நன்மை தரும் விளாம்பழம்
- தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.
- விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
- விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
- தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.
- வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
- விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
- விளாம்பழத்தில் உள்ளே உள்ள சதைப் பகுதியை எடுத்து அத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
- விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்தமாகும். உடல் வளர்ச்சியைத் தூண்டும். ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்கள் மடிந்துவிடும்.
- குழந்தைகள் அடிக்கடி விளாம்பழத்தை சாப்பிட்டுவந்தால், எலும்புகள் உறுதியடையும். உடல் நன்றாக வளரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- விளாம்பழம் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். பற்களுக்கு உறுதி அளிக்கும்.
- வயதான காலத்தில் இதயத் துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.
- விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, பிடிப்பு, உடலில் ஊசி குத்துதல் போன்றவற்றைப் போக்கும்.
Category: தமிழ் மருத்துவம், பழமும் பலனும்