GUIDELINES TO BE FOLLOWED AFTER COMPLETION OF THE TREATMENT
A. உணவு(மண்)
1. சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2. பசி இல்லாதபோது சாப்பிடக் கூடாது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3.உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
4.நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
5.சாப்பிடும் பொழுது கண்களை மூடு, உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
6.சாப்பிடுவதற்கு அரை மணி நேரமும் முன்பும், பின்பும் நீர் அருந்த கூடாது.
7.சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் மூன்று முறை உள்ளங்கையில் நீரை உறிஞ்சி குடிக்க வேண்டும்.
8.குளித்த பின் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
9.சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.
10.டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட கூடாது.
11.பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
12. கால்களை தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக் கூடாது.
13.அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.
14.புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
15.முதல் ஏப்பம் வந்த உடன் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். ஆனால் பசி எடுத்தால் மீண்டும் சாப்பிட வேண்டும்.
16.முடிந்தவரை வீட்டு உணவு (நம்மேல் அக்கறை கொண்டவர்கள் செய்த உணவை) உண்ணவும்.
17.சர்க்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளை தாரளமாக சாப்பிடலாம்.
18. சாப்பிடும் போது நம் கவனத்தை உணவில் மட்டுமே வைக்க வேண்டும். வியாபாரம், குடும்பத்தை நினைக்க கூடாது.
19.பல் இல்லாதவர்கள் பருப்பை மத்து அல்லது மிக்ஸி துணையுடன் அரைத்து சாப்பிட வேண்டும்.
20.ஹோட்டல் உணவை விட வீட்டு சமையல் நல்லது. அன்பாக சமைத்தால் மிக நல்லது.
B. குடி தண்ணீர்(நீர்)
1. தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
2.தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
3.மினரல் வாட்டர் பாட்டில் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது.
4.நீரை பில்டர் செய்யக் கூடாது.
5.நீரை மண் பானையில் 2 மணி நேரம் வைத்த பின் பயன்படுத்தலாம்.
6.தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
7.சிறுநீர் கழித்தால் உடனே நீர் அருந்த வேண்டும்.
8.நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.
9.பருத்தி துணியில் நீரை வடிகட்டி குடிக்கலாம்.
10.வாழைப்பழம் தோல், செம்பு காசு அல்லது செம்பு தகடை குடிநீரில் போட்டு வைத்து அரைமணி நேரம் கழித்து நீரை குடிக்கலாம்.
11.குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
12. ஒரு நாளைக்கு கண்டிப்பாக இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.என்று அளவு கிடையாது.
C.காற்று (வாயு)
1.கொசுவர்த்தி காயில், லிக்யூடு கொசுவர்த்தி பயன்படுத்தக் கூடாது.
2.வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.
3.தூங்கும் பொழுது ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது.
4.கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.
5.24 மணி நேரமும் நல்ல காற்று உள்ளே வந்து, அசுத்த காற்று வெளியேறும் வகையில் காற்றோட்டம் இருக்க வேண்டும்.
D.ஓய்வு (தூக்கம்) (ஆகாயம்)
1.வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
2.டீ, காபி குடிக்க கூடாது.
3. வெறும் தரையில் படுக்க கூடாது.
4.உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும்.
5.மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம் ஆறு மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
6.தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7.இரவில் பல் விலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
8.தாடைக்கு கீழ் தடவி கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்
9.தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தல் நன்றாக தூக்கம் வரும்.
E.உழைப்பு(நெருப்பு)
1.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.உடலின் வெப்பநிலை 37C இருக்குமாறு A/C-ன் temperature ஐ மாற்றி வைக்க வேண்டும்.
3.உழைப்புக்கேற்ற உணவு (அ) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
4.தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும்,
5.இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.
6.உடல் உழைப்பு இல்லாவர்தவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது.. இதுதான் பல நோய்களுக்கு காரணம்.
Category: தமிழ் மருத்துவம்