பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை வெளிகாட்டும் அறிகுறிகள்


எச்.ஐ.வி மட்டுமின்றி கிளமீடியா, ட்ரைக்கொமோனஸ், "Gonorrhoea", ஹெர்பெஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி என பல பால்வினை நோய் தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படுகின்றன.
எச்.ஐ.வி மட்டுமின்றி கிளமீடியா, ட்ரைக்கொமோனஸ், "Gonorrhoea", ஹெர்பெஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி என பல பால்வினை நோய் தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படுகின்றன. பொதுவாக மக்கள் மத்தியில் பால்வினை நோய்கள் என்பது குணப்படுத்த முடியாதது என்ற எண்ணம் நீடித்து வருகிறது.
ஆனால் ஒருசில பால்வினை நோய்களை தவிர மற்றவையை சீரான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என பால்வினை நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே அவர்களது துணையுடன் உறவில் ஈடுபடுவதன் மூலம் தொற்று எளிதாக பரவிவிடுகிறது. எனவே, முதலில் உங்கள் கணவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகளை எப்படி கண்டறிவது என தெரிந்துக் கொள்ளுங்கள்…
இதுவொரு பொதுவான ஆரம்பக்கால அறிகுறி ஆகும். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் பிறப்புறுப்பு பகுதியில் புண்கள் தென்படும்.
கணவருக்கு அந்த இடத்தில் இயற்கைக்கு மாறாக புண் அல்லது கொப்புளங்கள் போன்று ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இதை சாதாரணமாக விட்டுவிட வேண்டாம்.
சிறுநீர் / விந்து வெளிபடும் போதுவலி அல்லது எரிச்சல் ஏற்படுவது மற்றுமொரு அறிகுறி ஆகும். ஆனால், இதை அவர்களாக கூறாமல் நீங்கள் கண்டறிவது கடினம். ஆனால், நீங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது போன்ற உணர்வை வெளிப்படுத்துவதை வைத்து நீங்கள் அவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.
சிறுநீர் வெளியேறும் போது நிறத்தில் மட்டுமின்றி மோசமான நாற்றத்தை வைத்தும் கூட ஒருவருக்கு பால்வினை தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். இதுவும் இதன் அறிகுறிகளில் ஒன்று தான்.
ஒருசில பால்வினை நோய்களை தவிர மற்றவை குணப்படுத்தக் கூடியவை தான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, கூச்சப்படாமல் மருத்துவரை கண்டு ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள தவற வேண்டாம்.
Source:tamil4health.com

Category: தமிழ் மருத்துவம்

- August 31, 2016

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.