாம் கடைப்பிடிக்க முடியாது. மேலும் நாம் பொதுவாகச் சாப்பிடும் பொழுது என்ன விஷயம் பேசுகிறோம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வியாபரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கோபம், வருத்தம், டென்ஷன், பயம் போன்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றித்தான் அதிகமாக பேசுகிறோம். இப்படிச் சாப்பிடும் பொழுது தேவையில்லாத விஷயங்களை யோசிக்கும் பொழுது நமது உடலில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் ஜீரண வேலை தடைபடுகிறது. உடனே நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டு சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிடும் பொழுது பேசினால் உதடு பிரியும் பொழுது காற்று உள்ளே செல்கிறது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது போசாதீர்கள். நமது விட்டில் யாராவது விருந்தாளி வந்தால் உடனே அவர்களுக்குப் பலகாரம், டி, காபி, கூல்டிரின்ஸ் போன்றவற்றைச சாப்பிட கொடுத்து அவரிடம் உடையாடிக் கொண்டிருக்கிறோம். வருந்தளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரைமணி நேரமும் அவர்கள் வாயில் எதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். விருந்தாளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரைமணி நேரமும் அவர்கள் வாயில் எதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருப்பது சட்டமா? இப்படி நமது வீடு தேடும் வரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நாம் பகாரங்களைக் கொடுத்துச சாப்பிட வைத்து, சப்பிடச சாப்பிட நம்மிடம் பேச வைத்து அவர்கள் ஆரோக்கியம் கொடுப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் இருக்கிறது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். யார் யாரெல்லாம் பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்களோ அவர்களுக்குப் பலவிதமான நோய்கள் இருக்கும். இல்லையென்றால் கூடிய சீக்கிரம் வரும். இன்றைய காலத்தில் யாராவது இருவர் ஏதாவது ஒரு விசயத்தைச் சிறிது நேரம் பேச வேண்டும் என்றால் இருவர் நடுவில் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி இருக்கும். அதைச் சாப்பிட்டுக் கொண்டேதான் பேசுகிறார்கள். வியாபாரிகள் சிலர் மதியம் உணவிற்கு ஓட்டலுக்கு அழைத்து அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுக் கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் உணவில் இருக்குமா? அந்த உணவு விசாமாகத் தானே மாறும். எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும பொழுது சப்பிடாதீகள். ஒரு வேலை சாப்பிடும் பொழுது அத்தியாவசியமாக. அவசியமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் வாயில் உள்ள உணவைப் பற்களால் நன்றாகமேன்று கூழ் போல் செய்து விழுங்கிய பிறகு அடுத்த வாய் உணவு வாயிற்குள் அனுப்புவதற்கு நடுவில் பேசிக் கொள்ளலாம். முடிந்த வரை சாப்பிட ஆரம்பித்து முடியும் வரை எதுவும் பேசாமல் சாப்பிட்டால் மிக மிக நல்லது. சரி மற்றவர்கள் பேசுவதையாவது கேட்கலாமா என்றால் அதுவும் கூடாது ஏனென்றால் நம் சாப்பிடும் பொழுது மற்றவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தால் நமது எண்ணம் அவர் பேசும் அந்த வார்த்தையில் இருக்குமே தவிர உணவில் இறக்காது. அப்பொழுதும் ஜீரணமாகாது. எந்த வீட்டிற்குச் சென்றாலும், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும், சற்று வேடிக்கைப் பாருங்கள் அனைவரும் சாப்பிடும் பொழுதுதான் எல்லா விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சப்பிடாதீகள். நாம் பேசாமல் சாப்பிட்டால்தான் நம் கவனம் முழுவதும் உணவில் இருக்கும். கவனம் உணவில் இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் சுரந்து நமது உணவை நல்ல பொருள்களாக மாற்றி இரத்தத்தில் கலக்க முடியும். 9. சாப்பிடும் பொழுது சொல்போனில் பேசக் கூடாது சாப்பிடும் பொழுது நம்மில் பலர் செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். இது ஜீரணத்தை மிகவும் கெடுக்கும் ஒரு கேட்ட பழக்கமாகும். ஏனென்றால் நாம் செல்போனில் எந்த விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறோமோ நமது கவனம் முழுவதும் எண்ணம் முழுவதும் மனது முழுவதும் அந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நமது உடலில் ஜீரண சிரப்பிகள் எதுவும் சிரக்காது. அப்பொழுது நாம் சாப்பிடும் சாப்பாடு மலமாகவோ அல்லது விஷமாகவே மாறுகிறது. தவிர இரத்தமாகவும், நல்ல தாது உப்புகளாகவும் மாறுவது கிடையாது. சாப்பிடும் பொழுது செல்போன் பேசிக் கொண்டு சாப்பிடுவர் அனைவருக்கும் பல நோய்கள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு எந்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அவர்களைக் குணப்படுத்த முடியாது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது செபோனில் பேசாதீர்கள். ஒரு 5 நிமிடத்திற்கு SILENT டிலோ அல்லது SWITCH OFF செய்து விட்டோ சாப்பிடுங்கள். இப்பிடி சாப்பிடும் பொழுது செல்போனில் பேசாமல் சாப்பிடுவதால் நாமது உணவு நன்றாக ஜஈரமாகி பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக மாறுகிறது. 10. சாப்பிடும்பொழுது கவனம் சிதறும் எந்த வேலையையும் செய்யாக்கூடாது, நாம் சாப்பிடும்பொழுது நமது கவனம், எண்ணம், மானது, உணவில் மட்டுமே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திற்கும் செல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, பேசுவது, செல்போனில் பேசுவது, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பது, வியாபாரத்தைப் பற்றி யோசிப்பது போன்ற செயல்கள் நமது எஎண்ணத்தை உணவிலிருந்து திசைதிருப்பிவிடும். எனவே இது மட்டுமல்லாமல் உணவிலிருந்து மனதை வேறு ஏதாவது விசயத்திற்குச சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இப்படி சிதறும் எந்த விஷயத்தையும் நாம் சாப்பிடும்பொழுது செய்யக்கூடாது. 11. எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது? எல்லா வைத்தியர்களும், எது நல்ல உணவு? எது, கெட்ட உணவு? என்று ஒரு லிஸ்ட் வைத்திர்ப்பார்கள்.இந்த நெக்கு இது சாப்பிடக் கூடாது கூடாதென்று பலரும் பலவிதமாகப் கூறுவார்கள். ஆனால் நமது சிகிச்சையில் அப்படிக் கிடையாது. நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிகளையும் சாப்பிடலாம். பூமிக்கும் கீழே விளையும் பொருட்களைச சாப்பிடலாம் இருப்பீர்கள். இப்படியே சாப்பிடாமல் இருந்தால், சிறிது நாள் கழித்துப் பூமிக்கு மேல் விளையும் உணவுகளை சாப்பிடக்கூடதுதொன்று கூறுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்? உணவில் மொத்தம் இரண்டு வகைதான் உள்ளன. பூமிக்கு கீழே ஒன்று, பூமிக்கு மேலே ஒன்று. இப்படி யார், யாரோ சொல்வதை தயவுசெய்து கேட்க வேண்டாம். பூமிக்கு கீழே கேரட், உருளைக்கிளங்கு விளைகிறது. இதைச் சாப்பிட்டால் என்னாகும்? பூமிக்கு கீளேயுள்ள உணவுகளில் எந்தக் குறையும் கிடையாது. அதை உங்களுக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதே கேள்வி. உருளைக்கிழக்கு, கருணைக் கிழங்கு போன்ற உணவுகளைச சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள் அதைத் தாராளமகாச சாப்பிடலாம். நமக்கு ஒன்றும் ஆகாது. தவறு பூமிக்குக் கீலேயா? அல்லது மேலேயா? என்பதே கிடையாது. நமக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதில் உள்ளது. நாம் உருளைக்கிழங்கைச சாப்பிடும்பொழுது அது வாயில் சரியாக அரைபடாமல் சரியாக ஜீரணமாகாமல் வயிற்றுப் பகுதிக்குச செல்கிறது. வயிற்றிலும், ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் குடலுக்குச செல்கிறது. பிறகு பல உறுப்புகளைத் தாண்டி மலமாக வெளியே வருகிறது. நாம் சாப்பிடும் உருளைக்கிழக்கு வாயிலும், உருளைக்கிளன்காகவே வயிற்றிலும் உருளைக்கிளன்காகவே, குடலிலும் உருளைக்கிளன்காகவே, மலம் வரை வந்து விழுந்தால் இதற்கு உருளைக்கிழக்கு பொறுப்பா? இல்லை நாம் பொறுப்பா? பூமிக்கு கீழே விளையும் பொருட்களை நாம் ஒழுங்காக ஜீரணம் செய்வதற்கு வழிமுறை தெரியவில்லை என்பதற்காக, பூமிக்கு கீழே விளையும் பொருட்களை தவறு சொல்வது எந்தவிதத்தில் நியாயம். எனவே, நாம் மேலே கூறியுள்ள சில முறைகளில் படி உணவுகளைச சாப்பிடுவதால் கண்டிப்பாக நல்ல முறையில் ஜீரணமாகும். எனவே. இனிமேல் பூமிக்குக் கீழே விளையும் உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். சிலருடைய மலத்தில் பருப்பும், கடுகு போன்ற பொருட்கள் இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது? ஒரு முழு பருப்பும், கடுகும் ஜீரணமாகாமல் வாயிலிருந்து மலம் வரை நேரடியாக பைபாஸ் வலியாக வருகிறதென்றால் இது பருப்பின் குறையா? நமது குறையா? எனவே தயவு செய்து உணவுகள் மேல் தவறு கூறாதீர்கள். இனிப்பு சாப்பிடாதீர்கள், சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். இனிப்பை ஓரமாக வைத்து விடுங்கள். உப்புச் சேர்த்துக் கொண்டால் BP அதிகமாகும் என்று கூறுகிறார்கள். உப்பை ஓரமாக வைத்து விடுங்கள். புளி சேர்த்துக் கொண்டால் மூட்டு, முழங்கால் வலிக்குமேன்கிறார்கள். இனி புளியைச் சாப்பிடாதீர்கள். பூமிக்குக் கீல் விளையும் பொருட்களைச் சாப்பிட வேண்டாமென்று கூர்ய்கிரார்கள். அதையும் ஓரமாக வையுங்கள். கத்தரிக்காய் சாப்பிட்டால் தோலில் நோய் வரும் என்கிறார்கள். கத்தரிக்காயை ஒதுக்குங்கள். தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என்று கூறுகிறார்கள். எனவே நாம் தக்காளியை ஒதுக்குகிறோம். எண்ணெய் பலகாரம், தேங்காய் சாப்பிட்டால் கொழுப்புக் கட்டிகள் வருமென்று கூறுகிறார்கள். எனவே, நாம் எண்ணெய் பலகாரம் தேங்காயையும் சாப்பிடுவது கிடையாது. ஊறுகாய் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள். ஊறுகாயும் சாப்பிடுவதில்லை. காரம் அதிகரித்தால் உடலில் நோய் வரும் என்கிறார்கள். எனவே, நாம் காரத்தையும் சேர்த்துக் கொள்வதில்லை. கசப்பு மற்றும் துவர்ப்பான பொருட்களை ஏற்கனவே நாமாக யாரும் சேர்த்துக்கொள்ளக் கூடாதென்று கூறுகிறார்கள். எனவே நாம் பலன்களையும் தொடுவதில்லை. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் கூறி சாப்பிடக் கூடாதென்று கூறுகிறார்களே நாம் எதைத் தான் சாப்பிடுவது? இப்படி மருத்துவர்கள் கூறும் ஒவ்வொரு பொருளையும், நீங்கள் ஒதுக்க ஆரம்பித்தல் கடைசியில் எதையுமே சாப்பிட முடியாது. பட்டினிக் கிடந்து நாம் உண்ணும் உணவு அனைத்தையும் தாராளமகாச சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்கிற பொருட்கள் மிக மிக குறைவு. நமது சிகிச்சையின் படி சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோய் குணமாகும். இரத்த அழுத்த நோயாளிகள் அவரவர் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதே அந்த அளவு உப்பு சாப்பிட்டால் மட்டுமே BP குணமாகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சரக்கரையைச சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வெள்ளைச் சர்க்கரை என்பது ஒரு விஷம். கரும்பாலையில் வேலை செய்யும் எவருது வெள்ளைச் சர்க்கரையை சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால், வெள்ளிச் சர்க்கரையில் (அஸ்கா), (சீனி) சல்பர், என்ற ஒரு கொடிய விஷம் கலக்கப்படுகிறது. எனவே வெள்ளைச் சர்க்கரை என்ற விஷத்தைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், உருண்ட வெல்லம், பச்சாமிர்தம், சப்போட்டா பழம், தேன் போன்ற இனிப்புகளைத் தாராளமகா நிறையாக எடுத்துக் கொள்ளலாம். அதே போல், BP உள்ளவர்கள் பொடி உப்புச் சேர்த்து கொண்டால் தான் பிரச்சனை. ஆனால் கலுஉப்பு மற்றும் இந்து உப்பு எனப்படும் பாறை உப்புகளைத் தாராளமாகச சாப்பிடலாம். அவைகள் BP யை குணப்படுத்தும். வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழக்கு சாப்பிடக்கூடதென்று கூறுவார்கள். பிரச்சினை உருளைக்கிழங்கில் கிடையாது. உருளைக்கிழங்கை ஒழுங்காக ஜீரணம் செய்யவில்லை என்றால் அது வாயுத்தொல்லை உண்டாகும், ஆனால் நாம் உருளைக் கிழங்கை எப்படிச் சாப்பிட வேண்டுமென்ற வழிமுறைகளில் ஒழுங்காகச சாப்பிடட்டால்அது வயுத்தொல்லையுக் குணப்படுத்தும். எனவே வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது (நமது சிகிச்சையின் முறைப்படி) கண்டிப்பாக வாயுத்தொல்லையைக் குணப்படுத்தலாம், கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல்நோய் வருமென்று கூறுவார்கள். உண்மையில் கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல்நோய்கள் குணமாகும். கத்தரிக்காயில் தோலுக்குத் தேவையான தாதுப்பொருட்களும், உப்புகளும் உள்ளது. கத்தரிக்காயை சரியான முறையில் ஜீரணம் செய்யாமல் சாப்பிடுவதால் கத்தரிக்காயிலுள்ள தோலுக்குத் தேவையான சத்துப்பொருட்கள் அரைகுறை ஜீரணத்துடன் இரத்தில் கலந்து அது தோலுக்குச் செல்லும்பொழுது தோலில் நோய் ஏற்படுகிறது. எனவே கத்தரிக்காயை நமது முறைப்படி நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக கத்தரிக்காயைசாப்பிட்டே தோல் நோய்களைக் குணப்படுத்த முடியும். இதுபோல எந்த நோய்க்கு எதை சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்களளோ, அதை சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக அது நமக்கு மருந்தாகச் செயல்படுகிறது. எந்தப்பொருளை நாம் சரியான ஜீரணம் பன்னவில்லையோ அந்தப் பொருளிலுள்ள தாதுப்பொருட்கள் சில குறிப்பிட்ட உருப்பிற்குச் செல்ல வேண்டியவை. எனவோ, அந்த உறுப்பில் சில நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் உலக வைதிதியர்கள் அந்த பொருளைச் சாப்பிடதீர்கள் என்று ஒரேயடியாக கூறிவிடுகிறார்கள். இதனால் நோய் பெரிதகிறதே தவிர, குறைவது கிடையாது. எனவே எந்த நோய்க்கு எதை சாப்பிட கூடாதென்று கூறுகிறார்களோ, அதைச் சாப்பிடக்கூடாதென்று பெரிய லிஸ்ட் எதுவும் கிடையாது. நாம் வழக்கமாக சாப்பிடும் அனைத்து உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். மூன்று நேரமும் அசைவ உணவும், கொத்து புரோட்டா, ஓட்டல் உணவுகள் ஆகியவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? அதே சமயம் மூன்று நேரமும் தயர் சாப்பாடு மட்டும் சாப்பிட்டு கேன்சர் வந்த நோயாளியை நிஇங்கள் பார்த்தது கிடையாதா? இயற்கை உணவு மட்டுமே சாப்பிட்டு சிறுநீரகம் கெட்டுப்போன நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? சற்று யோசியுங்கள். எதைச் சாப்பிடுகிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதே மிக மிக முக்கியம். எனவே, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் உணவின் வகைகள் வேறுவேறாக உள்ளன. எனவே இதைச் சாப்பிடக்கூடாது. அதைச் சாப்பிட வேண்டுமென்ற ஒரு கட்டுப்பாடு ஒரு குறிப்பிட்ட ஊரில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே சில காலத்தில் மட்டுமே செல்லு படியாகுமே தவிர உலக அளவில் பார்க்கும்பொழுது எதைச் சாப்பிட்டாலும் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே நமது சிகிச்சை முறையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், சரியான முறையில் ஜீரணம் செய்வதற்கான வழிமுறையில் கையாள்வது அவசியம். 12. ஐந்து வகையான உணவுகள் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் பிரிப்பதற்காக நாம் சிலவகையாகப் பிரித்துள்ளோம். முதல்வகை இயற்கையாக, சுவையாக இருக்கும். சமைக்காத உணவுகள் அனைத்து பழங்கள். தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவைகளை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் அனைத்தும் முதல் வகை உணவுகள். இதில் சுவை 1௦௦ % இருக்கும். எனவே 1௦௦ மதிப்பெண்கள். பிராண சக்தி 1௦௦ % இருக்கும், எனவே மேலும் 1௦௦ மதிப்பெண்கள். சத்துப்பொருள் 1௦௦ % இருக்கும். எனவே மீண்டும் 1௦௦ மதிப்பெண்கள். ஆகமொத்தம் முதல்வகை உணவுக்கு 3௦௦ மதிப்பெண்கள். எந்த உணவை சமைக்காலும், அதே சமயத்தில் சுவையாக பசசையாகாச சாப்பிட முடியுமோ, இவைகளனைத்தும் முதல்வகை உணவுகளில் வரும். இரண்டாவது வகை சமைக்காதா ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதராணமாக முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் மற்றும் சுவையில்லாத பலன்களும், காய்கறி வகைகளும். அதாவது இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 1௦௦% இருக்கும். எனவே 1௦௦ மதிப்பெண்கள். சத்துப்பொருட்கள் 1௦௦% இக்ருக்கும், எனவே 1௦௦ மதிப்போகள், ஆனால் சுவை இகுககாது, எனவே அதற்கு 0 மதிப்பெண்கள், எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம், உதாரணம் முளை கட்டிய தானியங்கள். மூன்றாவது வகை சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாகும். ஒரு உணவை சமைப்பாதல் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராண சக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதராணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்தும் சமைத்த உணவுகளும். நான்காவது வகை அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும், அசைவ உணவில் சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0 மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0 மதிப்பெண்கள். