பிரண்டையின் முக்கிய பயன்
வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- வாதம் அதிகரித்தால் உடல்வலி ஏற்படும்
- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு, வாந்தி, தூக்கமின்மையும்.
- கபம் அதிகரித்தால் சளித் தொந்தரவுகள் ஏற்படும்.
வாதம், பித்தம், கபம் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்பாட்டில் வைக்க பிரண்டை உதவுகிறது. பிரண்டையை துவையல் போல் செய்து சாப்பிட்டு வர வாதம், பித்தம், கபம் என்னும் இம்மூன்றையும் கட்டுக்குள் வைக்கலாம்.
பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து வதக்கி அத்துடன் நல்லெண்ணை, உளுந்தம் பருப்பு, மிளகாய்வத்தல் சேர்த்து வறுத்து, புளி, உப்புடன் துவையலாக அரைக்கவும்.
இதனை இட்லி, தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வாரம் ஒருமுறை உணவில் சேர்க்க உடல் ஆரோக்கியம் கூடும்
Category: தமிழ் மருத்துவம்