குடல் புண் (Ulcer)
நேரா நேரத்திற்கு சாப்பிடவில்லை எனில் அல்சர் Ulcer வந்து விடும் என்று சொல்வார்கள். முன்னாலில் நமது வீட்டு தாய்மார்கள் அதிகமாக விரதங்களை இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அல்சர் பிரச்சனை வந்ததில்லை.
நாம் அதிகமாக கோபப்படும்போது அதிக வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்க ஆரம்பிக்கும்.
அதேபோல் அதிக கவலை, பயம் இருந்தால் அதிக வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்கும்.
மசாலா பொருட்கள், இரசாயன உணவுகள், இரசாயன மாத்திரைகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது அதிக வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்கும்.
அதிக வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்கும் போது அதை ஈடுகட்டும் வகையில் வயிற்றில் உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். அவ்வாறின்றி அந்நேரத்தில் காலம்தாழ்த்தி உண்ணும் போது அதுவரை குடல்பகுதி பாதிப்புக்குள்ளாகும்.
இதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதை பார்ப்போம்.
இரசாயன மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது வெறும் வயிறாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோபம், கவலை பயம் ஆகியவை வராமல் பார்த்துக் கொள்ளவும். அத்தகைய நேரங்களில் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். இறந்தவர்கள் வீட்டில் அதிக கவலையில் இருப்பவர்களை உணவு உண்ண வைப்பதைப் பார்த்திருப்போம்.
மசாலா பொருட்களை உண்ணும் போது மசாலா சுவையுடன் உணவுப் பண்டத்தின் சுவையையும் சுவைத்து உண்ண வேண்டும். ஏனெனில் மேலோட்டமாக மசாலா சுவை மட்டும் சுவைத்து அவசர கதியில் உண்ணும் போது மசாலாவிற்குள் இருக்கும் உணவுப் பண்டத்திற்கும் சேர்த்தே மசாலாவின் செரிமானத்திற்கான வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்கும். அது உணவுப் பண்டத்தின் செரிமான நீரின் வீரியத்தை விட அதிகம். இதனால் குடல்பகுதி பாதிக்கப்பட்டு அல்சர் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே மசாலா பண்டங்களை தவிர்க்கவும். முடியாதவர்கள் சிறிய அளவில் சுவைத்து நன்றாக மென்று உண்ணவும்.
அதிக பழங்கள், காய்கரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள்.
Category: தமிழ் மருத்துவம்