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 1௦௦ மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவிர வகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூல்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மீக ரீதியாக ஒரு உயிரை கொல்வது பாவம் என்ற அடிப்படையில் நமது மனதில் ஒரு எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோய் உண்டு செய்யும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாவமில்லை என்ற எண்ணத்துடன் மனதிற்கு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியான ஜீரணமாகிறது. மனதில் 50/50 சாப்பிடலாமா. வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இது அசைவத்திற்கு மட்டுமல்ல. எந்தவொரு உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நமபிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இறுதியாக அசைவ சாப்பிடுவதைத் தவிப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு. ஐந்தாவது வகை போதைப் பொருட்கள் (லாகிரி வஸ்து) இது உணவே கிடையாது. சில பொருட்கள் நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அது உணவில்லை, போதைப்பொருள். உதாரணமாக டி, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கச்சா, அபின், பாக்கு ஆகியவை இவைகளனைத்தும் உணவுப் பொருட்களே கிடையாது. போதைப் பொருட்கள் உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருட்கள். எந்த பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோ இருக்க முடியாதோ, அது போதைப் பொருட்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும். அது உணவு. சிகரெட் மட்டும் குடித்துக்கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முறியும். எனவே, அசைவம் என்பது ஒரு உணவு. கச்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப்பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப்பொருட்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப்பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்படடிக்கும் சத்துப்பொருட்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள். எனவே போதைப்பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பிட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமாக தெம்பு இருக்கும். பிறகு வலுவிழந்து நாம் காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருட்களை இந்த போதைப்பொருள் எடுத்துச செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒருபோதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப்பொருட்களைச சாப்பிடக் கூடவே கூடாது. நான் பல மருத்துவரிடம் சென்றேன், பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமகவில்லையேன்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருட்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காப்பித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம். மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்துகொண்டு நீங்கள் எந்த வகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல்வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்காட்டும். சில இயற்கை மருந்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இது எல்லோராலும் கடைப்பிடிக்க மம்வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நமது சிகிச்சையில் ஒரு சிறிய ஜடியாக உங்களுக்குத் தருகிறோம். காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். நமது உடலுக்குத் தேவையான பிராண சக்தியம், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். மதிய உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனதிற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசி கச்சி போன்ற கச்சி மற்றும் எதாவதுய் ஒரு காய்கறி பொரியலை மட்டும் எதுத்துக்கொள்ளுங்கள், இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கச்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருட்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும். சிறந்த வழியையும் கொடுக்கும். காலையில் ராஜா போல சாப்பிட வேண்டும், மதியம், மந்திரி போல சாப்பிட வேண்டும், இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிப்பீர்கள். இதுதான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி, ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனை போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகிறோம். மதியம் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு ராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை உணவுவை தயவு செய்து திருப்தியாக, நிறை, அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். மதிய உணவு அளவாக இருக்கட்டும், இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள், ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு, சூரியனும் கிடையாது, நமது உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் பெப்பம் இருக்க வேண்டும், பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு முலமாக உடலிக்கு உஷ்ணம் கிடைக்கியது, மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் பிகுகிறது, அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள், இரவில் குறைவாக சாப்பிடுங்கள். 13. எவ்வளவு சாப்பிட வேண்டும்? பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பொரிய சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும், காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும்,மதியம் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருந்துவரிடம் செல்கிறோம். குறிப்பகா தயட்டஈசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சாப்பத்தியும் ஒரு காப்புத் தயிரும் சாப்பிடுங்கள், இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், மதியம் 750 மில்லி கிராமம் சாப்பிடும் 350 மில்லி லிட்டர் குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மில்லி கிராம், மில்லி லிட்டர் பார்த்தா சாப்பிட முடியும். சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் மதியம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள், 750 மில்லி கிராம் சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள், இது சாத்தியமாகுமா? மருத்துவர்கள் நான்கு சாப்பாத்தி காலையில் சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்கள, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது வேலைக்கும் ஆள்வைத்துக் கொண்டு டிவி பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் பொன்மணியா? என்று கேட்டார்களா? டயட் எழுதி தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேளையில் அளவு, உடல் எடை, மனதில்தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம்,, ஊர், ஆகியவற்றைப் பொறுத்து உணவில் அளவு மாறும். ஒரு நாள் கட்டிட வேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள், அதே நபர் அடுத்த நாள் தனது நண்பரின் A/C காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது, அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா? உலகத்தில் எவ்வளவு பெரிய சைண்டிஷட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருந்துவராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் கடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியுமா? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது. மருந்துவர்கள் காலையில் நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் விட்டுச் சாப்பாத்தி எந்த இருக்குமென்று கேட்டார்களா? ஒரு சில வீட்டுச சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போழுது. ஒரு சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது, சரி எவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்கு சுலபாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை இரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக நீங்கள் இருந்தால் கவனத்தை இட்லியின் மேலும், இத்ளியிலுள்ள சுவையின் மீது கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம். கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும்பொழுது நமக்கு அளவு தெரியும், கவனத்தை செல்போநிலோ, டீவியிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும்பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது. எனவே நமது சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மில்லிகிராம், கிலோ கிராம், தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனதிற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாக பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்கதீர்கள். உங்கள் மனதிற்குப் பிடித்த அளவு ஆசை தீர சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது. எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப்பு சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள் மீண்டும் கேட்கும் மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும், அந்த நாயை வா, வந்து சாப்பிடு என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று. மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் இரசித்து, ருசித்து சாப்பிடுகிறது மனிதன் பசிக்காமல். ருசிக்காமல் சாப்பிடுகிறான். எனவே, நமது சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். இரசித்து. ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் யார், யார் வீட்டில் ௮0 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாகஇருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனசுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது, எனவே சுவையைப் பற்றியும். உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைபிடிக்க வேண்டாம். 14. காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில் இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல நோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீல் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கிழே இரத்த ஒட்டம் குறைவாக, இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமாக உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப போட்கள் சம்மனங்கால் போட்டு அமர்ந்திருத்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதை தவிருங்கள். குறிப்பகா சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகி விடும். ஏனென்றால்இடுப்பிக்கு கீழேஇரத்த ஒட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஆனால், இப்பொழுது பல நபர்கள் காலை மடக்கி உட்கார முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக்காரணம் என்னவென்றால் நாம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம். அது மலம் கழிக்கும் பொழுது, யாருடையை வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமருமாறு கக்கூஸ் இருக்கிறதோ அவர்களுகும் மூட்டு சம்மந்தப்பட்ட எந்த வழியும் வருவதில்லை. ஆனால் யுரோப்பியன் கக்கூஸ் உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு முழங்காலில் வழியும் அது சம்பந்தப்பட்ட நோயும் வருகிறது. ஏனென்றால் இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது. முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது சிறு குழந்தைகள் கூட யுரோப்பியன் கக்கூஸை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மனங்கால போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே தயவுசெய்து யுரோப்பியன் கக்கூசைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பாம்பே கக்கூஸைப் பயன்படுத்துங்கள். இப்படிப் பயன்படுத்தும் பொழுது குறைந்த பட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதை போல் இருக்கும். எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மனங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிநி டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்தச் சேரில் காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அனைருக்கும் வரும் மூட்டு தேய்மானம், மூட்டு வலி இதற்கு அடிப்படைக் காரணம் காலை தொங்கப்போட்டு அமர்ந்து தான். எனவே இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் மூட்டு வழியும் கால் வழியும் வராது. வாழ்வோம் ஆரோக்கியமாக ! 15. குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது. நான் பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். குளித்தவுடனே சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. குளித்தபின் குறைந்த பட்சம் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு தான் சாப்பிட வேண்டும். அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தான் குளிக்க வேண்டும். நமது உடல் 24 மணி நேரமும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், செல்களும் (9௮.௪) டிகிரி பாரென்ஹீட் வெப்ப நிலையில் (370 Centigrade) இருக்கும். நாம் குளிர்ச்சியான ஒரு நாட்டிற்கு சென்று அங்கே 10 0 வெப்ப நிலை இருந்தாலும் நமது உடலில் தெர்மா மீட்டர் வைத்து அளந்து பார்த்தால் நமது உடலில் 37 டிகிரி தான் இருக்கும். அதே சமயம் சூடான ஒரு நாட்டிற்கு சென்று 50 டிகிரி 60 டிகிரி வெப்பம் இருக்கும் போது நமது உடலில் தெர்மா மீட்டர் வைத்து சேர்த்துப் பார்த்தால் நமது உடலில் 37 டிகிரி இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் மனித உடலில் வப்ப நிலை 37 டிகிரி சென்டிகிரேட் (9௮.௪ டிகிரி பாரென்ஹீட்). உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் இதே வெப்ப நிலை தான். ஆடு, மாட்டு, கோழி [போன்ற உயிரினங்களுக்கும் ஒவ்வொரு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் ஒவ்வொரு வெப்பநிலை இருக்கும். எனவே தான் சில மிருகங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே மனிதனின் உடல் வெப்ப நிலை 37 டிகிரி. நாம் குளிர்ச்சியான இடத்திலோ அல்லது வெப்பம் அதிகம் உள்ள இடத்திலோ இருந்தாலும் நமது உடலில் உள்ள Triple Warmer என்ற உடல் உறுப்பின் வேலை என்னவென்றால் நமது வெப்பத்தை சீராக 37 டிகிரி வைப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டே இருக்கும். எனவே நம் குளிக்கும் பொழுது அது சாதாரண தண்ணீர் அல்லது சுடு தண்ணீர் எதுவாக இருந்தாலும் அது உடம்புக்கு மட்டும் அல்லது தலைக்கு குளித்தாலும், ஆற்றிலோ, குளத்திலோ, பாத்ருமிலோ இப்படி எதுவாக இருந்தாலும், குளித்தால் நமது உடலில் வெப்ப நிலை மாறுபடுகிறது. வெப்பநிலை மாறியவுடன் உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பானது உடனே வேலை செய்து நமது உடலில் மீண்டும் 37 டிகிரி கொண்டு வருவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். இப்படி உடல் வெப்ப நிலையை சரிசெய்துக் கொண்டிருக்கும் பொழுது நமது உடலில் ஜீரணம் உறுப்புகளுக்கு சக்தி கிடைக்காது. எனவே குளித்தவுடன் சராசரியாக ஒரு ௪5 நிமிடங்களுக்கு நமது உடலில் Triple Warmer வேலை செய்வதால் நமது உடலுக்கு ஜீரண சுரப்பிகள் வேலை செய்வது கிடையாது. எனவே தயவு செய்து குளித்த உடனே சாப்பிடாதீர்கள். குளித்து முடித்தவுடன் ஒரு 25 நிமிடம் காத்த்திருந்து பிறகு சாப்பிட்டுங்கள். நீங்களே இதை சோதனை செய்யலாம். குளித்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள். அன்று வயிறு கடினமாகவும், அசௌகரியமாகவும் இருக்கும். அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே குளிக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் சாப்பாடு குறைந்த பட்சம் ஜீரணமாகி ரத்தமாக மாறுவதற்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது.ஒரு சிலருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஜீரணமாகும். ஒரு சிலருக்கு ஐந்து மணி நேரமாகும். சுமாராக சராசரியாக இரண்டரை மணி நேரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சாப்பிட்டவுடனே அரை மணி நேரத்தில் குளித்தால் உடனே உடலில் உள்ள உடல் வெப்பகட்டுப்பாட்டு உறுப்பு உடல் வெப்பத்தைச் சரி செய்ய ஆரம்பிக்கும். அப்போது நமது உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்புக்கு மட்டுமே செலவாகுமே தவிர ஜீரண சுரப்பிகளுக்கு கிடைக்காது. இதையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கலாம். சாப்பிட்ட உடனே ஒரு நாள் குளித்துப் பாருங்கள். அன்று ஜீரண கோளாறு ஏற்படும். வயிறு மந்தமாக இருக்கும். தலைவலி வரும். எனவே சாப்பிட்டால் தயவு செய்து இரண்டரை மணி நேரத்திய்க்கு குளிக்க வேண்டாம். எனவே சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது. குளித்த பிறகு உடனே சாப்பிடக் கூடாது. குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். சிலர் எனக்குப் போன் செய்து கேட்கிறார்கள் நான் காலை எட்டு மணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுவேன். 9 மணிக்கு நான் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இந்த நிலைமையில் நான் எப்படி குளித்த பிறகு 25 நிமிடம் காத்திருப்பது என்று கேட்கிறார்கள். ௮ மணி வரை சோம்பேறித்தனமாக தூங்கியது உங்கள் தவறு. நமக்குத் தேவை என்றால் நாம் சீக்கிரம் எழுந்திருக்க ஆக வேண்டும். 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்று உங்கள் உடம்பிற்குத் தெரியாது. நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அது உடலுக்குத் தெரியாது. உடலுக்கு ஒரு சில விதி முறைகள் உண்டு. எனவே தயவு செய்து எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றுவதற்கு நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள். 16. சாப்பிடும்பொழுது ஏப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எப்பத்தில் பல வகைகள் உள்ளன. 1.பசி ஏப்பம், 2. ஜீரண ஏப்பம், 3. அஜிரண ஏப்பம். பசி எடுக்கும் பொழுதும் நமக்கு ஏப்பம் வரும். ஏனென்றால் வயிற்றில் பசி எடுக்கும் பொழுது ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலத்திற்கு ஏதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிறிது நேரம் இந்த அமிலம் காத்திருக்கும். அமிலம் சுரந்து சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலம் நீர்த்துப்போக ஆரம்பிக்கும். அப்பொழுது அமிலம் நீர்த்துப் போய் அது ஏப்பமாக வெளி வரும். எனவே இது பசி ஏப்பம் ஆகும். பசி எடுக்கும் பொழுது சாப்பிடுவதற்கு முன்பாக ஏப்பம் வந்தால் நம் வயிறு நம்மை எசரிக்கிறது. உடனே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது என்று புரிந்துக் கொண்டு உடனே நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிட வேண்டும். உடனே சாப்பிட முடியாதவர்கள் ஏதாவது பழங்களைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்திற்குப் பசியைத் தள்ளி போடலாம். இனி கண்டிப்பாக ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நம்மால் சாப்பிட முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது அரை லிட்டர் சோம்பு தண்ணீரை குடித்து அந்த ஆசிடை நாமே அனைத்து விட்டால் நமக்கு அல்சர் என்ற நோய் வருவதற்கு வாய்ப்பில்லை எனவே பசி எடுத்தால் ஒரு ஏப்பம் வரும். அந்த எப்பத்தைப் புரிந்த கொண்டு உடனே சாப்பிட வேண்டும். அல்லது நிறைய நீர் குடித்து நம் வயிற்றைக் காப்பாற்ற வேண்டும். சாப்பிடும்பொழுது ஏப்பம் வரும். இந்த எப்பத்தின் பொருள் நாம் நன்றாக சாப்பிட்டதால் ஒழுங்காக ஜீரணம் ஆகிறது என்று பொருள். எ[அப்பொழுது வரும் எப்பத்திற்கு காரணம் என்னவென்றால் வயிற்றின் மேலே ஒரு கதவும் கீழே ஒரு கதவும் இருக்கும். வாயில் சாப்பிடும் சாப்பாடு உணவுககுழாய் வழியாக வயிற்றின் உள்ளே நுழைவதற்கு ஒரு கதவு இருக்கும். இந்தக் கதவு உணவு உள்ளே சென்றவுடன் மூடி விடும். சாப்பிட்ட பின் தலைகீழாக நிற்கும் பொழுது உணவு வாய் வலியாக வெளியே வராமல் இருப்பதற்கு இந்தக் கதவு தான் காரணம். இந்தக் கதவு உணவை உள்ளே மட்டுமே செளித்தும். மீண்டும் வெளியே செலுத்தாது. சில ஆபாத்துக் காலங்களில் வாந்தி வரும் பொழுது மட்டுமே அது திருக்கும். அதே போல் வயிற்றுக்குக் கீழே முடிவில் வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குச செல்ல ஒரு கதவு உள்ளது. இந்தக் கதவும் உணவை கீழ் நோக்கி மட்டுமே அனுப்பும். மேல் நோக்கி அனுப்ப அனுமதிக்காது. நம்மில் சிலருக்கு சாப்பிடும்பொழுதே ஏப்பம் வரும். இதன் காரணம் வயிற்றின் கீழே உள்ள கதவு திறந்து நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக ஜீரனமாகிய பிறகு அது வயிற்றிலிருந்து சிருகுடளுக்குத் தள்ளப்படும் பொழுது வயிற்றில் ஒரு காளியிடம் உருவாகும். உந்த காலியிடத்தை நிரப்புவதய்காக வயிற்றுக்குக் காற்று தேவைப்படும். அந்தக் காற்றை வாய் வழியாக உறிஞ்சுவதய்காக வயிற்றின் மேற்பக்க கதவு திறந்து காற்றை உள் வாங்கும். இந்த சப்தம் தான் ஏப்பம். நாம் சாப்பிடும்பொழுது சாப்பிட, சாப்பிட ஏப்பம் வந்தால். நாம் நன்றாக ஒழுங்காக மறையாக சாப்பிடுகிறோம் என்று பொருள். எனவே சிலருக்கு நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்ப்பார்கள். இவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைத் தெளிவு படுத்துகிறோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏப்பம் வந்தால் நம் வயிறு சாப்பாடு போதும் என்று சொல்கிறது என்று பொருள். உணவே சாப்பிடும்பொழுது ஏப்பம் வந்தால் நாம் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். ஆனால் முதல் ஏப்பம் வந்தவுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்று நாம் ஏற்கனவே டி.வி. டிகளில் கூறியிருப்போம். