THERE ARE THOUSANDS OF REASONS FOR DISEASES

இந்த இணையதளத்தில் நோய்களுக்கான காரணம் ஐந்து என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் நோய்களுக்கான காரணம் ஆயிரம் உள்ளது. அதில் முக்கியமான ஐந்தை மட்டுமே, இந்த காலக் கட்டத்தில் நாம் தவறு செய்யும் அந்த 5 காரணத்தை மட்டுமே தெளிவுபடுத்தி உள்ளோம். உண்மையில் நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. உதாரணமாக மனது கெட்டால் நோய் வரும். புத்தி கெட்டால் நோய் வரும். நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகள் மூலமாக நோய் வர வாய்ப்புள்ளது. ஆன்மீக சக்தி குறைவதால் நோய்கள் வரும். உயிர்ச் சக்தி குறைவதால் வரலாம். ஆரா என்ற சூட்சம உடல் அதன் சக்தியை இழப்பதன் மூலமாக நோய் வரலாம். நமது உடலுக்கு வெளியே உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களில் மாசு ஏற்படும்பொழுது மனிதர்களுக்கு நோய் வரலாம். கிரகங்கள் தன் நிலையை மாற்றும்பொழுது நோய் வரலாம். மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியில்லை என்றால் வரலாம். DNA, RNA ஜீன்ஸில் ஏற்படும் கோளாறுகள் மூலமாக வரலாம். இப்படி நோய்க்கான காரணங்கள் அடுக்கிக் கொண்டே போக முடியும். இருந்தாலும் இந்த புத்தகத்தில் முதல் ஐந்து விஷயத்தைப் பற்றி மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளோம்.

இந்தப் புத்தகம் வருடத்திற்கு ஒரு முறை பல மாற்றங்களுடன் பல தெளிவுகளுடன் வெளிவர உள்ளது. ஏனென்றால் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. எனவே இன்று நாம் புரிந்த விஷயங்களை வைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நாமும் தினமும் பல குருநாதர்களைச் சந்தித்துப் பல ஆராய்ச்சிகள் செய்து இந்தச் சிகிச்சையை மெருகுப்படுத்தவும், மேலும் தெளிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு கொண்டே இருக்கின்றோம். எனவே இந்த இணையதளத்தை படித்தவர்கள் ஒவ்வொரு மாதமும் புது பதிவை படித்து மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது உடலைக் கூட ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாமல். இரண்டாம் உலகப் போர் எப்பொழுது நடந்தால் நமக்கென்ன? கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்ததைத் தெரிந்து கொள்வதால் என்ன இலாபம்? இப்பொழுது TVகளிலும், பள்ளிகளிலும், பொது அறிவு நிகழ்ச்சி என்ற ஒரு போட்டி நடக்கின்றது. அந்தப் போட்டியில் குழந்தைகளை அமர வைத்து ஜப்பானில் தலைநகரத்தின் பெயர் என்ன? கென்னடி என்று பிறந்தார்? இரண்டாம் உலகப்போர் எப்பொழுது நடைபெற்றது? இது போன்ற அவசியமில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அதற்குப் பெருமையாக நாமும் பொது அறிவு அதிகமாக இருக்கின்றது என்று பீற்றி கொள்கிறோம். ஆனால் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்முடன் இருக்கும் உடல், மனம், புத்தி,உயிர் என்ற விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்கும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்றுமே தெரியாமல் விழி பிதுங்குகிறோம். எனவே தயவு செய்து நல்ல விஷயங்களைப் பாடப் புத்தகத்தில் சேர்க்குமாறு அரசையும், அரசு அதிகாரிகளையும் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற நல்ல விஷயங்களை உலகத்தில் பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயங்களை அவ்வளவு சாதாரணமாக யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப் பல விஷயங்களில் கஷ்டப்பட்டுப் புரிந்து கொண்ட இந்த இரகசியங்களை யாரும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. ஒன்று பலருக்கு இந்த விஷயம் புரிவதில்லை. புரிந்தவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அப்படிப் புரிந்தவர்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது உலகத்திலுள்ள மருந்து, மாத்திரை கம்பெனிகள் தன் பண பலத்தால் அந்த நபரை போலி டாக்டர், செக்ஸ் சாமியார் என்று கூறிக் பல தொல்லைகளைக் கொடுக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.ஏன்? விஷம் வைத்து கொலையே செய்கிறார்கள். இதற்குப் பயந்து நல்ல விஷயத்தை எவரும் வெளியே சொல்வதற்குப் பயப்பட்டு அமைதியாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள்.

இந்த செவி வழித் தொடு சிகிச்சையில் கூறப்பட்ட அனைத்து விசயங்களும் புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் கிடையாது. எல்லாம் ஏற்கனவே நம் முன்னோகள் வாழ்ந்த வாழ்க்கையின் ஆயிரத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே. ஆனால் இதைத்தான் திருவள்ளுவர், நபிகள், திருமூலர் மற்றும் உலகிலுள்ள பல நாடுகளில் பல மேதைகளும், அறிஞர்களும் பல காலக் கட்டத்தில் பல விதத்தில் கூறியுள்ளார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு அது புரிவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு கால கட்டத்திற்கு மக்கள் எப்படி ஏமாந்து உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டு எப்படிப் புரிய வைக்க வேண்டும் என்பதை யோசிக்கவேண்டும். இன்று இன்றைய கால கட்டத்தில் அறிவியல் ரீதியாக ஏமாந்து உள்ளார்கள் என்பதால் நாம் அறிவியல் ரீதியாகப் புரிய வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இப்பொழுது புரியும் இந்த செவிவழித் தொடு சிகிச்சை ஒரு வேளை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் புரியாமல் போகலாம்.

அப்பொழுது, புதிதாக ஒரு நபர் வருவார். அவர் அந்தக் கால கட்டத்தில் எப்படிப் புரிய வைக்க வேண்டுமென்பதை புரிந்து கொண்டு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் கொடுப்பார். எனவே இந்த செவி வழித் தொடு சிகிச்சை என்பது புதிய கண்டுபிடிப்போ, பெரிய இரகசியமோ கிடையாது. ஏற்கனவே இந்து மத வேதங்களிலும், திருமூலர் திருமந்திரத்திலும், திருவள்ளுவர் குறளிலும், நபிகள் நாயகத்தின் நபிகளின் மொழி என்ற புத்தகத்திலும் மற்றும் பல ஆன்மீகப் புத்தகங்களிலும் பல நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்களும், ஞானிகளும், இறை தூதர்களும் கூறிய விஷயங்களில் உள்ள தொகுப்புகள் இது.

நாம் ஒரு சாதாரண தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது ஒரு நாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் சம்பளத்தைப் பிடிக்கிறார்கள் ஒரு நாள் ஓவர்டைம் வேலை செய்தால் சம்பளம் சேர்த்துக் கொடுக்கிறார்கள். 100 பேர் வேலை செய்யும் ஒரு சாதாரண கம்பெனியிலேயே இந்தக் கணக்கு பார்க்கிறார்கள் என்றால் நம்மைப் படைத்த இறைவன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கணக்கு வைத்துச் சரியான முறையில் போனஸ் மற்றும் ஓட்டிகளை அதிகமாகவே கொடுப்பார். இதே போல் உலகிலுள்ள அனைத்து மக்களும் அவரவர்க்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளியே கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் இந்த உலகம் ஞான ஒளி பெற்று பிரகாசிக்கும்.

Thanks to : ValaiTamil

Category: தமிழ் மருத்துவம்

- February 7, 2017

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.