விந்து விருத்தியாக,கண் எரிச்சல்,சளி, இருமல் போக அரைக்கீரையை எவ்வாறு பயன்படுத்தலாம்?
இன்று எத்தனை பேருக்கு கீரை வகைகள் மொத்தமும் அத்துப்படியாக தெரியும் என தெரியவில்லை. முன்பெல்லாம் நமது வீட்டில் பாட்டி, அம்மா தினமொரு கீரையை சமைத்து வந்தார்கள்.
தெருக்களில் தினமும் ஒருசில மூதாட்டிகள் கூடைகளில் கீரையை கூவிக்கூவி விற்று வந்தனர். இன்று கீரை உண்ணும் பழக்கமும் காணவில்லை, கீரை விற்று வந்த பாட்டிகளும் காணவில்லை.
கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் அரைக்கீரை ஒன்றாகும். இதை உண்டு வருவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பது குறித்து இனிக் பார்க்கலாம்…
விந்து விருத்தியாக
பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, பசலைக்கீரை ஆகியவற்றை நெய், மிளகு, உப்பு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டு வர வேண்டும்.
தாய் பால் பெருக!
வாரம் தவறாமல் அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய் பால் நன்கு சுரக்கும்.
கண் எரிச்சல்!
கண் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் அரைக்கீரை சாப்பிட்டு வந்தால், கண் குளிர்ச்சி அடையும், கண் பார்வை தெளிவு பெறும்.
இரத்தம்!
ஏலரிசியை அரைக்கீரை சாறில் அரைத்து சாப்பிட்டு வந்தால் இரதம் சுத்தமாகும்.
சளி, இருமல்!
அரைக்கீரையை தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை தீரும், இருமல் குறையும்.
நரம்பு தளர்ச்சி!
அரைக்கீரையை சூடான சாப்பாட்டில் துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரி ஆகும்
காய்ச்சல்!
காய்ச்சல் உள்ளவர்களுக்கு அரைக்கீரையை மிளகு, சிறுபருப்புடன் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பாட்டில் கலந்து கொடுத்து வந்தால் காய்ச்சல் குறையும்.
படபடப்பு!
படபடப்பு குறைய அரைக்கீரை, தாமரைப் பூவுடன், ஏலக்காய் தட்டிப்போட்டு சேர்த்து, கஷாயம் போல வைத்து உட்கொண்டு வர வேண்டும். இது படபடப்பை குறைக்க உதவும்.Source:tamil4health.com
Category: தமிழ் மருத்துவம்