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் எய்படுகிறது. சிலருக்கு குறைந்த அளவு சாப்பிட்டவுடனேயே ஏப்பம் வந்து விடுகிறது. ஆனால் மீதும் ஒரு மணி நேரத்திய்குப் பிறகு அவர்களுக்குப் பசி ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் அப்பொழுது மறுபடியும் சாப்பிடுவது கிடையாது. நமது சிகிச்சையில் முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தி விட வேண்டும் என்றும் பசி எரித்தால் சாப்பிட வேண்டும் என்று இரண்டு விதிகள் உள்ளது. முதல் ஏப்பம் வந்தால் சாப்பாட்டை நிறுத்தி விட்டால் கண்டிப்பாக மீண்டும் பசித்தால் சாப்பிட வேண்டும். ஆனால் பலர் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் மறுபடியும் பசி எடுத்தால் சாப்பிடுவது கிடையாது. எனவே முதல் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விட வேண்டும் என்ற விதி வீட்டிலேயே இருக்கும், நினைத்தால் சாப்பிடக் கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டுமே தயவு செய்து பயன்படுத்துங்கள். ஒரு சிலர் வேலைக்குச் செல்பவர்கள் காலை எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் ஏப்பம் வந்துவிடும். உடனே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் 12 மணிக்கு நன்றாகப் பசிக்கும். ஆனால் அவர்களுக்கு 2 மணிக்குத்தான் உணவு இடைவேளை கொடுப்பார்கள். இந்த நிலையில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கீழே கூறியுள்ள இரண்டு முறைகளில் உங்களுக்கு எது சாத்தியப்படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றுங்கள். 1. முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்த வேண்டும். ஆனால் பசி எடுத்தால் உடனே கண்டிப்பாக மீண்டும் சாப்பிட வேண்டும். 2. எப்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தாமல் உங்களுக்கு மனதிற்குப் பிடித்தது போல ஆசை தீர சாப்பிடுங்கள்.ஆனால் மறுபடியும் பசிஎடுக்கும் வரை காத்திருந்து மீண்டும் அடுத்து வேளை உணவைச் சாப்பிடவேண்டும். சிலருக்கு சாப்பிடபின் ஒருமணிநேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து ஏப்பம் வரும். இதற்குக் காரணம் அஜீரணம். அதாவது வயிற்றுக்குச் சென்ற உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல மணி நேரங்களாக வயிற்றில் இருந்து புளித்துகெட்டுப் போய் அதிலிருந்து வரும் கெட்ட காற்று தான் இந்த எப்பத்திற்கான காரணம். இது புளித்த ஏப்பம். எனவே யாருக்குப் புளித்தஏப்பம் வருகிறதோ நீங்கள் உணவை ஒழுங்காக சாப்பிடவில்லை என்று புரிந்து கொண்டு தயவு செய்துஇனிமேல் ஆரோக்கியமாக! 17. அம்மா தன் குழந்தையுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. எப்பொழுது ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜிரனமாவது கிடையாது. என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய்மார்கள் கேட்பீர்கள். ஒரு அம்மா தன் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது அவர் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார் .குழந்தையை அதட்டுவார்.சாப்பிடும் போது பேசாதே. கறிவேப்பிலையைச் சாப்பிடு. ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு.சட்னி தொட்டுக் கொள், கீழே கொட்டதே இப்படி அந்தத் குழந்தையைக் கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு ஒரு தாய் தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும். அனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினிகளுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்.எனவே ஒரு தாய் தன் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இவர்களும் சாப்பிடுவார்கள்.அப்படிச் சாப்பிடக் கூடாது. சில குழந்தைகள் நாம் சாப்பிடும் போது பக்கத்தில்வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். அப்பொழுது அந்தக்குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டோ அல்லது விரட்டிக் கொண்டோ மிரட்டிக் கொண்டோ அதட்டிக் கொண்டோநீங்கள் சாப்பிடும் பொழுது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே கைகுழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவது கொடுத்து விட்டுச்சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக! 18. சாப்பிடும் உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனித்துப் பாருங்கள்.அதில் உப்பு,காரம் இருக்கும். அனால் இனிப்பு,கசப்பு, துவர்ப்பு பொதுவாக நாம் சேர்த்துக் கொல்வதேல்லை.ஏற்கனவே நாம் பார்த்துருக்கிறோம். ஒவ்வொரு சுவைக்கும் ஒரு துணை உறுப்புக்கும் முகத்தில் உள்ள உறுப்புக்கும் ஒரு உணர்ச்சிக்கும் சம்மந்தம் உள்ளது என்பதை, சுவை மருத்துவத்தில் நாம் தெளிவாகப் பார்த்திருக்கிறோம்.அந்த அடிப்படையில் உப்பு,புளி,காரம் மட்டுமே உள்ள உணவை ஒருவர் சாப்பிடும் பொழுது இந்த மூன்று சுவைக்கு வேலை செய்யும் ஆறு உறுப்புகள் மட்டுமே உடலில் வேலை செய்யும்.இனிப்பு,கசப்பு, துவர்ப்பு சாப்பிடாததால் இனிப்புக்கு இரைப்பையும்,மண்ணீர்லும்,கசப்பு, துவர்ப்புக்கு இருதயம்,இருதயத்தின் மேலுறை, உடலில் வேப்பக்கட்டுப்பாட்டு உறுப்பு, சிறுகுடல் ஆகிய நான்கு உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யாது.நாம் சாப்பிடுகிற உணவில் முதலில் வயிற்றுக்குச் செல்கிறது. அங்கே ஒரு மணி நேரம் இருக்கிறது. நாம் இனிப்புச் சாப்பிடாததால் வயிற்றுக்குத் தேவையான சக்தி கிடைக்காததால் வயிறு ஒழுங்காக ஜீரணம் செய்வது கிடையாது. அடுத்த ஜீரண உறுப்பு சிறுகுடல். இந்தச் சிறுகுடலுக்கு கசப்பு, துவர்ப்பு சரியாகக் கிடைக்காததால் அதுவும் சக்தி இழந்து ஜீரணம் சரியாக செய்வதில்லை. இப்படி ஜீரணத்திற்கு தேவையான இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளை நாம் சாப்பிடாமல் இருப்பதால் தான் நமக்கு ஜீரண சக்தி குறைவாக உள்ளது. சில கலாங்களுக்கு முன்பு இனிப்பை தாராளமாகச் சாப்பிட்டு வந்தோம். அனால் சில மருத்துவர்களின் தவறான கருத்துப்படி இனிப்பு சாப்பிட்டால் சக்கரை நோய் வரும் என்று கூறியதால் நாம் யாரும் இப்பொழுது இனிப்பைச் சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையிலேயே இனிப்பிற்கும் சக்கரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சக்கரை நோயைப் பற்றிக் கூறும் பொழுது தெளிவாகப் பார்த்து விட்டோம். எனவே இனிப்பை தாரளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கசப்பு, துவர்ப்பு யாருக்கும் பிடிக்காததால் அதைச் சாப்பிடுவதில்லை. ஜிரணத்திற்கும்நம் உடலுக்கு முக்கிய தேவை கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் தான் காரணம். எனவே இனிமேல் நம் உணவில் ஒவ்வொரு நேரம் சாப்பிடும் பொழுது இனிப்பு,கசப்பு, துவர்ப்பு,உப்பு,புளி,காரம் ஆகிய ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்வதால் நமது ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உணவை மருந்தாக மாற்ற முடியும். ஒரு சில நாடுகளில் இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய மற்றும் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். உப்பு,புளி,காரத்தை சேர்த்துக் கொள்வதில்லை. ஒரு சில நாடுகளில் உப்பு,புளி,காரம் மட்டுமே சாப்பிடுகிறார்கள். இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. இப்படி ஒவ்வொரு நாடுகளிலும் சில சுவைகளை சேர்த்துக் கொள்கிறார்கள்,சில சுவைகளை சேர்த்துக் கொள்வதில்லை.இது தான் நோயின் அடிப்படைக் காரணம். எனவே நாம் உண்ணுகிற உணவில் ஒவ்வொரு வேளை சாப்பிடும் பொழுது அறுசுவை உணவைச் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உப்பு,புளி,காரம் இருக்கிறது. இனிப்புக்கு ஏதாவது ஒரு இனிப்புப் பலகாரம் அல்லது இனிப்பான பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை சர்க்கரையால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக அச்சு வெல்லம்,உருண்டை வெல்லம்,பனங்கருப்பட்டி ,தேன்,பஞ்சாமிர்தம்,எல்லா வித பழங்களும் எடுத்துக்கொள்ளலாம். எனவே இனிமேல் நாம் சாப்பிடுகிற உணவில் ஏதாவது ஒரு இனிப்பைச் சேர்த்துக் கொள்வது ஜீரணத்திற்கு உதவி செய்ய முடியும். நாம் பொதுவாகக் கசப்பு,துவர்ப்பைச் சேர்த்துக் கொள்வதேயில்லை. கசப்பு, துவர்ப்பு சுவையை சாப்பிடுவதால் இதயம் பலமாகி நமக்குத் துணிவையும், தைரியத்தையும் கொடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகிறது. மற்றும் உடலின் உள்ள அனைத்து நோய்களையும் குனபடுத்துகிறது.எனவே இனிமேல் நமது உணவில் கசப்பு மற்றும் துவர்ப்பு மற்றும் சேர்த்துக் கொள்வோம். கசப்பைச் சேர்த்துக் கொள்வதற்கு எளிய வழி வாரம் இரண்டு முறை பாகற்காய் பொரியலைச் சாப்பிடலாம். பாகற்காயை வறுத்து சாப்பிடக் கூடாது. வேக வைத்துச் சாப்பிட வேண்டும். கீரை சாப்பிடுங்கள் என்று ஏன் எல்லா வைத்தியர்களும் கூறுகிறார்கள் என்றால் எல்லா கீரைகளிலும் கசப்பு,துவர்ப்பு நிறைய உள்ளது. நீங்கள் கசப்பிற்கும் துவர்ப்பிற்கும் தனித்தனியாக பொருளைத் தேடி அலைய வேண்டாம். கசப்பு உள்ள எல்லா பொருள்களிலும் துவர்ப்பு இருக்கும். துவர்ப்பு உள்ள எல்லா பொருள்களிலும் கசப்பு இருக்கும். எனவே கீரை வகைகளை முடிந்த வரை அதிகபடுத்திக் கொள்ளுங்கள். சுண்டக்காய், சுக்கிடிக் கீரை, பாவக்காய் வத்தல்,நார்த்தாஙகாய் உறுகாய் அல்லது ஒரு சாதாரண எலுமிச்சம் துண்டு ,எலுமிச்சம் பழம் தோல், வேப்ப இலை, வேப்பம்பூ இப்படி கசப்பான சுவையுள்ள பொருள்கள் நிறைய இருக்கிறது.இதில் ஏதாவது ஒன்றை நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றால் வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கொண்டால் அது நமது நாக்கிற்கு மிகுந்த கசப்பு துவர்ப்பைக் கொடுக்கும்.எனவே வெந்தயத்தைஅளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.வெந்தயம் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. பழைய படங்களில் பார்த்தால், ராஜா காலத்துப் படங்களில் விருந்து எப்படி இருந்தது என்று கூறுவது போலவும்,அறுசுவை உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதைப் புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் பழங்காலத்தில் அறுசுவை உணவுகளை சாப்பிட்டு நோய்களை வேரட்டியடித்தார்கள். அனால் இன்று நாம் சுவைகளைப் பார்த்து பயப்பட்டு நோய்களை வரவேற்கிறோம். எனவே தயவு செய்து ஒவ்வொரு வேளை உணவிலும் அறுசுவை இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்த்து எந்தச் சுவை இல்லையோ அந்தச் சுவையை சேர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.இந்த விஷயத்தைக் கேள்விபட்டு பல பேர் அறுசுவை உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். அனால் சில நேரங்களில் நம்மால் அறுசுவை உணவைச் சாப்பிட முடியாது. ஒரு வேளை உங்களுக்கு அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்பதால் அறுசுவை உணவு கிடைக்கவில்லையே என்ற வருத்ததுடனோ அல்லது அறுசுவை சாப்பிடாவிட்டால் அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் ஒரு மாதத்திற்கு தொண்ணுறு முறை நாம் உணவு உட்கொள்கிறோம். இதில் ஆரம்பத்தில் முடிந்தவரை மாதத்தில் பத்து முறையாவது அறுசுவை உணவைச் சாப்பிட முயற்சி செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் நாம் அறுசுவை சாப்பிட இயலாது. எனவே முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். ஒரு வேளை முடியாவிட்டால் முடியவில்லையே என்ற கவலையுடன் சாப்பிடாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். ஒவ்வொரு வேளையும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நெல்லிக்கனியில் மட்டுமே ஆறு சுவை ஒன்றாக அமைந்துள்ளது.எனவே முடிந்தால் ஒவ்வொரு நேரமும் சாப்பிடும் பொழுது ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நேரமும் நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஒரு சில நேரத்தில் நெல்லிக்காய் திகட்ட ஆரம்பித்து விடும். எனவே ஒரு நாள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இளநீரில் ஆறு சுவைகள் உள்ளன. இளநீரை குடிக்கும் பொழுது ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி குடிக்க கூடாது. வாயில் வைத்து சுவையை இரசித்து குடித்தால் அந்த அறுசுவையும் நாக்கு வழியாக உடலுக்குள் புகுந்து மருந்தாக வேலை செய்கிறது. எனவே நாம் சாப்பிடுகிற உணவில் அறுசுவை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு ஒவ்வொரு வேளையும் அறுசுவை சாப்பிடுவது மூலமாக நமது உணவை நன்றாக ஜீரணம் செய்ய முடியும். நமது சிகிச்சை முறையைக் கற்றுக் கொண்ட சில பேர் அறுசுவை உணவைச் சாப்பிட வேண்டும் என்ற இந்த டெக்னிக்கை அறுசுவை பொடி சாப்பிட வேண்டும் என்று தவறாகப் புரிந்து கொண்டு உள்ளார்கள். நீங்கள் யாராவது அறுசுவைப் பொடிகளை வாங்கிச் சாப்பிட்டு வந்தால் அது பலன் அளிக்காது. இயற்கையாக உணவில் அறுசுவை இருக்கும்.எனவே உணவில் அறுசுவை இருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு செயற்கை முறையில் செய்த அறுசுவை பொடிகளைத் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். 19. சுவைகளை ரசித்து,ருசித்துச் சாப்பிட வேண்டும் நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. இந்த சுவை நாக்கால் மட்டுமே ஜீரணிக்க முடியும். வயிற்றுக்குச் சுவையை ஜீரணிக்கத் தெரியாது. எனவே ஒரு உணவை வாயில் வைத்தவுடன் அதில் சுவை நிறையாக இருப்பது தெரிகிறது. நாம் மெல்ல மெல்ல அந்தச் சுவை காணாமல் போய் விடுகிறது. அப்பொழுது நாம் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அந்தச் சுவையைக் கிரகித்து சக்தியாக மாற்றுகின்றன. சுவையை ரசிக்காமல், ருசிக்காமல் ஒரு வேளை விழுங்கினால் அந்த சுவை வயிற்றால் ஜீரணிக்க முடியாது.ஏனென்றால் வயிற்றுக்குச் சுவையை ஜீரணம் செய்யத் தெரியாது. பொருளை மட்டுமே ஜீரணம் செய்யத்செய்ய தெரியும்.நாக்கால் ஜிரணிக்கப்பட முடியாத ஒரு சுவை மலமாக மட்டுமே போகும். எனவே உணவில் உள்ளச் சுவைகளைச் சக்தியாக மாற்ற வேண்டும் என்றால் ஒரு உணவில் உள்ள அனைத்து சுவைகளையும் ரசித்து, ருசித்து அந்த சுவை சப்பை ஆகும் வரை சுவையற்றுப் போகும் வரை வாயில் வைத்திருக்க வேண்டும்.நாம் ஒரு உணவை விழுங்குவதற்கு முன் சுவை கண்டிப்பாக இருக்க கூடாது.இப்படி சுவைத்துச் சாப்பிட்டால் சுவை மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியும்,பொருளினால் உருவாகும் பிராண சக்தியும் இரண்டு பிராண சக்திகள் நமக்குக் கிடைக்கும். எனவே உணவைச் சாப்பிடும் பொழுது மென்று சுவைத்து முழுவதும் சுவையற்ற பிறகே விழுங்க வேண்டும். வாழ்வோம் ஆரோக்கியமாக! 20. எந்தந்தெந்தச் சுவைவை எவ்வளவு சாப்பிட வேண்டும் பலருக்கு ஒரு சந்தேகம்.எனது உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதித்துள்ளன? எனக்கு எந்தச் சுவை வேண்டும்,வேண்டாம் நான் எந்தச் சுவைவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள்.உங்களுக்கு எந்தச் சுவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை உலகத்தில் யாராலும் கூற முடியாது.உங்களுக்கும் தெரியாது . வேறு எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் நமது உடலில் நாக்கு தான் டாக்டர். சுவை தான் மருந்து.எனவே உங்கள் நாக்கிற்கு மட்டுமே தெரியும்.எனவே ஒவ்வொரு வேளையும் இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள். உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேள்கிறதோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல் அனைத்து சவகளுக்கும் இதே டெக்னிக்கை கடைபிடியுங்கள்.அதாவது ஒரு திருமண வீட்டில் விருந்தில் சாப்பாடு.குழம்பு,மோர், பாயாசம்,இரண்டு பொறியல்கல்,கூட்டு,அப்பளம்,வடை இப்படி ஒரு பதினைந்து வகை பொருள்கள் வைத்திருப்பார்கள்.நீங்கள் நன்றாக வேடிக்கை பாருங்கள். ஒரு சில பேர் பொரியலைச் சாப்பிட்டிருப்பார்கள். ஒரு சிலர் ஒரு பொரியலைத் தொட்டிருக்க மாட்டார்கள்.இதற்குக் காரணம் என்னவென்றால் ஒவ்வொருத்தருடைய வேலையும்,ஒவ்வொருத்தருடைய உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களும்,உடலில் தேவைப்படும் சக்திகளும் வேறுபடுவதால் அவரவர்ககுக்கு வேறு வேறு சுவை தேவைப்படுகிறது. எனவே நீங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். பலவிதமான உணவுகளைப் பலவிதமான சுவையுடன் சுவைத்துச் சாப்பிட ஆரம்பியுங்கள். படிக்கவில்லையேன்றால் சாப்பிடாதீர்கள். எனவே உங்கள் நாக்கு எவ்வளவு சுவையைக் கேட்கிறதோ அவ்வளவு சுவையைச் சாப்பிட்டால் உங்கள் உடலில் நோய்கள் குணமாகி ஆரோக்கியமாக இருப்பீர்கள் . 21. உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும் நமது முன்னோர்கள் சாப்பிடும் பொழுது முதலில் இலையில் இனிப்பான பொருளை வைத்திருந்தார்கள்.ஏனென்றால் இனிப்பு என்ற இரைப்பையையும், மண்ணிரலையும் வேலை செய்ய வைக்கும் சக்தி என்று பார்த்தோம். நாம் சாப்பிடுகிற உணவை முதலில் இரைப்பையையில் சென்று விழுகிறது . எனவே இரைப்பைக்கு சக்தியைக் கொடுக்கும் இனிப்பை முதலில் சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலர் உணவைச் சாப்பிட்டு பிறகு கடைசியாக இனிப்பைச் சாப்பிடுவார்கள். அதை விட சிறந்தது முதலில் இனிப்பைச் சாப்பிட்டு,பிறகு சாப்பிட ஆரம்பிப்பது.எனவே எப்பொழுது சாப்பிடும் பொழுதும் முதலில் இனிப்பை சாப்பிட ஆரம்பியுங்கள். அதற்காக சர்க்கரைப் பொங்கலை இரண்டு கரண்டி வைத்து முழு சர்க்கரைப் பொங்கலையும் முடித்து விட்டுப் பிறகு மற்ற பண்டத்தைச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள். முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள். பிறகு மற்ற எல்லா சுவைகளையும் சாப்பிட்டு விட்டு நடுவில் தேவைப்பட்டால் மீண்டும் இனிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாகவும் இனிப்பை சாப்பிடலாம்.இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு முறை. அவ்வளவு தான். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. மீண்டும்? ஞாபகப்படுத்துகிறேன். பலர் இந்த எல்லா முறைகளையும் படித்து விட்டு ஒவ்வொரு வேளையும் கஷ்டப்பட்டு இந்த முறைகளைக் கையாள வேண்டாம். ஒரு சில நேரத்தில் சில முறைகளைக் கையாள முடியும் அல்லது கையாள முடியாது.எனவே கவலை படாமல், பயப்படாமல் சாப்பிடுங்கள். முதலில் இனிப்பு எடுக்கவில்லையே என்ற எண்ணத்துடன் சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் கவலைப் படாமல் தைரியமாக சாப்பிடுங்கள்.வாழ்வோம் ஆரோக்கியமாக ! 22. பல் இல்லாத நபர்கள் எப்படி மென்று சாப்பிடுவது? பல் இல்லாதவர்கள் கடினமான உணவுகளைச் சாப்பிடவே கூடாது. பிறந்த குழந்தைக்குக் பல் இல்லை என்பதால் அந்தந் குழந்தைகளுக்குக் கடினமான உணவைக் கொடுக்கிரிர்களா? பால், தண்ணீர்,இளநீர் போன்ற நீராகாம் மட்டும் தானே கொடுக்கிறீர்கள். பல்லில்லாத குழந்தைகளுக்கு ஒரு நியாயம்? பல்லில்லாத பெரியவர்களுக்கு இன்னொரு நியாயமா? பல் இருக்கும் நபர்களே உணவை ஒழுங்காக மெல்லாமல் சாப்பிட்டு நோய்கள் வரும் பொழுது,பல்லே இல்லை என்றால் நீங்கள் எப்படி மெல்ல முடியும்? அந்த உணவு எப்படி ஜீரணமாகும்? எனவே பல் இல்லாதவர்கள் நீராகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும். உதாரணமாக பழச்சாறு. எல்லா வகை பழச்சாறும் சாப்பிடலாம். இளநீர்,கஞ்சி,கூழ் இப்படி கடினமால இல்லாமல் நீராகாராமாக உள்ள பொருளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் மெதுவாக டீ சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டுமே தவிர கட கட என்று விழுங்கக் கூடாது, குடிக்கக் கூடாது. ஒரு வேளை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உங்கள் கைகளிக் கொண்டு நன்றாகப் பிசைந்து பல் செய்யும் வேலையை உங்கள் கைக்குக் கொடுக்க வேண்டும். பிறகு வாயில் வைத்து உடனே விழுங்கக் கூடாது. சிறிது நேரம் அடக்க வேண்டும். பல் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பதினைந்து முறை மென்று அதன் பிறகு விழுங்க வேண்டும். அப்பொழுது தான் அந்த உணவில் எச்சில் கலக்கும். நாக்கு சுவையை ரசிக்கும். மேலும் சில கடினமான பொருளைச் சாப்பிட வேண்டும் என்றால் சட்டியில் கீரையை வைத்து பருப்பு மத்தால் வைத்து (கடைந்து நாம் கீரையை சாப்பிடுவோம்). கீரை கடைவதை போல உங்கள் உணவை பருப்பு மத்தால் கடைந்து பிறகு நீங்கள் சாப்பிடலாம். புரோட்டா போன்ற மிகவும் கடினமான பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் சாப்பிடும் பொழுது மிக்சியை வைத்து அதில் புரோட்டாவையும் குரமாவையும் இட்டு இரண்டு நிமிடம் மிக்சியில் கூழ் செய்து அதை நீங்கள் சாப்பிடலாம். ஆக மொத்தம் பல் இல்லாதவர்கள் பல்லின் வேலைகளை கையிற்கோ, பருப்பு மத்திற்கோ, அல்லது மிக்சிக்கோ கொடுத்து அந்த வேலையை முடித்த பிறகு வாயில் அடக்கி வைத்து எச்சில் கலப்பதையும் சுவையை ரசிப்பதையும் செய்து விட்டு பின்புதான் விழுங்க வேண்டும். 