சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!
ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறு தானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறு தானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பயன் படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு – ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
தினை – இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.
சாமை – ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
சோளம் – உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு – எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு – உடல் எடையைக் குறைக்கும். மாத விடாய்க் கோளாறு களைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.
குதிரைவாலி – சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச் சிக்கலைத் தடுக்கும்.
Category: தமிழ் மருத்துவம்