பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் வழிகள்

KoonthalPimple

  • பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலைக் குளியல் அழகுக்கு அழகு சேர்க்கும். தலையில் தேங்காய் எண்ணையை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங்காய் எண்ணை தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடைக்கும்.
  • கண்களுக்கு கீழே கருவளையம் விழுந்ததால் வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் மறையும்.
  • சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் மை போல் நன்றாக அரைத்து…. இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
  • முகம் அழகாக இருக்கும், ஆனால் கழுத்துக்கு முன்னும் பின்னும் கருமையாக இருக்கும். இதை நீக்க… நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி, குளிக்கும்போது கழுத்தில் சோப் தடவி, கூட்டை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள். நாளடைவில் கழுத்து கருமை நிறம் மாறிவிடும்.
  • குழந்தை பெற்ற பெண்கள், மூன்று மாதங்கள் கழித்து, கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் அல்லது கொள்ளு ஜுஸ் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் குண்டாகும் வாய்ப்பு குறைந்து ஸ்லிம்மாக இருக்கலாம்.
  • சூரியனின் சூடு கிளம்ப ஆரம்பிச்சாச்சு… கனமான போர்வையை தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து வீட்டுக்குள் ஆங்காங்கே தொங்க விடுங்கள். இல்லாவிட்டால் சுற்றிலும் கட்டி விடுங்கள். டர்க்கி டவலை நனைத்து ஜன்னலில் கட்டுங்கள். இப்போது செலவில்லாத ஏ.சி. ரெடி!
  • சிலர் ஒல்லிக்குச்சியாய் இருப்பார்கள்… உடல் குண்டாவதற்காக கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சிம்பிள் ஐடியா…. தினமும் அரைக்கீரை, பருப்பு மற்றும் நெய் சேர்த்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் பத்தே நாளில் உங்கள் உடலில் மாற்றம் தெரியும்!
  • சில பெண்களுக்கு இளநரை தோன்ற ஆரம்பிக்கும். இவர்கள் வீரியமான ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து, சீயக்காயை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கொட்டை எடுத்த நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.
  • உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அப்படிப்பட்டவர்கள் காற்று படும்படியான செருப்புகளை அணியவேண்டும். ஷூக்களை அணியும் பழக்கமுள்ளவர்கள், தினமும் சாக்ஸ்களை துவைத்து அணிய வேண்டும். கை, கால்களை நீரால் துடைத்து, விரல்களுக்கு இடையிலும் பவுடர் பூசுங்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.