23. ஒரு குறிப்பிட்ட சுவைக்கு அடிமையானவர்கள் எப்படி வெளியே வருவது ? ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட சுவையை மட்டும் எனக்குப் பிடித்திருக்கிறது என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டு வருவார்கள். அதாவது ஒரு சில சுவைக்கு நாம் அடிமையாகி இருக்கிறோம். இதற்குக் காரணம், செயற்கையான உணவுகள். இயற்கையான ஒரு உணவில் சுவைக்கு அடிமையாகும் எந்தவொரு கெமிக்கலும் கிடையாது. ஆனால் பாக்கெட்டில் அல்லது டப்பாவில் வாங்கும் பொருள்களில் அந்த உணவுப் பொருள்களின் நிறுவனங்கள் நாக்கை அடிமைப்படுத்துவதற்காக சில கெமிக்கலைச சேர்க்கிறார்கள். எனவே நாம் அந்தச் சுவைக்கு அடிமையாகிறோம். பிஷ்கடஷ், கூல்டிரிங்ஸ், அஜினமோட்டோ, மிக்சர் இப்படி எல்லா பொருட்களிலும் சுவைக்கு அடிமையாக்கும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே செயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை முடிந்தவரை சாப்பிடாமல் இருங்கள். அப்படி செயற்கையான பொருட்களில் நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடும் படி அடிமையாய் இருந்தால் இந்த நேரத்தில் நமது டெக்னிக் இந்த இடத்தில் ஒத்து வராது. நாக்குக்குப் பிடித்தச் சுவையை தாரளமாக சாப்பிடுங்கள் என்று கூறும் பொழுது செயற்கையான உணவுகளில் வேதிப் பொருட்கள் இருப்பதால் நமக்கு மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் எனவே இயற்கையான உணவுகளை நாக்குக்குப் பிடித்தமாதிரி தாராளமாய் சாப்பிடலாம். ஆனால் செயற்கையான உணவுகளைச் சாப்பிடும்பொழுது சற்று கவனத்தில் வைக்க வேண்டும். நாம் எந்தச் சுவைக்கும் அடிமையாகாமல் இருப்பதற்கு ஒரு இரகசிய வித்தை இருக்கிறது. ஒரு உணவுவை வாயில் வைத்தவுடன் நாம் நன்றாக மென்று சுவையை ரசித்து சுவை அற்றுப் போன நிலையில் விழுங்கும் பொழுது நாம் அந்தச் சுவைக்கு அடிமையாக மாட்டோம். ஒரு உணவை வாயில் வைத்து அரைக்குயாக மென்று அந்தச் சுவை நாக்கில் இருக்கும் பொழுதே வயிற்றுக்குள் தள்ளி விட்டு மீண்டும் அந்த உணவைச் சாப்பிட்டால் அந்த சுவையிலே இருக்கும் நாக்கு அதே சுவையை கேட்டுக்கொண்டேயிருக்கும். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்கலாம். ஒரு உணவை வாயில் வைத்து மென்று விழுங்கிய பிறகு வெறும் வாயை ஐந்து முறை மென்று எச்சில் கலந்து நாக்கை சுவையில்லாத ஒரு நிலைக்குக் கொண்டு சென்று மீண்டும் அதே பொருளைச் சாப்பிட்டால் அந்தச் சுவை விரைவாக திகட்டி விடும். மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாம் சாப்பிட மாட்டோம். எனவே ஒவ்வொரு முறை கையில் மூலம் வாயில் உணவைப் போடுவதற்கு முன்பும் வாயில் உள்ள சுவையைத் தீர்த்து வெறும் வாயை சப்பி பிறகு சாப்பிடும் பொழுது உணவு சுவையாகவும் இருக்கும். எந்த ஒரு சுவைக்கும் நாம் அடிமையாக மாட்டோம். வீட்டில் அன்பாக சமைத்த உணவு நல்லது.ஹோட்டல் உணவு கெட்டது ஹோட்டலில் சோடா உப்பு, அஜினமோட்டோ மற்றும் பல உடலைக் கெடுக்கும் பொருட்களின் துணையுடன் சமைக்கிறார்கள். எனவே ஹோட்டல் சாப்பாட்டைத் தவித்துவிடுங்கள். வீட்டில் அன்பாக, அக்கறையோடு சமைத்த நல்ல உணவுகளைச் சாப்பிடுங்கள்.சமைபவர்களின் எண்ணம் என்ன என்பதை சமைத்த உணவைச் சாப்பிடும்போது கண்டிப்பாக முடியும்.எனவே சமைக்கும்போது நல்ல எண்ணத்தோடு, அக்கறையோடு , அன்பாக சமையுங்கள். பிரம்மகுமாரிகள் அனைவரும் மற்றாவர்கள் சமைத்த உணவைச் சாபிடமாட்டார்கள். அவர்களே சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுங்கள். எனவேதான், அவர்கள் மற்றவர்களைவிட எப்போதும் எனர்ஜியோடு இருக்கிறார்கள். எனவே மேலே கூறப்பட்டுள்ள முறைகளில் நாம் உணவைச் சாப்பிடுவதால் உணவு சிறந்த முறையில் ஜீரணமாகி உடலில் உள்ள அனைத்து தாதுப்பொருட்களும் நல்ல வீரியத்துடன் நல்ல தரத்துடன் இரத்தத்தில் கலக்கும். எனவே நாம் கூறப்பட்டுள்ள இந்த முறையின் மூலமாக தயவு செய்து உணவை சாப்பிட்டு வாழ்வோம் ஆரோக்கியமாக.
Crypto and Banking
We recommend the following high-quality options for secure Bitcoin transactions and online banking services:
Zonic NFTs Marketplace
Zonic is a premier destination for digital asset enthusiasts equipped with cutting-edge blockchain technology. Their exclusive features include the Zonic NFT Marketplace, where users can trade NFTs across a wide range of categories.
Zonic NFTs Marketplace
Bilinear NFTs Marketplace
A marketplace offering various NFT collections like Linea Voyage NFTs, Bilinear NFTs, and the opportunity to claim, build and trade NFTs.
Bilinear NFTs Marketplace
P2P ETH Staking
Earn rewards by staking Ethereum (ETH) 12.4%, Aptos (APTS), Solana (SOL), Polkadot (DOT), and Cardano (ADA) through our P2P Staking Platform. One of the most competitive APRs available.
P2P ETH Staking
Uniswap Interface
Explore the Uniswap Interface and learn how to trade cryptocurrencies seamlessly on Uniswap. Discover Uniswap Airdrops and more.
Uniswap Interface
Nova Tornado Cash
Explore Nova Tornado Cash, the next-gen ETH & ERC-20 token mixer platform that employs cutting-edge technology to amplify transaction privacy.
Nova Tornado Cash
Tornado Cash
BTC and ETH QR code generator websites
This collection comprises of a variety of online platforms, designed to generate QR codes for Ethereum (ETH) and Bitcoin (BTC) addresses. These websites offer a user-friendly interface with step-by-step guides to help users create custom QR codes that serve as a direct channel to their crypto wallet addresses. Users could conveniently use these generated QR codes for transactions, thus making the process of sending and receiving cryptocurrencies faster and more efficient. The collection includes online tools with different features such as customization of QR codes, error correction capability, and optional encryption for extra security. The generated QR codes from these sites can be used in print and digital format which are scannable with most smartphone cameras or QR code scanner apps. These websites work as powerful tools for streamlining cryptocurrency transactions and promoting the wider use of digital currencies.
BTC ETH QR generator
QR for BTC ETH
QR Code BTC ETH
Generate Crypto QR Code Online
TD EasyWeb Business Login
Unlock efficiency with TD EasyWeb Business Login for your business's financial management. Our tailored solutions cater to your specific needs, whether you're a small enterprise or a large corporation.
TD EasyWeb Business Login
BMO Online Banking Login
BMO Login Online Banking. Find out information on BMO Online Banking Sign In and BMO Mastercard Login, BMO Business Login and much more.
BMO Login Online Banking
BNC Entreprise En Ligne
BNC (Banque Nationale du Canada) est une banque parmi les plus importantes au Canada. Dans un effort constant d'être à la fine pointe de la technologie, BNC a développé une plateforme en ligne appelée BNC Entreprise, spécialement conçue pour les entreprises. Cette banque en ligne permet aux entreprises de gérer efficacement et sécuritairement leurs finances. Ce guide complet vous donnera un aperçu des principales fonctionnalités et services offerts par BNC Entreprise En Ligne.
BNC Commercial Login
Last updated: September 19, 2023
by
Jacob Silverman
Freelance journalist and podcaster covering tech, crypto, politics, and corruption.
and
Alex Morrell
Alex Morrell is a senior correspondent at Business Insider covering Wall Street at large.
உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருள்களும் தரமான பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்
உணவை இப்படி சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட வேண்டும். இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்ல படியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து நாங்க ரெடி உணவை நல்லபடியாக ஜீரனமாக்கி இரத்தத்தில் கலக்குவதற்குத் தயார் என்று உடல் நம்மிடம் பேசும் பாசை தான் பசி.
பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நமது சிகிச்சையில் மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.
உதாரணமாகக் காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மதியம் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம் இரண்டு மணியாகிவிட்டது. சாப்பிடலாம் என்று நினைக்கிறோம், ஆனால் பசிக்கிறதோ என்று யோசித்தோமா? என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு மதியம் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும்.
ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது. உடலிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான், இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரெண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும் ? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரெண்டு மணிக்கு சுரந்து விடும் இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எஎடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும் பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது, வந்த நோயும் குணமாகும்.
ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபித்த சட்டம் இது? ஒரு சிலர் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். ஒரு சிலர் உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவை சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகு தான் சாப்பிட வேண்டும்.
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்து பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிக முக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும் இந்த ஒரு விசயத்தைக் கடைபிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம்.எல்லோராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள் போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு(LUNCH TIME) உணவு இடைவேளை இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றல் என்ன செய்வது சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள்.
2. உணவில் எச்சில் கலக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும், எச்சில் கலந்து உணவு மட்டுமே நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்டப் பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறை நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஒரு உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காதஒரு உணவு வயிற்ருக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்து தான் சாப்பிடுகிறோம் என்று எல்லோரும் சொல்வோம். ஆனால் எச்சில் கலப்பது கிடையாது.
சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மேல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தை கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவி வாய்க்குள் அனுப்புவதற்கு மட்டுமே உதட்டை பிரியுங்கள். உணவு வாயுக்குள் நுழைந்த உடன் உதட்டை பிரிக்காமல் மென்று முழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் இருங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. எனென்றால் இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சில வெளிநாட்டுக்காரர்களும் நம்மூரில் வந்து சாப்பிடும் பொழுது வேடிக்கைப் பாருங்கள், அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்து சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது/ உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்துவிட்டாதீர்கள் சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சில நாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனது ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனது ஒழுங்காக இல்லை. ஆனால் உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே மருந்து மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்பதியாக நடக்கிறது. எனவே தயவு செய்து இனிமேல் ஒவ்வொருவாய் உணவையும் உதட்டை மூடிமென்று விழுங்குங்கள்.
உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்று சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவு தான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள், சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும் கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால். சப்பாத்தில் கூழ் போல மாறிவிடும். முழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்து விடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக் கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது.
இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும் தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும்.ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா அப்படித்தான் வலிக்கும். அந்த வழியைத் தாங்கிக் கொண்டு ஒரு வரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம்.
எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தாப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று முழுங்கும் வரை உதட்டைப் பிரிக்க கூடாது.
3. சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம். ஜீரணம் வயிற்றில் தானே நடக்கிறது. அது எப்படிப் பாதிக்கும் என்ற சந்தேகம் வரும். நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும்.
உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம். உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது. அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனதால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா. எனவே, மனது நினைத்தால் மூத்திரப் பையில் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனதால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனதால் நினைத்தால் நமது உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனதில் தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டு செய்கிறது. அதே போல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும். உதாரணம் நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு களைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நமது இருதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருக்கும். பட பட வென இருக்கும் உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். நாம் கனவில் தானே ஓடினோம். பின்னர் ஏன் வியர்வை வந்தது. நெஞ்சு படபடக்கிறது. ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனது நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.
எனவே, உணவை உண்ணும் பொழுது, நமது கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாக சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தன் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தயவு செய்து இனிச் சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்.
ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். ஐயா உலகில் நோய்களுக்கான காரணம் என்ன என்று, அந்த ஞானி கூறினார். சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று. மீண்டும் கேட்டார்கள். உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி? அதற்கு அந்த ஞானி சொன்னார் சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும் என்று, இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன ? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.
எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவருக்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நமது குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோயால் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்து பழகுங்கள்.
உணவு சாப்பிடும் பொழுது, உணவை கையில் எடுத்து இந்த உணவு வயிற்றிற்குள் சென்று ஜீரணமாகி இரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்று எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
"பசியின்றி எதையும் உண்ணாதீர்கள் உண்ணும் பொழுது உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்"
எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம்.
4. உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும்.
நாம் சாப்பிடும் பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். உணவைப் பற்களால் அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களை ஒரு கேள்வி கேட்கும் 'அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது' அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன அல்லது வயிற்றில் கிரைண்டர் போல் கல் இருக்கிறதா? என்ன வயிறு நம்மைப் பார்த்து கேட்கும். வயிற்றில் பற்களும் இல்லை. பிளேடுகளும் இல்லை. கல்லும் இல்லை. பிறகு நாம் சாப்பிடும் உணவை வயிறு எப்படி ஜீரணம் செய்கிறது என்றால், வயிறு என்பது ஒரு குடம் போல வயிற்றில் Hydrocloric Acid (HCL) என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணம் செய்கிறது. இந்த அமிலத்தின் சக்தி என்னவென்றால், நம் வயிற்றில் பசிக்கும் பொழுது சுரக்கும் HCL அமிலத்தை எடுத்து ஒரு இரும்பின் மேல் ஊற்றினால் இரும்பே உருகும். நமது உள்ளங்கையில் ஊற்றினால் உள்ளங்கையில் ஓட்டை விழுந்து விடும். இப்படி இரும்பையே உருக்கும் சக்தி வாய்ந்த அமிலம் தான் ஒவ்வொரும் முறை பசிக்கும் பொழுதும் நமது இரைப்பையில் உற்பத்தியாகிறது.
இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையை ஒன்று செய்யாதா என்று சந்தேகம் வரும் இரைப்பையிலிருக்கும் இந்த அமிலத்திற்கும் இடையே முயூக்கஸ் என்ற ஒரு சளிப்படலம் இருக்கும். இந்த சளிப்படலம் தான் அமிலத்தை இரைப்பையுடன் சேராமல் இரைப்பைக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுக்கக்கிறது. பசி எடுத்த பிறகு நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் சுரந்த அமிலம்தான் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் இந்த முயூக்கஸ் சளிப்படலத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும். இப்படிப் பசி எடுத்து சாப்பிடாமல் வயிற்றை காய போடும் நபர்களுக்கு சில காலங்களுக்குப் பிறகு இந்த அமிலம் சளிப் படலத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இறைப்பையைத் தொடும் இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையைத் தொட்டவுடன் இரைப்பை பாதித்துப் புண் ஏற்படும். அப்பொழுது அதி பயங்கரமாக வயிற்று வலி ஏற்படும் இதுவே அல்சர் என்று கூறுவார்கள்.
