TO KNOW MORE ABOUT THE MIND

1.மனவளக்கலை மன்றம் – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஐயா

2. ஸ்ரீ பகவத் ஐயா

3. பிரம்மகுமாரி

4.கவனகர் ஐயா

1. மனவளக்கலை மன்றம்

மனதைப் பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்ள அருகில் உள்ள மனவளக்கலை அல்லது அறிவுத் திருக்கோவிலுக்கு செல்லுங்கள். அங்கே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களால் உருவாக்கப்பட பல பயிற்சிகளும் வகுப்புகளும் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்த வகுப்புகளில் எண்ணம் ஆராய்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் மற்றும் ஆசை சீரமைத்தல் போன்ற மனதை அமைதியாக வைத்துக் கொள்ளக் கூடிய அனைத்துப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம்.

2. ஸ்ரீ பகவத் ஐயா

ஞானியரை வணங்குவது சிறப்பல்ல நீங்களே ஞானியாவது தன் சிறப்பு என்று கூறும் இவரால் பலர் ஞானத் தெளிவு பெற்றிருக்கின்றனர்.ஞானம் என்றால் என்ன ?

அதை எவ்வாறு அடைவது என்பதை திருச்செந்தூரை சேர்ந்த ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி மனதைப் பற்றி தெளிவாக புரியவைக்கிறார்.

மேல் மனம், அடி மனம் மற்றும் ஆழ்மனம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை நமக்கு புரியவைத்து மனதை அமைதிப்படுத்த ஒரு நல்ல வழி காட்டுகிறார்.

மேலும் விபரங்களுக்கு www.pravaagam.org என்ற வெப் சைட்டில் இலவசமாக இவரின் புத்தகங்கள் மற்றும் ஆடியோவை டவுன்லோடு செய்து பயன்பெறலாம். அல்லது 999942 05880, 97891 65555 என்ற எண்ணில் ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள்.

3. பிரம்மகுமாரிகள்

எனக்கு மனதிற்கும், புத்திக்கும், ஆழ்மனதிற்கும் வித்யாசம் தெரியாமல் குழப்பமாக இருந்தபோது ஓசூரில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பை சார்ந்த வேடியப்பன் பிரதரர்தான் என்னை ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபுவுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் பலவிதமான விளக்கங்களை கொடுத்து புரியவைத்தார். இவர் நமது அனாடமிக் சிகிச்சையில் பல விஷயங்களை தெளிவுப்படுத்த உதவியாக இருந்தவர்.

எனவே மனது, புத்தி மற்றும் ஆழ்மனதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள அருகில் உள்ள பிரம்மகுமாரிஸ் சென்டருக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்.

4. கவனகர் ஐயா

மெகா டிவி புகழ் 16 கவனகர், திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் ஐயா அவர்களில் மனம் ஒரு மாபெரும் சக்தி என்ற அவரின் ஆடியோ CD ஐ கேட்பது மூலமாக மனதைபற்றி புரிந்து கொள்ளலாம். இவர் பாமர மக்களுக்கு புரியுமாறு நகைச்சுவை கலந்து மனதைப்பற்றி புரிய வைக்கிறார்.

Thanks to : ValaiTamil

Category: தமிழ் மருத்துவம்

- February 7, 2017

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.