WHAT IS NAALUMAA YOGA?
அரை என்பதை ஒன்றின் கீழ் இரண்டு என்று எழுதுவோம். முக்கால் என்பதை மூன்றின் கீழ் நன்கு என்று எழுதுவோம். அதுபோல நாலுமா என்றால் ஒன்றின் கீழ் ஐந்து அதாவது ஒரே நேரத்தில் ஐந்து பயிற்சிகளை ஒன்றாகச் செய்வது நாலுமா யோகா.
உடற்பயிற்சி, ஆசனங்கள், சவ ஆசனம் அல்லது சாந்தி ஆசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் இந்த ஐந்து பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்தால் இதற்கு நாலுமா யோகா என்று பெயர்.
உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் செவி வழித் தொடு சிகிச்சை என்பது ஒரே சிகிச்சை என்பது போல எந்த நோயாக இருந்தாலும் இந்த நாலுமா யோகா என்ற நாம் வடிவமைத்த ஒரு பயிற்சியைச் செய்வது மூலமாக நம் நோய்களை நாம் சுலபமாகக் குணப்படுத்த முடியும்.
எனவே நாம் வடிவமைத்துள்ள நாலுமா யோகா முதல் கால் மணி நேரம் உடலிலுள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும். கனுக்கால், கால்மூட்டு, இடுப்பு, முதுகு, தோல், கைமூட்டு, மணிக்கட்டு, விரல்கள், கழுத்து மற்றும் கண் அடுத்து கால் மணி நேரத்தில் ஐந்து வகையான ஆசனங்கள் இருக்கும். உலகிலுள்ள அனைத்து ஆசனங்களையும் மொத்தம் 5 வகையாக பிரிக்கலாம்.
1. சமநிலை ஆசனம் அதாவது உடலிலுள்ள எந்தப் பகுதியும் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் திரும்பாமல் உடலை வளைத்து சுற்றாமலும் இருக்கும் ஆசனத்திற்கு சமச்சீர் ஆசனம் என்று பெயர்.
2. பின்னால் வளையும் ஆசனம்.
3. முன்னால் வளையும் ஆசனம்.
4. பக்கவாட்டில் வளையும் ஆசனம்
5. உடலை முறுக்கும் ஆசனம்.
இப்படி எந்த ஆசனமாக இருந்தாலும் இந்த ஐந்து வகைகள் அடக்கிவிட முடியும். எனவே எப்பொழுது யோகா ஆசனங்கள் நாம் பயிற்சி செய்யும் பொழுதும் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்த ஏதாவதொரு 5 ஆசனத்தை இந்த அடிப்படையில் செய்ய வேண்டும். எனவே நமது பயிற்சியில் சில முக்கியமான 5 ஆசனங்களை வடிவமைத்து கொடுத்துள்ளோம். இதன் மூலமாக நம் உடலில் அனைத்துப் பக்கங்களிலும் வேலை கொடுக்க முடியும்.
மூன்றாவது கால்மணி நேரத்தில் சவ ஆசனம் செய்ய வேண்டும். சவ ஆசனம் என்பது சாந்தி ஆசனமாகும். நாம் தரையில் தளர்வாக படுத்துக் கொண்டு ஒவ்வொரு உறுப்பையும் ஓய்வெடுக்க அனுமதிக்கும் ஆசனத்தின் பெயர் சாந்தி ஆசனம். நாம் நமது உடல் உறுப்புகளை என்றுமே நினைத்துப் பார்ப்பதே கிடையாது. நாம் எந்த உறுப்பை நினைத்து பார்க்கிறோமோ, அந்த உறுப்பு அதிக சக்தி கிடைத்து தன் நோயைத் தானே குணப்படுத்தும். இப்படி தினமும் கால் மணி நேரம் நம் உடல் உறுப்புகளை நினைத்து பார்ப்பது மூலமாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே நமது பயிற்சியில் சாந்தி ஆசனம் எனப்ப்படும் சவ ஆசனம் உள்ளது.
நான்காவது கால் மணி நேரத்தில் மூச்சுப் பயிற்சி உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சு என்பது மிகவும் முக்கியமான ஒன்று, சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் கூட இருந்து விடலாம். ஆனால் மூச்சுக் காற்று இழுக்காமல் உயிர் வாழ முடியாது. சாப்பாடு தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் பிராண சக்தியை மூச்சுக்காற்று மூலமாக கூட பெற்றுக் கொள்ளலாம். அந்த மூச்சுக் காற்றை ஒழுங்குப்படுத்தும் பயிற்சி மூச்சுப் பயிற்சியாகும். எனவே நாம் தினமும் கால் மணி நேரம் மூச்சுப் பயிற்சி செய்வோம்.
ஐந்தாவது கால் மணி நேரத்தில் தியானம் செய்வும். தியானம் என்பது மனதிற்கு அமைதி தரும் பயிற்சியாகும்.
இப்படி ஒன்னேகால் மணி நேரத்தில் கால் மணி நேரம் உடற்பயிற்சி கால் மணி நேரம் ஆசனம், கால் மணி நேரம் சவாசனம், கால் மணி நேரம் மூச்சுப் பயிற்சி, மற்றும் கால் மணி நேரம் தியானம் ஆகியவை மொத்தமாக அடங்கியது நாலுமா யோகா.
உடற்பயிற்சி உடலை உஷ்ணப்படுத்தும். ஆசனம் உடலை உஷ்ணப்படுத்தும் சுவாசனம் உடலை குளிர்ச்சியாகும். மூச்சுப்பயிற்சி உடலை உஷ்ணப்படுத்தும். தியானம் குளிர்ச்சியடைய வைக்கும். இப்படி குளிர்ச்சியையும், வெப்பத்தையும் மாற்றி மாற்றி நமது உடலுக்குக் கொடுப்பதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியமடைகிறது.
இந்த நாலுமா யோகாவில் கடைசியாக ஒரு இடத்தில் நீங்கள் ஆழ்மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை மூன்று முறை திட மனதுடனும், நம்பிக்கையுடனும். நினைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம். எனவே மனரீதியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகா செய்யும்பொழுது கடைசியாக வரும் அந்த இடத்தில் நான் அமைதியாக இருக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன். ஆனந்தமாக இருக்கிறேன் என்று நம் ஆழ்மனதில் பதிவு செய்வதன் மூலமாக நம் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து வெளியே வரலாம். மேலும் முதலில் உள்ள கால் மணி நேர உடற்பயிற்சிகளைச் செய்வதால் மூட்டு முழங்கால் வலி இருப்பவர்கள் அனைவருக்கும் அது நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்த நாலுமா யோகாவை DVD மூலம் பெற்றுக் கொண்டு உங்கள் வீட்டிலிருந்தபடியே DVDயில் உள்ள வீடியோவை கவனிப்பது மூலமாக நீங்களே இந்த பயிற்சியை செய்து கொள்ளலாம். DVD தேவைப்படுபவர்கள் இந்த புத்தகத்திலுள்ள விலாசம் அல்லது போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதை பெற்றுக் கொள்ளலாம்.
Category: தமிழ் மருத்துவம்