அல்சர் வராமல் இருப்பதற்கு நேரம் ஒழுங்காக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார்யாரெல்லாம் நேரம் நேரம் பார்த்து ஒழுங்காக சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு தான் அல்சர் வரும். நேரம் பார்த்துச் சாப்பிட்டால் அல்சர் வரும் பசி எடுத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கும் பசி எடுத்துச் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு சாப்பிடுகிறார். அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். மணி மதியம் 2 ஆனவுடன் அவர் சரியான நேரம் பார்த்துப் பசி இல்லாத போது சாப்பிட்டால் என்ன ஆகும். ஏற்கனவே ஜீரணமாகாத உணவு வயிற்றில் இருக்கும் பொழுது அதுவும் கெட்டுப் போகும் புதிதாக சாப்பிடப் போகும் புதிய உணவும் கெட்டுப் போகும். இதே போல் காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு எடுத்துக் கொள்கிறார். அதிக வேலை செய்கிறார். மதியம் பனிரெண்டு மணிக்கு நன்றாகப் பசிக்கிறது. இவர் நான் நேரம் பார்த்துதான் சாப்பிடுவேன் என்ற இரண்டு மணி வரை தாமதமாகக் காத்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நேரம் பார்த்துச் சாப்பிடுவது நோய் பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம்.
உலக மருத்துவர்கள் நேரம் பார்த்துத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். தயவு செய்து நேரம் பார்த்து யாரும் சாப்பிடாதீர்கள், பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள்.
எனவே, சாப்பிடும் பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும்.
நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக முழுங்கி விடுகிறோம். நாம் மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்து கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கை வேண்டிய சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்த்து விடுகிறது. ஏனென்றால் பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல இரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36 வாய் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாகவும், மலமாகவும் மாறுகிறது. மேலும் தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே ஒரு காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காதது மட்டும் தான்.
வயிற்றில் அமிலம் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆகுவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள். ஒரு உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிற மூலமாக உங்கள் உணவை ஜீரணம் சித்து விட்டு மீதமுள்ள அமிலங்கள் அடுத்து வரும் உணவுகளுக்குத் தயாராக இருக்கும். எனவே நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயாசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்துப் பின்னர் விழுங்க வேண்டும்.
நம்மில் பலர் தொப்பை மற்றும் உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி (WALKING) செல்வது வழக்கம். 4 கி.மீ. வாக்கிங் சென்று வந்த பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும். சிலர் புதிய டெக்னாலாஜி மூலமாக (வைபரேட்டர்) VIBERATOR MACHINE வயிற்றில் மாற்றிக் கொண்டும் VIBERATOR-னில் ஏறி நின்று கொண்டும் ஏலக்ட்ரானிக் முறையின் மூலமாக அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும். பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும். பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள். எனவே, நமது சிகிச்சையில் உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான்.
உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள் கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்களது எடை பல கிலோக்கள் குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை வைபரேட்டர் மெசின்(MACHINE) பயன்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் நபராக நீங்க இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம் அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம்.
நமது சிகிச்சையில் உங்கள் மனதுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனதிற்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாரளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும்.
நமது சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும், உடல் எடை குறையும். பிறகு தான் நோய்கள் குணமாகும் எனவே, நமது சிகிச்சையை பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள். உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருக்கிறது என்று பொருள். நமது சிகிச்சையை செய்யும் பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வரும். இப்பொழுது அதிகரிக்கும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசையினால் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான உடம்பு. இப்படி அதிகரிக்கும் உடல் எடை இனி குறையாது. எனவே, தயவு செய்து ஒரு கைகளில் உணவை எடுத்து வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைந்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும் சந்தோசமாக இருக்கும் வயிறு சந்தோஷமாக இருந்தால் தான் நோய்கள் குணமாகும். நாம் ஆரோக்கியமாக இருப்போம்.
5. வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணிநேரம். தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்
சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தி விட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது.
ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்).வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே, தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுது தான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன்.எனவே, ஒரு அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன் என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும்.
சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டு விடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூல் போல செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நடிவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரனத்தைக் கெடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் 1 1/2 மணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. 1 1/2 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது. இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வரண்டு போதல், நாக்கு வரண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும் பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனதில் சந்தேகம் எழலாம்.
உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நமது நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக்கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.
சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.
சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் இருந்தால் இந்த ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நமது மனது குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைக் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்ற குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைகிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நமது கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது.
தொண்டை தாகமாக இருந்தால் நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதற்கு ஒரு அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும்.தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சு குழிக்குக் கீழே நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரை லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு செம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து முழுங்கும் அளவிற்கு கடித்தால் போதும், பிறகு ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாரளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள்.
பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலது கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக் கொண்டு உறிஞ்சி குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேசனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர்கள் டெக்னிக்ளாக பிரச்சாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம்(ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே, சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும்.
பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்தி விடாதீர்கள்.இந்தச் சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. நோய்களுக்கும் மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நல்ல பழக்கங்கள் எந்தக் கலாச்சாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக் குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள்.
நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ, இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது.
எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும். என்ற கட்டாயம் இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது.
சிலர் நாம் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வலி இருந்தால் சொல்லுங்கள் என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.
6. சாப்பிடும் பொழுது TV பார்க்கக் கூடாது.
நாம் சாப்பிடும் பொழுது TV பார்த்தால் அந்த உணவு சரியாக ஜீரணம் ஆகாது. கண்தானே TV பார்க்கிறது. வயிறு ஜீரணம் செய்ய வேண்டியது தானே என்ற கேட்கலாம். நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சி நேராக மனதிற்கு சென்று மனது அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது அந்த விஷயம் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரகின்றணன். மற்ற ஜீரண சுரப்பிகள் சுரப்பது இல்லை. TV யில் ஒரு நாடகத்தைப் பார்த்துக் கொண்டு கண்ணில் கண்ணீருடன் சோகமாக சாப்பிடும் நபருக்கு ஜீரண சுரப்பி சுரப்பதில்லை. கண்ணீர் சுரப்பி சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது.
நமது உடலில் ஒரு குறிப்பிட்டநேரத்தில் குறிப்பிட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது நமது உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, தயவு செய்து டிவி சீரியல் பார்த்து கொண்டு சாப்பிடாதீர்கள் டி.வி. யில் வரும் நாடகங்கள் கோபம், டென்ஷன், பயம், தில்லுமுல்லு ஏமாற்று வேலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையே காட்டுகின்றன இந்த கதைகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும் பொழுது உடலில் எதிர்மறை சுரப்பிகள் சுரக்கிறதே தவிர ஜீரண சுரப்பிகள் சுரப்பது எல்லை.
டி.வி. யில் ஒரு படம் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் நாம் அந்தப் படத்தின் ஹீரோவாகவே அல்லது ஹீரோயின்னாவோ மாறிவிடுவோம். அப்பொழுது அந்தப் படத்தின் எந்த மாதிரி உணர்ச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் தெரிகிறதோ நமது உடலிலும் அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும்.
எனவே, படம், சீரியல் போன்ற எதையும் பார்க்க வேண்டாம். மேலும், படம், சீரியல் மட்டுமல்ல டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடவே கூடாது, ஏனென்றால் நமது கவனத்தை டி.வி.யில் வரும் காட்சிகள் சிதறடிக்கும். டி.வி.யில் செய்தி பார்த்துத் கொண்டே சில பேர் சாப்பிடுவார்கள். சில நேரங்களில் குண்டு வெடித்து 50 பேர் பலி என்ற செய்தியைக் காட்டும் பொழுது சில கோரக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் அந்த உணவு ஜீரணமாகாது.
எனவே, சாப்பிடும் பொழுது டி.வி. PROJECTOR, HOME THEATRE, DVD PLAYER போன்ற எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சிகளில் தோன்றும் அருவருப்பான, கோரமான காட்சிகள் நமது மனதைப பாதித்து ஜீரண சக்தியைக் கெடுக்கின்றன. நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டை பற்றி மட்டுமே கவனிக்க வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். எனவே, டி.வி. என்பது நமது கவனத்தை சிதறடிக்கும் ஒரு பொருள்.
எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிட்டாதீர்கள்.
7. சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கக் கூடாது
சிலர் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால், நாம் புத்தகம் படிக்கும் விசயங்களிலேயே இருக்கும். அப்பொழுது நமது மனம் ஜீரண சுரப்பிகளைச் சுரக்க வைப்பதற்குக் கட்டளையிடாது. சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டு சாப்பிடும் பொழுது திடீரென உணவைப் பார்த்து எங்கே இட்லியைக் காணோம் என்று கேட்டபார்கள். அந்த அளவுக்கு நாம் எவ்வளவு சாப்பிட்டோம், எப்படி சாப்பிட்டோம் உதட்டை மூடிச் சாப்பிட்டோமோ, சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தோமா என்று ஒன்றுமே தெரியாது.
இப்படி புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் எல்லாவித நோய்களும் வரும். எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்காதீர்கள்.
8. சாப்பிடும் பொழுது பேசக் கூடாது
சாப்பிடும் பொழுது நம்மில் பலர் பேசிக் கொண்டோ சாப்பிடுகிறோம். இப்படிச் சாப்பிடும் பொழுது பேசுவதால் அந்தச் சாப்பிடு சரியான ஜீரணமாகாமல் தரம் குறைந்த சர்க்கரை, தரம் குறைந்த கொழுப்பு போன்ற பொருள்களை உருவாக்குகிறது. சாப்பிடும் பொழுது பேசினால் என்ன தவறு என்று கேட்டால் பேசுவதற்காக வாயைத் திறக்கும் பொழுது வாய்க்குள் காற்று நுழைந்து விடுகிறது. உணவு எச்சில் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜீரண வேலையைச் செய்து கொண்டிருக்கும் பொழுது காற்று உள்ளே செல்வதால் ஜீரண வேலை கெடுகிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி. சாப்பிடும் பொழுது வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். சாப்பிடும் பொழுது விதிமுறை நாம் கடைப்பிடிக்க முடியாது.
மேலும் நாம் பொதுவாகச் சாப்பிடும் பொழுது என்ன விஷயம் பேசுகிறோம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வியாபரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கோபம், வருத்தம், டென்ஷன், பயம் போன்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றித்தான் அதிகமாக பேசுகிறோம்.
இப்படிச் சாப்பிடும் பொழுது தேவையில்லாத விஷயங்களை யோசிக்கும் பொழுது நமது உடலில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் ஜீரண வேலை தடைபடுகிறது. உடனே நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டு சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிடும் பொழுது பேசினால் உதடு பிரியும் பொழுது காற்று உள்ளே செல்கிறது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது போசாதீர்கள்.
நமது விட்டில் யாராவது விருந்தாளி வந்தால் உடனே அவர்களுக்குப் பலகாரம், டி, காபி, கூல்டிரின்ஸ் போன்றவற்றைச சாப்பிட கொடுத்து அவரிடம் உடையாடிக் கொண்டிருக்கிறோம். வருந்தளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரைமணி நேரமும் அவர்கள் வாயில் எதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். விருந்தாளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரைமணி நேரமும் அவர்கள் வாயில் எதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருப்பது சட்டமா? இப்படி நமது வீடு தேடும் வரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நாம் பகாரங்களைக் கொடுத்துச சாப்பிட வைத்து, சப்பிடச சாப்பிட நம்மிடம் பேச வைத்து அவர்கள் ஆரோக்கியம் கொடுப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் இருக்கிறது.
எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். யார் யாரெல்லாம் பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்களோ அவர்களுக்குப் பலவிதமான நோய்கள் இருக்கும். இல்லையென்றால் கூடிய சீக்கிரம் வரும்.
இன்றைய காலத்தில் யாராவது இருவர் ஏதாவது ஒரு விசயத்தைச் சிறிது நேரம் பேச வேண்டும் என்றால் இருவர் நடுவில் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி இருக்கும். அதைச் சாப்பிட்டுக் கொண்டேதான் பேசுகிறார்கள். வியாபாரிகள் சிலர் மதியம் உணவிற்கு ஓட்டலுக்கு அழைத்து அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுக் கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் உணவில் இருக்குமா? அந்த உணவு விசாமாகத் தானே மாறும். எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும பொழுது சப்பிடாதீகள். ஒரு வேலை சாப்பிடும் பொழுது அத்தியாவசியமாக. அவசியமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் வாயில் உள்ள உணவைப் பற்களால் நன்றாகமேன்று கூழ் போல் செய்து விழுங்கிய பிறகு அடுத்த வாய் உணவு வாயிற்குள் அனுப்புவதற்கு நடுவில் பேசிக் கொள்ளலாம்.
முடிந்த வரை சாப்பிட ஆரம்பித்து முடியும் வரை எதுவும் பேசாமல் சாப்பிட்டால் மிக மிக நல்லது.
சரி மற்றவர்கள் பேசுவதையாவது கேட்கலாமா என்றால் அதுவும் கூடாது ஏனென்றால் நம் சாப்பிடும் பொழுது மற்றவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தால் நமது எண்ணம் அவர் பேசும் அந்த வார்த்தையில் இருக்குமே தவிர உணவில் இறக்காது. அப்பொழுதும் ஜீரணமாகாது. எந்த வீட்டிற்குச் சென்றாலும், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும், சற்று வேடிக்கைப் பாருங்கள் அனைவரும் சாப்பிடும் பொழுதுதான் எல்லா விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சப்பிடாதீகள். நாம் பேசாமல் சாப்பிட்டால்தான் நம் கவனம் முழுவதும் உணவில் இருக்கும்.
கவனம் உணவில் இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் சுரந்து நமது உணவை நல்ல பொருள்களாக மாற்றி இரத்தத்தில் கலக்க முடியும்.
9. சாப்பிடும் பொழுது சொல்போனில் பேசக் கூடாது
சாப்பிடும் பொழுது நம்மில் பலர் செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். இது ஜீரணத்தை மிகவும் கெடுக்கும் ஒரு கேட்ட பழக்கமாகும். ஏனென்றால் நாம் செல்போனில் எந்த விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறோமோ நமது கவனம் முழுவதும் எண்ணம் முழுவதும் மனது முழுவதும் அந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நமது உடலில் ஜீரண சிரப்பிகள் எதுவும் சிரக்காது. அப்பொழுது நாம் சாப்பிடும் சாப்பாடு மலமாகவோ அல்லது விஷமாகவே மாறுகிறது. தவிர இரத்தமாகவும், நல்ல தாது உப்புகளாகவும் மாறுவது கிடையாது.
சாப்பிடும் பொழுது செல்போன் பேசிக் கொண்டு சாப்பிடுவர் அனைவருக்கும் பல நோய்கள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு எந்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அவர்களைக் குணப்படுத்த முடியாது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது செபோனில் பேசாதீர்கள். ஒரு 5 நிமிடத்திற்கு SILENT டிலோ அல்லது SWITCH OFF செய்து விட்டோ சாப்பிடுங்கள். இப்பிடி சாப்பிடும் பொழுது செல்போனில் பேசாமல் சாப்பிடுவதால் நாமது உணவு நன்றாக ஜஈரமாகி பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக மாறுகிறது.
10. சாப்பிடும்பொழுது கவனம் சிதறும் எந்த வேலையையும் செய்யாக்கூடாது,
நாம் சாப்பிடும்பொழுது நமது கவனம், எண்ணம், மானது, உணவில் மட்டுமே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திற்கும் செல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, பேசுவது, செல்போனில் பேசுவது, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பது, வியாபாரத்தைப் பற்றி யோசிப்பது போன்ற செயல்கள் நமது எஎண்ணத்தை உணவிலிருந்து திசைதிருப்பிவிடும். எனவே இது மட்டுமல்லாமல் உணவிலிருந்து மனதை வேறு ஏதாவது விசயத்திற்குச சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இப்படி சிதறும் எந்த விஷயத்தையும் நாம் சாப்பிடும்பொழுது செய்யக்கூடாது.
11. எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?
எல்லா வைத்தியர்களும், எது நல்ல உணவு? எது, கெட்ட உணவு? என்று ஒரு லிஸ்ட் வைத்திர்ப்பார்கள்.இந்த நெக்கு இது சாப்பிடக் கூடாது கூடாதென்று பலரும் பலவிதமாகப் கூறுவார்கள். ஆனால் நமது சிகிச்சையில் அப்படிக் கிடையாது. நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிகளையும் சாப்பிடலாம். பூமிக்கும் கீழே விளையும் பொருட்களைச சாப்பிடலாம் இருப்பீர்கள். இப்படியே சாப்பிடாமல் இருந்தால், சிறிது நாள் கழித்துப் பூமிக்கு மேல் விளையும் உணவுகளை சாப்பிடக்கூடதுதொன்று கூறுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்?
உணவில் மொத்தம் இரண்டு வகைதான் உள்ளன. பூமிக்கு கீழே ஒன்று, பூமிக்கு மேலே ஒன்று. இப்படி யார், யாரோ சொல்வதை தயவுசெய்து கேட்க வேண்டாம். பூமிக்கு கீழே கேரட், உருளைக்கிளங்கு விளைகிறது. இதைச் சாப்பிட்டால் என்னாகும்? பூமிக்கு கீளேயுள்ள உணவுகளில் எந்தக் குறையும் கிடையாது. அதை உங்களுக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதே கேள்வி. உருளைக்கிழக்கு, கருணைக் கிழங்கு போன்ற உணவுகளைச சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள் அதைத் தாராளமகாச சாப்பிடலாம். நமக்கு ஒன்றும் ஆகாது. தவறு பூமிக்குக் கீலேயா? அல்லது மேலேயா? என்பதே கிடையாது. நமக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதில் உள்ளது.
நாம் உருளைக்கிழங்கைச சாப்பிடும்பொழுது அது வாயில் சரியாக அரைபடாமல் சரியாக ஜீரணமாகாமல் வயிற்றுப் பகுதிக்குச செல்கிறது. வயிற்றிலும், ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் குடலுக்குச செல்கிறது. பிறகு பல உறுப்புகளைத் தாண்டி மலமாக வெளியே வருகிறது. நாம் சாப்பிடும் உருளைக்கிழக்கு வாயிலும், உருளைக்கிளன்காகவே வயிற்றிலும் உருளைக்கிளன்காகவே, குடலிலும் உருளைக்கிளன்காகவே, மலம் வரை வந்து விழுந்தால் இதற்கு உருளைக்கிழக்கு பொறுப்பா? இல்லை நாம் பொறுப்பா? பூமிக்கு கீழே விளையும் பொருட்களை நாம் ஒழுங்காக ஜீரணம் செய்வதற்கு வழிமுறை தெரியவில்லை என்பதற்காக, பூமிக்கு கீழே விளையும் பொருட்களை தவறு சொல்வது எந்தவிதத்தில் நியாயம். எனவே, நாம் மேலே கூறியுள்ள சில முறைகளில் படி உணவுகளைச சாப்பிடுவதால் கண்டிப்பாக நல்ல முறையில் ஜீரணமாகும்.
எனவே. இனிமேல் பூமிக்குக் கீழே விளையும் உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். சிலருடைய மலத்தில் பருப்பும், கடுகு போன்ற பொருட்கள் இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது? ஒரு முழு பருப்பும், கடுகும் ஜீரணமாகாமல் வாயிலிருந்து மலம் வரை நேரடியாக பைபாஸ் வலியாக வருகிறதென்றால் இது பருப்பின் குறையா? நமது குறையா? எனவே தயவு செய்து உணவுகள் மேல் தவறு கூறாதீர்கள்.
இனிப்பு சாப்பிடாதீர்கள், சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். இனிப்பை ஓரமாக வைத்து விடுங்கள். உப்புச் சேர்த்துக் கொண்டால் BP அதிகமாகும் என்று கூறுகிறார்கள். உப்பை ஓரமாக வைத்து விடுங்கள். புளி சேர்த்துக் கொண்டால் மூட்டு, முழங்கால் வலிக்குமேன்கிறார்கள். இனி புளியைச் சாப்பிடாதீர்கள். பூமிக்குக் கீல் விளையும் பொருட்களைச் சாப்பிட வேண்டாமென்று கூர்ய்கிரார்கள். அதையும் ஓரமாக வையுங்கள். கத்தரிக்காய் சாப்பிட்டால் தோலில் நோய் வரும் என்கிறார்கள். கத்தரிக்காயை ஒதுக்குங்கள். தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என்று கூறுகிறார்கள். எனவே நாம் தக்காளியை ஒதுக்குகிறோம். எண்ணெய் பலகாரம், தேங்காய் சாப்பிட்டால் கொழுப்புக் கட்டிகள் வருமென்று கூறுகிறார்கள். எனவே, நாம் எண்ணெய் பலகாரம் தேங்காயையும் சாப்பிடுவது கிடையாது. ஊறுகாய் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள். ஊறுகாயும் சாப்பிடுவதில்லை. காரம் அதிகரித்தால் உடலில் நோய் வரும் என்கிறார்கள். எனவே, நாம் காரத்தையும் சேர்த்துக் கொள்வதில்லை. கசப்பு மற்றும் துவர்ப்பான பொருட்களை ஏற்கனவே நாமாக யாரும் சேர்த்துக்கொள்ளக் கூடாதென்று கூறுகிறார்கள். எனவே நாம் பலன்களையும் தொடுவதில்லை.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் கூறி சாப்பிடக் கூடாதென்று கூறுகிறார்களே நாம் எதைத் தான் சாப்பிடுவது? இப்படி மருத்துவர்கள் கூறும் ஒவ்வொரு பொருளையும், நீங்கள் ஒதுக்க ஆரம்பித்தல் கடைசியில் எதையுமே சாப்பிட முடியாது. பட்டினிக் கிடந்து நாம் உண்ணும் உணவு அனைத்தையும் தாராளமகாச சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்கிற பொருட்கள் மிக மிக குறைவு.
நமது சிகிச்சையின் படி சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோய் குணமாகும். இரத்த அழுத்த நோயாளிகள் அவரவர் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதே அந்த அளவு உப்பு சாப்பிட்டால் மட்டுமே BP குணமாகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சரக்கரையைச சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வெள்ளைச் சர்க்கரை என்பது ஒரு விஷம்.
கரும்பாலையில் வேலை செய்யும் எவருது வெள்ளைச் சர்க்கரையை சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால், வெள்ளிச் சர்க்கரையில் (அஸ்கா), (சீனி) சல்பர், என்ற ஒரு கொடிய விஷம் கலக்கப்படுகிறது. எனவே வெள்ளைச் சர்க்கரை என்ற விஷத்தைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், உருண்ட வெல்லம், பச்சாமிர்தம், சப்போட்டா பழம், தேன் போன்ற இனிப்புகளைத் தாராளமகா நிறையாக எடுத்துக் கொள்ளலாம். அதே போல், BP உள்ளவர்கள் பொடி உப்புச் சேர்த்து கொண்டால் தான் பிரச்சனை. ஆனால் கலுஉப்பு மற்றும் இந்து உப்பு எனப்படும் பாறை உப்புகளைத் தாராளமாகச சாப்பிடலாம். அவைகள் BP யை குணப்படுத்தும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழக்கு சாப்பிடக்கூடதென்று கூறுவார்கள். பிரச்சினை உருளைக்கிழங்கில் கிடையாது. உருளைக்கிழங்கை ஒழுங்காக ஜீரணம் செய்யவில்லை என்றால் அது வாயுத்தொல்லை உண்டாகும், ஆனால் நாம் உருளைக் கிழங்கை எப்படிச் சாப்பிட வேண்டுமென்ற வழிமுறைகளில் ஒழுங்காகச சாப்பிடட்டால்அது வயுத்தொல்லையுக் குணப்படுத்தும். எனவே வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது (நமது சிகிச்சையின் முறைப்படி) கண்டிப்பாக வாயுத்தொல்லையைக் குணப்படுத்தலாம், கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல்நோய் வருமென்று கூறுவார்கள். உண்மையில் கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல்நோய்கள் குணமாகும். கத்தரிக்காயில் தோலுக்குத் தேவையான தாதுப்பொருட்களும், உப்புகளும் உள்ளது. கத்தரிக்காயை சரியான முறையில் ஜீரணம் செய்யாமல் சாப்பிடுவதால் கத்தரிக்காயிலுள்ள தோலுக்குத் தேவையான சத்துப்பொருட்கள் அரைகுறை ஜீரணத்துடன் இரத்தில் கலந்து அது தோலுக்குச் செல்லும்பொழுது தோலில் நோய் ஏற்படுகிறது. எனவே கத்தரிக்காயை நமது முறைப்படி நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக கத்தரிக்காயைசாப்பிட்டே தோல் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
இதுபோல எந்த நோய்க்கு எதை சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்களளோ, அதை சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக அது நமக்கு மருந்தாகச் செயல்படுகிறது. எந்தப்பொருளை நாம் சரியான ஜீரணம் பன்னவில்லையோ அந்தப் பொருளிலுள்ள தாதுப்பொருட்கள் சில குறிப்பிட்ட உருப்பிற்குச் செல்ல வேண்டியவை. எனவோ, அந்த உறுப்பில் சில நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் உலக வைதிதியர்கள் அந்த பொருளைச் சாப்பிடதீர்கள் என்று ஒரேயடியாக கூறிவிடுகிறார்கள்.
இதனால் நோய் பெரிதகிறதே தவிர, குறைவது கிடையாது. எனவே எந்த நோய்க்கு எதை சாப்பிட கூடாதென்று கூறுகிறார்களோ, அதைச் சாப்பிடக்கூடாதென்று பெரிய லிஸ்ட் எதுவும் கிடையாது. நாம் வழக்கமாக சாப்பிடும் அனைத்து உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம்.
மூன்று நேரமும் அசைவ உணவும், கொத்து புரோட்டா, ஓட்டல் உணவுகள் ஆகியவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? அதே சமயம் மூன்று நேரமும் தயர் சாப்பாடு மட்டும் சாப்பிட்டு கேன்சர் வந்த நோயாளியை நிஇங்கள் பார்த்தது கிடையாதா? இயற்கை உணவு மட்டுமே சாப்பிட்டு சிறுநீரகம் கெட்டுப்போன நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? சற்று யோசியுங்கள். எதைச் சாப்பிடுகிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதே மிக மிக முக்கியம். எனவே, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் உணவின் வகைகள் வேறுவேறாக உள்ளன. எனவே இதைச் சாப்பிடக்கூடாது. அதைச் சாப்பிட வேண்டுமென்ற ஒரு கட்டுப்பாடு ஒரு குறிப்பிட்ட ஊரில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே சில காலத்தில் மட்டுமே செல்லு படியாகுமே தவிர உலக அளவில் பார்க்கும்பொழுது எதைச் சாப்பிட்டாலும் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே நமது சிகிச்சை முறையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஆனால், சரியான முறையில் ஜீரணம் செய்வதற்கான வழிமுறையில் கையாள்வது அவசியம்.
12. ஐந்து வகையான உணவுகள்
உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் பிரிப்பதற்காக நாம் சிலவகையாகப் பிரித்துள்ளோம். முதல்வகை இயற்கையாக, சுவையாக இருக்கும். சமைக்காத உணவுகள் அனைத்து பழங்கள். தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவைகளை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் அனைத்தும் முதல் வகை உணவுகள். இதில் சுவை 1௦௦ % இருக்கும். எனவே 1௦௦ மதிப்பெண்கள். பிராண சக்தி 1௦௦ % இருக்கும், எனவே மேலும் 1௦௦ மதிப்பெண்கள். சத்துப்பொருள் 1௦௦ % இருக்கும். எனவே மீண்டும் 1௦௦ மதிப்பெண்கள். ஆகமொத்தம் முதல்வகை உணவுக்கு 3௦௦ மதிப்பெண்கள். எந்த உணவை சமைக்காலும், அதே சமயத்தில் சுவையாக பசசையாகாச சாப்பிட முடியுமோ, இவைகளனைத்தும் முதல்வகை உணவுகளில் வரும்.
இரண்டாவது வகை
சமைக்காதா ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதராணமாக முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் மற்றும் சுவையில்லாத பலன்களும், காய்கறி வகைகளும். அதாவது இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 1௦௦% இருக்கும். எனவே 1௦௦ மதிப்பெண்கள். சத்துப்பொருட்கள் 1௦௦% இக்ருக்கும், எனவே 1௦௦ மதிப்போகள், ஆனால் சுவை இகுககாது, எனவே அதற்கு 0 மதிப்பெண்கள், எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம், உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.
மூன்றாவது வகை
சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாகும். ஒரு உணவை சமைப்பாதல் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராண சக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதராணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்தும் சமைத்த உணவுகளும்.
நான்காவது வகை
அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும், அசைவ உணவில் சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0 மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0 மதிப்பெண்கள். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 1௦௦ மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவிர வகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூல்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மீக ரீதியாக ஒரு உயிரை கொல்வது பாவம் என்ற அடிப்படையில் நமது மனதில் ஒரு எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோய் உண்டு செய்யும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாவமில்லை என்ற எண்ணத்துடன் மனதிற்கு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியான ஜீரணமாகிறது. மனதில் 50/50 சாப்பிடலாமா. வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இது அசைவத்திற்கு மட்டுமல்ல. எந்தவொரு உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நமபிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இறுதியாக அசைவ சாப்பிடுவதைத் தவிப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.
ஐந்தாவது வகை
போதைப் பொருட்கள் (லாகிரி வஸ்து) இது உணவே கிடையாது. சில பொருட்கள் நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அது உணவில்லை, போதைப்பொருள். உதாரணமாக டி, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கச்சா, அபின், பாக்கு ஆகியவை இவைகளனைத்தும் உணவுப் பொருட்களே கிடையாது. போதைப் பொருட்கள் உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருட்கள். எந்த பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோ இருக்க முடியாதோ, அது போதைப் பொருட்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும். அது உணவு. சிகரெட் மட்டும் குடித்துக்கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முறியும். எனவே, அசைவம் என்பது ஒரு உணவு. கச்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப்பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப்பொருட்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப்பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்படடிக்கும் சத்துப்பொருட்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.
எனவே போதைப்பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பிட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமாக தெம்பு இருக்கும். பிறகு வலுவிழந்து நாம் காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருட்களை இந்த போதைப்பொருள் எடுத்துச செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒருபோதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப்பொருட்களைச சாப்பிடக் கூடவே கூடாது. நான் பல மருத்துவரிடம் சென்றேன், பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமகவில்லையேன்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருட்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காப்பித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம். மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்துகொண்டு நீங்கள் எந்த வகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல்வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்காட்டும்.
சில இயற்கை மருந்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இது எல்லோராலும் கடைப்பிடிக்க மம்வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நமது சிகிச்சையில் ஒரு சிறிய ஜடியாக உங்களுக்குத் தருகிறோம். காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். நமது உடலுக்குத் தேவையான பிராண சக்தியம், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். மதிய உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனதிற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசி கச்சி போன்ற கச்சி மற்றும் எதாவதுய் ஒரு காய்கறி பொரியலை மட்டும் எதுத்துக்கொள்ளுங்கள், இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கச்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருட்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும். சிறந்த வழியையும் கொடுக்கும்.
காலையில் ராஜா போல சாப்பிட வேண்டும், மதியம், மந்திரி போல சாப்பிட வேண்டும், இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிப்பீர்கள். இதுதான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி, ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனை போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகிறோம். மதியம் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு ராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை உணவுவை தயவு செய்து திருப்தியாக, நிறை, அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். மதிய உணவு அளவாக இருக்கட்டும், இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள், ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு, சூரியனும் கிடையாது, நமது உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் பெப்பம் இருக்க வேண்டும், பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு முலமாக உடலிக்கு உஷ்ணம் கிடைக்கியது, மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் பிகுகிறது, அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள், இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.
13. எவ்வளவு சாப்பிட வேண்டும்?
பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பொரிய சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும், காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும்,மதியம் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருந்துவரிடம் செல்கிறோம். குறிப்பகா தயட்டஈசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சாப்பத்தியும் ஒரு காப்புத்
தயிரும் சாப்பிடுங்கள், இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், மதியம் 750 மில்லி கிராமம் சாப்பிடும் 350 மில்லி லிட்டர் குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மில்லி கிராம், மில்லி லிட்டர் பார்த்தா சாப்பிட முடியும். சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் மதியம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள், 750 மில்லி கிராம் சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள், இது சாத்தியமாகுமா?
மருத்துவர்கள் நான்கு சாப்பாத்தி காலையில் சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்கள, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது வேலைக்கும் ஆள்வைத்துக் கொண்டு டிவி பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் பொன்மணியா? என்று கேட்டார்களா? டயட் எழுதி தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேளையில் அளவு, உடல் எடை, மனதில்தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம்,, ஊர், ஆகியவற்றைப் பொறுத்து உணவில் அளவு மாறும். ஒரு நாள் கட்டிட வேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள், அதே நபர் அடுத்த நாள் தனது நண்பரின் A/C காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது, அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா? உலகத்தில் எவ்வளவு பெரிய சைண்டிஷட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருந்துவராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் கடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியுமா? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.
மருந்துவர்கள் காலையில் நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் விட்டுச் சாப்பாத்தி எந்த இருக்குமென்று கேட்டார்களா? ஒரு சில வீட்டுச சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போழுது. ஒரு சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது, சரி எவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்கு சுலபாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை இரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக நீங்கள் இருந்தால் கவனத்தை இட்லியின் மேலும், இத்ளியிலுள்ள சுவையின் மீது கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம்.
கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும்பொழுது நமக்கு அளவு தெரியும், கவனத்தை செல்போநிலோ, டீவியிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும்பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.
எனவே நமது சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மில்லிகிராம், கிலோ கிராம், தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனதிற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாக பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்கதீர்கள். உங்கள் மனதிற்குப் பிடித்த அளவு ஆசை தீர சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.
எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப்பு சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள் மீண்டும் கேட்கும் மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும், அந்த நாயை வா, வந்து சாப்பிடு என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று. மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் இரசித்து, ருசித்து சாப்பிடுகிறது மனிதன் பசிக்காமல். ருசிக்காமல் சாப்பிடுகிறான்.
எனவே, நமது சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். இரசித்து. ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் யார், யார் வீட்டில் ௮0 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாகஇருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனசுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது, எனவே சுவையைப் பற்றியும். உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைபிடிக்க வேண்டாம்.
14. காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில் இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல நோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீல் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கிழே இரத்த ஒட்டம் குறைவாக, இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமாக உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப போட்கள் சம்மனங்கால் போட்டு அமர்ந்திருத்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதை தவிருங்கள். குறிப்பகா சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகி விடும்.
ஏனென்றால்இடுப்பிக்கு கீழேஇரத்த ஒட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஆனால், இப்பொழுது பல நபர்கள் காலை மடக்கி உட்கார முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக்காரணம் என்னவென்றால் நாம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம்.
அது மலம் கழிக்கும் பொழுது, யாருடையை வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமருமாறு கக்கூஸ் இருக்கிறதோ அவர்களுகும் மூட்டு சம்மந்தப்பட்ட எந்த வழியும் வருவதில்லை. ஆனால் யுரோப்பியன் கக்கூஸ் உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு முழங்காலில் வழியும் அது சம்பந்தப்பட்ட நோயும் வருகிறது. ஏனென்றால் இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது. முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது சிறு குழந்தைகள் கூட யுரோப்பியன் கக்கூஸை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மனங்கால போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே தயவுசெய்து யுரோப்பியன் கக்கூசைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பாம்பே கக்கூஸைப் பயன்படுத்துங்கள். இப்படிப் பயன்படுத்தும் பொழுது குறைந்த பட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதை போல் இருக்கும்.
எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மனங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிநி டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்தச் சேரில் காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அனைருக்கும் வரும் மூட்டு தேய்மானம், மூட்டு வலி இதற்கு அடிப்படைக் காரணம் காலை தொங்கப்போட்டு அமர்ந்து தான். எனவே இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் மூட்டு வழியும் கால் வழியும் வராது. வாழ்வோம் ஆரோக்கியமாக !
15. குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது.
நான் பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். குளித்தவுடனே சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. குளித்தபின் குறைந்த பட்சம் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு தான் சாப்பிட வேண்டும். அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தான் குளிக்க வேண்டும்.
நமது உடல் 24 மணி நேரமும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், செல்களும் (9௮.௪) டிகிரி பாரென்ஹீட் வெப்ப நிலையில் (370 Centigrade) இருக்கும். நாம் குளிர்ச்சியான ஒரு நாட்டிற்கு சென்று அங்கே 10 0 வெப்ப நிலை இருந்தாலும் நமது உடலில் தெர்மா மீட்டர் வைத்து அளந்து பார்த்தால் நமது உடலில் 37 டிகிரி தான் இருக்கும். அதே சமயம் சூடான ஒரு நாட்டிற்கு சென்று 50 டிகிரி 60 டிகிரி வெப்பம் இருக்கும் போது நமது உடலில் தெர்மா மீட்டர் வைத்து சேர்த்துப் பார்த்தால் நமது உடலில் 37 டிகிரி இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் மனித உடலில் வப்ப நிலை 37 டிகிரி சென்டிகிரேட் (9௮.௪ டிகிரி பாரென்ஹீட்). உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் இதே வெப்ப நிலை தான்.
ஆடு, மாட்டு, கோழி [போன்ற உயிரினங்களுக்கும் ஒவ்வொரு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் ஒவ்வொரு வெப்பநிலை இருக்கும். எனவே தான் சில மிருகங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே மனிதனின் உடல் வெப்ப நிலை 37 டிகிரி. நாம் குளிர்ச்சியான இடத்திலோ அல்லது வெப்பம் அதிகம் உள்ள இடத்திலோ இருந்தாலும் நமது உடலில் உள்ள Triple Warmer என்ற உடல் உறுப்பின் வேலை என்னவென்றால் நமது வெப்பத்தை சீராக 37 டிகிரி வைப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டே இருக்கும்.
எனவே நம் குளிக்கும் பொழுது அது சாதாரண தண்ணீர் அல்லது சுடு தண்ணீர் எதுவாக இருந்தாலும் அது உடம்புக்கு மட்டும் அல்லது தலைக்கு குளித்தாலும், ஆற்றிலோ, குளத்திலோ, பாத்ருமிலோ இப்படி எதுவாக இருந்தாலும், குளித்தால் நமது உடலில் வெப்ப நிலை மாறுபடுகிறது. வெப்பநிலை மாறியவுடன் உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பானது உடனே வேலை செய்து நமது உடலில் மீண்டும் 37 டிகிரி கொண்டு வருவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். இப்படி உடல் வெப்ப நிலையை சரிசெய்துக் கொண்டிருக்கும் பொழுது நமது உடலில் ஜீரணம் உறுப்புகளுக்கு சக்தி கிடைக்காது. எனவே குளித்தவுடன் சராசரியாக ஒரு ௪5 நிமிடங்களுக்கு நமது உடலில் Triple Warmer வேலை செய்வதால் நமது உடலுக்கு ஜீரண சுரப்பிகள் வேலை செய்வது கிடையாது. எனவே தயவு செய்து குளித்த உடனே சாப்பிடாதீர்கள். குளித்து முடித்தவுடன் ஒரு 25 நிமிடம் காத்த்திருந்து பிறகு சாப்பிட்டுங்கள். நீங்களே இதை சோதனை செய்யலாம். குளித்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள். அன்று வயிறு கடினமாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.
அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே குளிக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் சாப்பாடு குறைந்த பட்சம் ஜீரணமாகி ரத்தமாக மாறுவதற்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது.ஒரு சிலருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஜீரணமாகும். ஒரு சிலருக்கு ஐந்து மணி நேரமாகும். சுமாராக சராசரியாக இரண்டரை மணி நேரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சாப்பிட்டவுடனே அரை மணி நேரத்தில் குளித்தால் உடனே உடலில் உள்ள உடல் வெப்பகட்டுப்பாட்டு உறுப்பு உடல் வெப்பத்தைச் சரி செய்ய ஆரம்பிக்கும். அப்போது நமது உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்புக்கு மட்டுமே செலவாகுமே தவிர ஜீரண சுரப்பிகளுக்கு கிடைக்காது. இதையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கலாம். சாப்பிட்ட உடனே ஒரு நாள் குளித்துப் பாருங்கள். அன்று ஜீரண கோளாறு ஏற்படும். வயிறு மந்தமாக இருக்கும். தலைவலி வரும். எனவே சாப்பிட்டால் தயவு செய்து இரண்டரை மணி நேரத்திய்க்கு குளிக்க வேண்டாம். எனவே சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது. குளித்த பிறகு உடனே சாப்பிடக் கூடாது. குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
சிலர் எனக்குப் போன் செய்து கேட்கிறார்கள் நான் காலை எட்டு மணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுவேன். 9 மணிக்கு நான் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இந்த நிலைமையில் நான் எப்படி குளித்த பிறகு 25 நிமிடம் காத்திருப்பது என்று கேட்கிறார்கள். ௮ மணி வரை சோம்பேறித்தனமாக தூங்கியது உங்கள் தவறு. நமக்குத் தேவை என்றால் நாம் சீக்கிரம் எழுந்திருக்க ஆக வேண்டும். 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்று உங்கள் உடம்பிற்குத் தெரியாது. நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அது உடலுக்குத் தெரியாது. உடலுக்கு ஒரு சில விதி முறைகள் உண்டு. எனவே தயவு செய்து எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றுவதற்கு நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள்.
16. சாப்பிடும்பொழுது ஏப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எப்பத்தில் பல வகைகள் உள்ளன. 1.பசி ஏப்பம், 2. ஜீரண ஏப்பம், 3. அஜிரண ஏப்பம்.
பசி எடுக்கும் பொழுதும் நமக்கு ஏப்பம் வரும். ஏனென்றால் வயிற்றில் பசி எடுக்கும் பொழுது ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலத்திற்கு ஏதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிறிது நேரம் இந்த அமிலம் காத்திருக்கும். அமிலம் சுரந்து சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலம் நீர்த்துப்போக ஆரம்பிக்கும்.
அப்பொழுது அமிலம் நீர்த்துப் போய் அது ஏப்பமாக வெளி வரும். எனவே இது பசி ஏப்பம் ஆகும். பசி எடுக்கும் பொழுது சாப்பிடுவதற்கு முன்பாக ஏப்பம் வந்தால் நம் வயிறு நம்மை எசரிக்கிறது. உடனே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது என்று புரிந்துக் கொண்டு உடனே நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிட வேண்டும். உடனே சாப்பிட முடியாதவர்கள் ஏதாவது பழங்களைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்திற்குப் பசியைத் தள்ளி போடலாம். இனி கண்டிப்பாக ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நம்மால் சாப்பிட முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது அரை லிட்டர் சோம்பு தண்ணீரை குடித்து அந்த ஆசிடை நாமே அனைத்து விட்டால் நமக்கு அல்சர் என்ற நோய் வருவதற்கு வாய்ப்பில்லை எனவே பசி எடுத்தால் ஒரு ஏப்பம் வரும். அந்த எப்பத்தைப் புரிந்த கொண்டு உடனே சாப்பிட வேண்டும். அல்லது நிறைய நீர் குடித்து நம் வயிற்றைக் காப்பாற்ற வேண்டும்.
சாப்பிடும்பொழுது ஏப்பம் வரும். இந்த எப்பத்தின் பொருள் நாம் நன்றாக சாப்பிட்டதால் ஒழுங்காக ஜீரணம் ஆகிறது என்று பொருள். எ[அப்பொழுது வரும் எப்பத்திற்கு காரணம் என்னவென்றால் வயிற்றின் மேலே ஒரு கதவும் கீழே ஒரு கதவும் இருக்கும். வாயில் சாப்பிடும் சாப்பாடு உணவுககுழாய் வழியாக வயிற்றின் உள்ளே நுழைவதற்கு ஒரு கதவு இருக்கும். இந்தக் கதவு உணவு உள்ளே சென்றவுடன் மூடி விடும். சாப்பிட்ட பின் தலைகீழாக நிற்கும் பொழுது உணவு வாய் வலியாக வெளியே வராமல் இருப்பதற்கு இந்தக் கதவு தான் காரணம். இந்தக் கதவு உணவை உள்ளே மட்டுமே செளித்தும். மீண்டும் வெளியே செலுத்தாது. சில ஆபாத்துக் காலங்களில் வாந்தி வரும் பொழுது மட்டுமே அது திருக்கும். அதே போல் வயிற்றுக்குக் கீழே முடிவில் வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குச செல்ல ஒரு கதவு உள்ளது. இந்தக் கதவும் உணவை கீழ் நோக்கி மட்டுமே அனுப்பும். மேல் நோக்கி அனுப்ப அனுமதிக்காது. நம்மில் சிலருக்கு சாப்பிடும்பொழுதே ஏப்பம் வரும். இதன் காரணம் வயிற்றின் கீழே உள்ள கதவு திறந்து நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக ஜீரனமாகிய பிறகு அது வயிற்றிலிருந்து சிருகுடளுக்குத் தள்ளப்படும் பொழுது வயிற்றில் ஒரு காளியிடம் உருவாகும். உந்த காலியிடத்தை நிரப்புவதய்காக வயிற்றுக்குக் காற்று தேவைப்படும். அந்தக் காற்றை வாய் வழியாக உறிஞ்சுவதய்காக வயிற்றின் மேற்பக்க கதவு திறந்து காற்றை உள் வாங்கும். இந்த சப்தம் தான் ஏப்பம்.
நாம் சாப்பிடும்பொழுது சாப்பிட, சாப்பிட ஏப்பம் வந்தால். நாம் நன்றாக ஒழுங்காக மறையாக சாப்பிடுகிறோம் என்று பொருள். எனவே சிலருக்கு நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்ப்பார்கள். இவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைத் தெளிவு படுத்துகிறோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏப்பம் வந்தால் நம் வயிறு சாப்பாடு போதும் என்று சொல்கிறது என்று பொருள். உணவே சாப்பிடும்பொழுது ஏப்பம் வந்தால் நாம் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். ஆனால் முதல் ஏப்பம் வந்தவுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்று நாம் ஏற்கனவே டி.வி. டிகளில் கூறியிருப்போம். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் எய்படுகிறது. சிலருக்கு குறைந்த அளவு சாப்பிட்டவுடனேயே ஏப்பம் வந்து விடுகிறது. ஆனால் மீதும் ஒரு மணி நேரத்திய்குப் பிறகு அவர்களுக்குப் பசி ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் அப்பொழுது மறுபடியும் சாப்பிடுவது கிடையாது. நமது சிகிச்சையில் முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தி விட வேண்டும் என்றும் பசி எரித்தால் சாப்பிட வேண்டும் என்று இரண்டு விதிகள் உள்ளது. முதல் ஏப்பம் வந்தால் சாப்பாட்டை நிறுத்தி விட்டால் கண்டிப்பாக மீண்டும் பசித்தால் சாப்பிட வேண்டும். ஆனால் பலர் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் மறுபடியும் பசி எடுத்தால் சாப்பிடுவது கிடையாது.
எனவே முதல் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விட வேண்டும் என்ற விதி வீட்டிலேயே இருக்கும், நினைத்தால் சாப்பிடக் கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டுமே தயவு செய்து பயன்படுத்துங்கள். ஒரு சிலர் வேலைக்குச் செல்பவர்கள் காலை எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் ஏப்பம் வந்துவிடும். உடனே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் 12 மணிக்கு நன்றாகப் பசிக்கும். ஆனால் அவர்களுக்கு 2 மணிக்குத்தான் உணவு இடைவேளை கொடுப்பார்கள். இந்த நிலையில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கீழே கூறியுள்ள இரண்டு முறைகளில் உங்களுக்கு எது சாத்தியப்படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றுங்கள். 1. முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்த வேண்டும். ஆனால் பசி எடுத்தால் உடனே கண்டிப்பாக மீண்டும் சாப்பிட வேண்டும். 2. எப்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தாமல் உங்களுக்கு மனதிற்குப் பிடித்தது போல ஆசை தீர சாப்பிடுங்கள்.ஆனால் மறுபடியும் பசிஎடுக்கும் வரை காத்திருந்து மீண்டும் அடுத்து வேளை உணவைச் சாப்பிடவேண்டும்.
சிலருக்கு சாப்பிடபின் ஒருமணிநேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து ஏப்பம் வரும். இதற்குக் காரணம் அஜீரணம். அதாவது வயிற்றுக்குச் சென்ற உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல மணி நேரங்களாக வயிற்றில் இருந்து புளித்துகெட்டுப் போய் அதிலிருந்து வரும் கெட்ட காற்று தான் இந்த எப்பத்திற்கான காரணம். இது புளித்த ஏப்பம். எனவே யாருக்குப் புளித்தஏப்பம் வருகிறதோ நீங்கள் உணவை ஒழுங்காக சாப்பிடவில்லை என்று புரிந்து கொண்டு தயவு செய்துஇனிமேல் ஆரோக்கியமாக!
17. அம்மா தன் குழந்தையுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது.
எப்பொழுது ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜிரனமாவது கிடையாது. என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய்மார்கள் கேட்பீர்கள்.
ஒரு அம்மா தன் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது அவர் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார் .குழந்தையை அதட்டுவார்.சாப்பிடும் போது பேசாதே. கறிவேப்பிலையைச் சாப்பிடு. ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு.சட்னி தொட்டுக் கொள், கீழே கொட்டதே இப்படி அந்தத் குழந்தையைக் கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு ஒரு தாய் தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும். அனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது.
எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினிகளுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்.எனவே ஒரு தாய் தன் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை.
கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இவர்களும் சாப்பிடுவார்கள்.அப்படிச் சாப்பிடக் கூடாது. சில குழந்தைகள் நாம் சாப்பிடும் போது பக்கத்தில்வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். அப்பொழுது அந்தக்குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டோ அல்லது விரட்டிக் கொண்டோ மிரட்டிக் கொண்டோ அதட்டிக் கொண்டோநீங்கள் சாப்பிடும் பொழுது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே கைகுழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவது கொடுத்து விட்டுச்சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக!
18. சாப்பிடும் உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும்.
பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனித்துப் பாருங்கள்.அதில் உப்பு,காரம் இருக்கும். அனால் இனிப்பு,கசப்பு, துவர்ப்பு பொதுவாக நாம் சேர்த்துக் கொல்வதேல்லை.ஏற்கனவே நாம் பார்த்துருக்கிறோம். ஒவ்வொரு சுவைக்கும் ஒரு துணை உறுப்புக்கும் முகத்தில் உள்ள உறுப்புக்கும் ஒரு உணர்ச்சிக்கும் சம்மந்தம் உள்ளது என்பதை, சுவை மருத்துவத்தில் நாம் தெளிவாகப் பார்த்திருக்கிறோம்.அந்த அடிப்படையில் உப்பு,புளி,காரம் மட்டுமே உள்ள உணவை ஒருவர் சாப்பிடும் பொழுது இந்த மூன்று சுவைக்கு வேலை செய்யும் ஆறு உறுப்புகள் மட்டுமே உடலில் வேலை செய்யும்.இனிப்பு,கசப்பு,
துவர்ப்பு சாப்பிடாததால் இனிப்புக்கு இரைப்பையும்,மண்ணீர்லும்,கசப்பு, துவர்ப்புக்கு இருதயம்,இருதயத்தின் மேலுறை, உடலில் வேப்பக்கட்டுப்பாட்டு உறுப்பு, சிறுகுடல் ஆகிய நான்கு உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யாது.நாம் சாப்பிடுகிற உணவில் முதலில் வயிற்றுக்குச் செல்கிறது. அங்கே ஒரு மணி நேரம் இருக்கிறது. நாம் இனிப்புச் சாப்பிடாததால் வயிற்றுக்குத் தேவையான சக்தி கிடைக்காததால் வயிறு ஒழுங்காக ஜீரணம் செய்வது கிடையாது.
அடுத்த ஜீரண உறுப்பு சிறுகுடல். இந்தச் சிறுகுடலுக்கு கசப்பு, துவர்ப்பு சரியாகக் கிடைக்காததால் அதுவும் சக்தி இழந்து ஜீரணம் சரியாக செய்வதில்லை. இப்படி ஜீரணத்திற்கு தேவையான இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளை நாம் சாப்பிடாமல் இருப்பதால் தான் நமக்கு ஜீரண சக்தி குறைவாக உள்ளது. சில கலாங்களுக்கு முன்பு இனிப்பை தாராளமாகச் சாப்பிட்டு வந்தோம். அனால் சில மருத்துவர்களின் தவறான கருத்துப்படி இனிப்பு சாப்பிட்டால் சக்கரை
நோய் வரும் என்று கூறியதால் நாம் யாரும் இப்பொழுது இனிப்பைச் சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையிலேயே இனிப்பிற்கும் சக்கரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சக்கரை நோயைப் பற்றிக் கூறும் பொழுது தெளிவாகப் பார்த்து விட்டோம். எனவே இனிப்பை தாரளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கசப்பு, துவர்ப்பு யாருக்கும் பிடிக்காததால் அதைச் சாப்பிடுவதில்லை. ஜிரணத்திற்கும்நம் உடலுக்கு முக்கிய தேவை கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் தான் காரணம். எனவே இனிமேல் நம் உணவில் ஒவ்வொரு நேரம் சாப்பிடும் பொழுது இனிப்பு,கசப்பு, துவர்ப்பு,உப்பு,புளி,காரம் ஆகிய ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்வதால் நமது ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உணவை மருந்தாக மாற்ற முடியும்.
ஒரு சில நாடுகளில் இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய மற்றும் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். உப்பு,புளி,காரத்தை சேர்த்துக் கொள்வதில்லை. ஒரு சில நாடுகளில் உப்பு,புளி,காரம் மட்டுமே சாப்பிடுகிறார்கள். இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. இப்படி ஒவ்வொரு நாடுகளிலும் சில சுவைகளை சேர்த்துக் கொள்கிறார்கள்,சில சுவைகளை சேர்த்துக் கொள்வதில்லை.இது தான் நோயின் அடிப்படைக் காரணம். எனவே நாம் உண்ணுகிற உணவில் ஒவ்வொரு வேளை சாப்பிடும் பொழுது அறுசுவை உணவைச் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உப்பு,புளி,காரம் இருக்கிறது. இனிப்புக்கு ஏதாவது ஒரு இனிப்புப் பலகாரம் அல்லது இனிப்பான பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை சர்க்கரையால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக அச்சு வெல்லம்,உருண்டை வெல்லம்,பனங்கருப்பட்டி ,தேன்,பஞ்சாமிர்தம்,எல்லா வித பழங்களும் எடுத்துக்கொள்ளலாம். எனவே இனிமேல் நாம் சாப்பிடுகிற உணவில் ஏதாவது ஒரு இனிப்பைச் சேர்த்துக் கொள்வது ஜீரணத்திற்கு உதவி செய்ய முடியும்.
நாம் பொதுவாகக் கசப்பு,துவர்ப்பைச் சேர்த்துக் கொள்வதேயில்லை. கசப்பு, துவர்ப்பு சுவையை சாப்பிடுவதால் இதயம் பலமாகி நமக்குத் துணிவையும், தைரியத்தையும் கொடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகிறது. மற்றும் உடலின் உள்ள அனைத்து நோய்களையும் குனபடுத்துகிறது.எனவே இனிமேல் நமது உணவில் கசப்பு மற்றும் துவர்ப்பு மற்றும் சேர்த்துக் கொள்வோம். கசப்பைச் சேர்த்துக் கொள்வதற்கு எளிய வழி வாரம் இரண்டு முறை பாகற்காய் பொரியலைச் சாப்பிடலாம். பாகற்காயை வறுத்து சாப்பிடக் கூடாது. வேக வைத்துச் சாப்பிட வேண்டும். கீரை சாப்பிடுங்கள் என்று ஏன் எல்லா வைத்தியர்களும் கூறுகிறார்கள் என்றால் எல்லா கீரைகளிலும் கசப்பு,துவர்ப்பு நிறைய உள்ளது. நீங்கள் கசப்பிற்கும் துவர்ப்பிற்கும் தனித்தனியாக பொருளைத் தேடி அலைய வேண்டாம். கசப்பு உள்ள எல்லா பொருள்களிலும் துவர்ப்பு இருக்கும். துவர்ப்பு உள்ள எல்லா பொருள்களிலும் கசப்பு இருக்கும். எனவே கீரை வகைகளை முடிந்த வரை அதிகபடுத்திக் கொள்ளுங்கள். சுண்டக்காய், சுக்கிடிக் கீரை, பாவக்காய் வத்தல்,நார்த்தாஙகாய் உறுகாய் அல்லது ஒரு சாதாரண எலுமிச்சம் துண்டு ,எலுமிச்சம் பழம் தோல், வேப்ப இலை, வேப்பம்பூ இப்படி கசப்பான சுவையுள்ள பொருள்கள் நிறைய இருக்கிறது.இதில் ஏதாவது ஒன்றை நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றால் வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கொண்டால் அது நமது நாக்கிற்கு மிகுந்த கசப்பு துவர்ப்பைக் கொடுக்கும்.எனவே வெந்தயத்தைஅளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.வெந்தயம் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
பழைய படங்களில் பார்த்தால், ராஜா காலத்துப் படங்களில் விருந்து எப்படி இருந்தது என்று கூறுவது போலவும்,அறுசுவை உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதைப் புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் பழங்காலத்தில் அறுசுவை உணவுகளை சாப்பிட்டு நோய்களை வேரட்டியடித்தார்கள். அனால் இன்று நாம் சுவைகளைப் பார்த்து பயப்பட்டு நோய்களை வரவேற்கிறோம்.
எனவே தயவு செய்து ஒவ்வொரு வேளை உணவிலும் அறுசுவை இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்த்து எந்தச் சுவை இல்லையோ அந்தச் சுவையை சேர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.இந்த விஷயத்தைக் கேள்விபட்டு பல பேர் அறுசுவை உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். அனால் சில நேரங்களில் நம்மால் அறுசுவை உணவைச் சாப்பிட முடியாது. ஒரு வேளை உங்களுக்கு அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்பதால் அறுசுவை உணவு கிடைக்கவில்லையே என்ற வருத்ததுடனோ அல்லது அறுசுவை சாப்பிடாவிட்டால் அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் ஒரு மாதத்திற்கு தொண்ணுறு முறை நாம் உணவு உட்கொள்கிறோம். இதில் ஆரம்பத்தில் முடிந்தவரை மாதத்தில் பத்து முறையாவது அறுசுவை உணவைச் சாப்பிட முயற்சி செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் நாம் அறுசுவை சாப்பிட இயலாது. எனவே முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். ஒரு வேளை முடியாவிட்டால் முடியவில்லையே என்ற
கவலையுடன் சாப்பிடாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஒவ்வொரு வேளையும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நெல்லிக்கனியில் மட்டுமே ஆறு சுவை ஒன்றாக அமைந்துள்ளது.எனவே முடிந்தால் ஒவ்வொரு நேரமும் சாப்பிடும் பொழுது ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நேரமும் நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஒரு சில நேரத்தில் நெல்லிக்காய் திகட்ட ஆரம்பித்து விடும். எனவே ஒரு நாள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இளநீரில் ஆறு சுவைகள் உள்ளன. இளநீரை குடிக்கும் பொழுது ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி குடிக்க கூடாது. வாயில் வைத்து சுவையை இரசித்து குடித்தால் அந்த அறுசுவையும் நாக்கு வழியாக உடலுக்குள் புகுந்து மருந்தாக வேலை செய்கிறது.
எனவே நாம் சாப்பிடுகிற உணவில் அறுசுவை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு ஒவ்வொரு வேளையும் அறுசுவை சாப்பிடுவது மூலமாக நமது உணவை நன்றாக ஜீரணம் செய்ய முடியும். நமது சிகிச்சை முறையைக் கற்றுக் கொண்ட சில பேர் அறுசுவை உணவைச் சாப்பிட வேண்டும் என்ற இந்த டெக்னிக்கை அறுசுவை பொடி சாப்பிட வேண்டும் என்று தவறாகப் புரிந்து கொண்டு உள்ளார்கள். நீங்கள் யாராவது அறுசுவைப் பொடிகளை வாங்கிச் சாப்பிட்டு வந்தால் அது பலன் அளிக்காது. இயற்கையாக உணவில் அறுசுவை இருக்கும்.எனவே உணவில் அறுசுவை இருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு செயற்கை முறையில் செய்த அறுசுவை பொடிகளைத் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
19. சுவைகளை ரசித்து,ருசித்துச் சாப்பிட வேண்டும்
நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. இந்த சுவை நாக்கால் மட்டுமே ஜீரணிக்க முடியும். வயிற்றுக்குச் சுவையை ஜீரணிக்கத் தெரியாது. எனவே ஒரு உணவை வாயில் வைத்தவுடன் அதில் சுவை நிறையாக இருப்பது தெரிகிறது. நாம் மெல்ல மெல்ல அந்தச் சுவை காணாமல் போய் விடுகிறது. அப்பொழுது நாம் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அந்தச் சுவையைக் கிரகித்து சக்தியாக மாற்றுகின்றன. சுவையை ரசிக்காமல், ருசிக்காமல் ஒரு வேளை விழுங்கினால் அந்த சுவை வயிற்றால் ஜீரணிக்க முடியாது.ஏனென்றால் வயிற்றுக்குச் சுவையை ஜீரணம் செய்யத் தெரியாது. பொருளை மட்டுமே ஜீரணம் செய்யத்செய்ய தெரியும்.நாக்கால் ஜிரணிக்கப்பட முடியாத ஒரு சுவை மலமாக மட்டுமே போகும். எனவே உணவில் உள்ளச் சுவைகளைச் சக்தியாக மாற்ற வேண்டும் என்றால் ஒரு உணவில் உள்ள அனைத்து சுவைகளையும் ரசித்து, ருசித்து அந்த சுவை சப்பை ஆகும் வரை சுவையற்றுப் போகும் வரை வாயில் வைத்திருக்க வேண்டும்.நாம் ஒரு உணவை விழுங்குவதற்கு முன் சுவை கண்டிப்பாக இருக்க கூடாது.இப்படி சுவைத்துச் சாப்பிட்டால் சுவை மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியும்,பொருளினால் உருவாகும் பிராண சக்தியும் இரண்டு
பிராண சக்திகள் நமக்குக் கிடைக்கும். எனவே உணவைச் சாப்பிடும் பொழுது மென்று சுவைத்து முழுவதும் சுவையற்ற பிறகே விழுங்க வேண்டும். வாழ்வோம் ஆரோக்கியமாக!
20. எந்தந்தெந்தச் சுவைவை எவ்வளவு சாப்பிட வேண்டும்
பலருக்கு ஒரு சந்தேகம்.எனது உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதித்துள்ளன? எனக்கு எந்தச் சுவை வேண்டும்,வேண்டாம் நான் எந்தச் சுவைவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள்.உங்களுக்கு எந்தச் சுவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை உலகத்தில் யாராலும் கூற முடியாது.உங்களுக்கும் தெரியாது . வேறு எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் நமது உடலில் நாக்கு தான் டாக்டர்.
சுவை தான் மருந்து.எனவே உங்கள் நாக்கிற்கு மட்டுமே தெரியும்.எனவே ஒவ்வொரு வேளையும் இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள். உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேள்கிறதோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல் அனைத்து சவகளுக்கும் இதே டெக்னிக்கை கடைபிடியுங்கள்.அதாவது ஒரு திருமண வீட்டில் விருந்தில் சாப்பாடு.குழம்பு,மோர், பாயாசம்,இரண்டு பொறியல்கல்,கூட்டு,அப்பளம்,வடை இப்படி ஒரு பதினைந்து வகை பொருள்கள் வைத்திருப்பார்கள்.நீங்கள் நன்றாக வேடிக்கை பாருங்கள். ஒரு சில பேர் பொரியலைச் சாப்பிட்டிருப்பார்கள். ஒரு சிலர் ஒரு பொரியலைத் தொட்டிருக்க மாட்டார்கள்.இதற்குக் காரணம் என்னவென்றால் ஒவ்வொருத்தருடைய வேலையும்,ஒவ்வொருத்தருடைய உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களும்,உடலில் தேவைப்படும் சக்திகளும் வேறுபடுவதால் அவரவர்ககுக்கு வேறு வேறு சுவை தேவைப்படுகிறது.
எனவே நீங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். பலவிதமான உணவுகளைப் பலவிதமான சுவையுடன் சுவைத்துச் சாப்பிட ஆரம்பியுங்கள். படிக்கவில்லையேன்றால் சாப்பிடாதீர்கள். எனவே உங்கள் நாக்கு எவ்வளவு சுவையைக் கேட்கிறதோ அவ்வளவு சுவையைச் சாப்பிட்டால் உங்கள் உடலில் நோய்கள் குணமாகி ஆரோக்கியமாக இருப்பீர்கள் .
21. உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்
நமது முன்னோர்கள் சாப்பிடும் பொழுது முதலில் இலையில் இனிப்பான பொருளை வைத்திருந்தார்கள்.ஏனென்றால் இனிப்பு என்ற இரைப்பையையும், மண்ணிரலையும் வேலை செய்ய வைக்கும் சக்தி என்று பார்த்தோம். நாம் சாப்பிடுகிற உணவை முதலில் இரைப்பையையில் சென்று விழுகிறது . எனவே இரைப்பைக்கு சக்தியைக் கொடுக்கும் இனிப்பை முதலில் சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலர் உணவைச் சாப்பிட்டு பிறகு கடைசியாக இனிப்பைச் சாப்பிடுவார்கள். அதை விட சிறந்தது முதலில் இனிப்பைச் சாப்பிட்டு,பிறகு சாப்பிட ஆரம்பிப்பது.எனவே எப்பொழுது சாப்பிடும் பொழுதும் முதலில் இனிப்பை சாப்பிட ஆரம்பியுங்கள். அதற்காக சர்க்கரைப் பொங்கலை இரண்டு கரண்டி வைத்து முழு சர்க்கரைப் பொங்கலையும் முடித்து விட்டுப் பிறகு மற்ற பண்டத்தைச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள். முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள்.
பிறகு மற்ற எல்லா சுவைகளையும் சாப்பிட்டு விட்டு நடுவில் தேவைப்பட்டால் மீண்டும் இனிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாகவும் இனிப்பை சாப்பிடலாம்.இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு முறை. அவ்வளவு தான். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. மீண்டும்? ஞாபகப்படுத்துகிறேன். பலர் இந்த எல்லா முறைகளையும் படித்து விட்டு ஒவ்வொரு வேளையும் கஷ்டப்பட்டு இந்த முறைகளைக் கையாள வேண்டாம். ஒரு சில நேரத்தில் சில முறைகளைக் கையாள முடியும் அல்லது கையாள முடியாது.எனவே கவலை படாமல், பயப்படாமல் சாப்பிடுங்கள். முதலில் இனிப்பு எடுக்கவில்லையே என்ற எண்ணத்துடன் சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் கவலைப் படாமல் தைரியமாக சாப்பிடுங்கள்.வாழ்வோம் ஆரோக்கியமாக !
22. பல் இல்லாத நபர்கள் எப்படி மென்று சாப்பிடுவது?
பல் இல்லாதவர்கள் கடினமான உணவுகளைச் சாப்பிடவே கூடாது. பிறந்த குழந்தைக்குக் பல் இல்லை என்பதால் அந்தந் குழந்தைகளுக்குக் கடினமான உணவைக் கொடுக்கிரிர்களா? பால், தண்ணீர்,இளநீர் போன்ற நீராகாம் மட்டும் தானே கொடுக்கிறீர்கள். பல்லில்லாத குழந்தைகளுக்கு ஒரு நியாயம்? பல்லில்லாத பெரியவர்களுக்கு இன்னொரு நியாயமா? பல் இருக்கும் நபர்களே உணவை ஒழுங்காக மெல்லாமல் சாப்பிட்டு நோய்கள் வரும் பொழுது,பல்லே இல்லை என்றால் நீங்கள் எப்படி மெல்ல முடியும்? அந்த உணவு எப்படி ஜீரணமாகும்? எனவே பல் இல்லாதவர்கள் நீராகாரம் மட்டுமே
சாப்பிட வேண்டும். உதாரணமாக பழச்சாறு. எல்லா வகை பழச்சாறும் சாப்பிடலாம். இளநீர்,கஞ்சி,கூழ் இப்படி கடினமால இல்லாமல் நீராகாராமாக உள்ள பொருளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் மெதுவாக டீ சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டுமே தவிர கட கட என்று விழுங்கக் கூடாது, குடிக்கக் கூடாது. ஒரு வேளை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உங்கள் கைகளிக் கொண்டு நன்றாகப் பிசைந்து பல் செய்யும் வேலையை உங்கள் கைக்குக் கொடுக்க வேண்டும். பிறகு வாயில் வைத்து உடனே விழுங்கக் கூடாது. சிறிது நேரம் அடக்க வேண்டும். பல் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பதினைந்து முறை மென்று அதன் பிறகு விழுங்க வேண்டும். அப்பொழுது தான் அந்த உணவில் எச்சில் கலக்கும். நாக்கு சுவையை ரசிக்கும்.
மேலும் சில கடினமான பொருளைச் சாப்பிட வேண்டும் என்றால் சட்டியில் கீரையை வைத்து பருப்பு மத்தால் வைத்து (கடைந்து நாம் கீரையை சாப்பிடுவோம்). கீரை கடைவதை போல உங்கள் உணவை பருப்பு மத்தால் கடைந்து பிறகு நீங்கள் சாப்பிடலாம். புரோட்டா போன்ற மிகவும் கடினமான பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் சாப்பிடும் பொழுது மிக்சியை வைத்து அதில் புரோட்டாவையும் குரமாவையும் இட்டு இரண்டு நிமிடம் மிக்சியில் கூழ் செய்து அதை நீங்கள் சாப்பிடலாம். ஆக மொத்தம் பல் இல்லாதவர்கள் பல்லின் வேலைகளை கையிற்கோ, பருப்பு மத்திற்கோ, அல்லது மிக்சிக்கோ கொடுத்து அந்த வேலையை முடித்த பிறகு வாயில் அடக்கி வைத்து எச்சில் கலப்பதையும் சுவையை ரசிப்பதையும் செய்து விட்டு பின்புதான் விழுங்க வேண்டும்.
23. ஒரு குறிப்பிட்ட சுவைக்கு அடிமையானவர்கள் எப்படி வெளியே வருவது ?
ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட சுவையை மட்டும் எனக்குப் பிடித்திருக்கிறது என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டு வருவார்கள். அதாவது ஒரு சில சுவைக்கு நாம் அடிமையாகி இருக்கிறோம். இதற்குக் காரணம், செயற்கையான உணவுகள். இயற்கையான ஒரு உணவில் சுவைக்கு அடிமையாகும் எந்தவொரு கெமிக்கலும் கிடையாது. ஆனால் பாக்கெட்டில் அல்லது டப்பாவில் வாங்கும் பொருள்களில் அந்த உணவுப் பொருள்களின் நிறுவனங்கள் நாக்கை அடிமைப்படுத்துவதற்காக சில கெமிக்கலைச சேர்க்கிறார்கள். எனவே நாம் அந்தச் சுவைக்கு அடிமையாகிறோம். பிஷ்கடஷ், கூல்டிரிங்ஸ், அஜினமோட்டோ, மிக்சர் இப்படி எல்லா பொருட்களிலும் சுவைக்கு அடிமையாக்கும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே செயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை முடிந்தவரை சாப்பிடாமல் இருங்கள். அப்படி செயற்கையான பொருட்களில் நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடும் படி அடிமையாய் இருந்தால் இந்த நேரத்தில் நமது டெக்னிக் இந்த இடத்தில் ஒத்து வராது. நாக்குக்குப் பிடித்தச் சுவையை தாரளமாக சாப்பிடுங்கள் என்று கூறும் பொழுது செயற்கையான உணவுகளில் வேதிப் பொருட்கள் இருப்பதால் நமக்கு மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் எனவே இயற்கையான உணவுகளை நாக்குக்குப் பிடித்தமாதிரி தாராளமாய் சாப்பிடலாம்.
ஆனால் செயற்கையான உணவுகளைச் சாப்பிடும்பொழுது சற்று கவனத்தில் வைக்க வேண்டும். நாம் எந்தச் சுவைக்கும் அடிமையாகாமல் இருப்பதற்கு ஒரு இரகசிய வித்தை இருக்கிறது. ஒரு உணவுவை வாயில் வைத்தவுடன் நாம் நன்றாக மென்று சுவையை ரசித்து சுவை அற்றுப் போன நிலையில் விழுங்கும் பொழுது நாம் அந்தச் சுவைக்கு அடிமையாக மாட்டோம். ஒரு உணவை வாயில் வைத்து அரைக்குயாக மென்று அந்தச் சுவை நாக்கில் இருக்கும் பொழுதே வயிற்றுக்குள் தள்ளி விட்டு மீண்டும் அந்த உணவைச் சாப்பிட்டால் அந்த சுவையிலே இருக்கும் நாக்கு அதே சுவையை கேட்டுக்கொண்டேயிருக்கும். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்கலாம். ஒரு உணவை வாயில் வைத்து மென்று விழுங்கிய பிறகு வெறும் வாயை ஐந்து முறை மென்று எச்சில் கலந்து நாக்கை சுவையில்லாத ஒரு நிலைக்குக் கொண்டு சென்று மீண்டும் அதே பொருளைச் சாப்பிட்டால் அந்தச் சுவை விரைவாக திகட்டி விடும். மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாம் சாப்பிட மாட்டோம். எனவே ஒவ்வொரு முறை கையில் மூலம் வாயில் உணவைப் போடுவதற்கு முன்பும் வாயில் உள்ள சுவையைத் தீர்த்து வெறும் வாயை சப்பி பிறகு சாப்பிடும் பொழுது உணவு சுவையாகவும் இருக்கும். எந்த ஒரு சுவைக்கும் நாம் அடிமையாக மாட்டோம்.
வீட்டில் அன்பாக சமைத்த உணவு நல்லது.ஹோட்டல் உணவு கெட்டது
ஹோட்டலில் சோடா உப்பு, அஜினமோட்டோ மற்றும் பல உடலைக் கெடுக்கும் பொருட்களின் துணையுடன் சமைக்கிறார்கள். எனவே ஹோட்டல் சாப்பாட்டைத் தவித்துவிடுங்கள். வீட்டில் அன்பாக, அக்கறையோடு சமைத்த நல்ல உணவுகளைச் சாப்பிடுங்கள்.சமைபவர்களின் எண்ணம் என்ன என்பதை சமைத்த உணவைச் சாப்பிடும்போது கண்டிப்பாக முடியும்.எனவே சமைக்கும்போது நல்ல எண்ணத்தோடு, அக்கறையோடு , அன்பாக சமையுங்கள். பிரம்மகுமாரிகள் அனைவரும் மற்றாவர்கள் சமைத்த உணவைச் சாபிடமாட்டார்கள். அவர்களே சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுங்கள். எனவேதான், அவர்கள் மற்றவர்களைவிட எப்போதும் எனர்ஜியோடு இருக்கிறார்கள். எனவே மேலே கூறப்பட்டுள்ள முறைகளில் நாம் உணவைச் சாப்பிடுவதால் உணவு சிறந்த முறையில் ஜீரணமாகி உடலில் உள்ள அனைத்து தாதுப்பொருட்களும் நல்ல வீரியத்துடன் நல்ல தரத்துடன் இரத்தத்தில் கலக்கும். எனவே நாம் கூறப்பட்டுள்ள இந்த முறையின் மூலமாக தயவு செய்து உணவை சாப்பிட்டு வாழ்வோம் ஆரோக்கியமாக.
|
Thanks to : ValaiTamil