THE MIND AND THE BRAIN

நம் அனைவருக்கும் மனது என்றும், புத்தி என்றும் இரு விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இது என்ன செய்கிறது என்று பலருக்கும் தெரியாது. எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்ளப் போக்கிறோம். அதைபற்றி தெரிந்து கொள்வதால், நம் உடலை ஆரோக்கியமாக்க முடியும். ஏனென்றல் மனதுக்கும், உடலுக்கும் சம்பந்தம் எப்படி உள்ளது என்பதை ஏற்கனவே நாம் பல இடங்களில் பார்த்துள்ளோம்.
மனது என்பது ஒரு கீ போர்டு அல்லது பியானோ போன்றது. ஒரு பியானோவில் நாம் விரல்களை வைத்து அழுத்தும்பொழுது சத்தம் கேட்கிறது. ஒரு முறை அழுத்தினால், ஒரு சத்தம் வரும். வந்த சத்தத்தை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தால் வந்த சத்தம் நின்று விடும். அப்படித்தானே? வந்த சத்தத்தை நிறுத்துவதற்கு நாம் எதாவது முயற்சி செய்து பியானோவை மீண்டும் மீண்டும் அழுத்தினால் மீண்டும் மீண்டும் சத்தம் வரும். இதைப் புரிந்து கொண்டால் மனதைப் புரிந்து கொள்ள முடியும். மனம் என்ற பியானோவில் சத்தம் என்ற எண்ணம் தோன்றும். மனம் என்று இருந்தால் எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். வந்த எண்ணத்தை ஒன்றும் செய்யாமல் அதாவது கண்டு கொள்ளாமல் சும்மா இருந்தால் அந்த எண்ணம் தானாக மறைந்து விடும்.
இப்படித்தான் நம் மனதில் கோபம். பயம், டென்சன், பொறாமை போன்ற பல கெட்ட எண்ணங்களும் பல நல்ல எண்ணங்களும் வருகின்றன. அவ்வாறு வரும் எண்ணங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தானே மறைத்து அதனால் நமக்கு எந்த துன்பமும் வராது. எந்த என்னகங்களை நாம் பிடித்து இழுக்கிறோமோ அல்லது அதைக் கவனித்து ஏற்றுக்கொள்கிறோமோ அந்த எண்ணத்தின் மூலமாக நல்ல விசயங்களோ அல்லது கெட்ட விசயங்களோ நடக்கும். இப்படி ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு வலிமையையும் வீரியமும் உண்டு. அந்த எண்ணத்தின் சக்திக்கு ஏற்றாற்போல நமக்கு நல்ல அல்லது கெட்ட விஷயங்கள் நடக்கின்றன. எனவே, மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்தையும் பியானோவில் வரும் சத்தத்தைப் போல எந்த சத்தம் தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு எந்த எண்ணம் தேவையில்லையோ அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாலே நம் மனது என்றுமே அமைதியாக இருக்கும்.
நாம் நம் வீட்டில் முன்னாள் உள்ள சாலையில் அமர்ந்து கொண்டு சும்மா வேடிக்கைப்பார்த்தால் அந்தச் சாலை வழியாகப் பலபேர் நடந்து செல்வார்கள். ஆனால், அவர்களால் நமக்கு எந்த ஒரு நன்மையோ, தீமையோ கிடையாது. இப்படி சும்மா இருக்காமல் சாலையில் இருக்கும் யாரையாவது நாம் கூப்பிட்டு எங்கே செல்கிறீர்கள்? நீங்கள் யார் ? என்று ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் நம்மிடம் வந்து நமக்கு சந்தோசத்தையோ அல்லது துக்கத்தையோ கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள். நாம் கூப்பிடும் நபரைப் பொறுத்து, நாம் பேசும் வார்த்தையைப் பொறுத்து நமக்கு இன்ப துன்பம் வரும், நாம் கண்டு கொள்ளாத எந்த எண்ணத்தாலும் நமக்கு எதுவும் ஏற்படாது. எந்த எண்ணத்தை அழைக்கிறோமோ அந்த எண்ணம் வந்து நாம் வாழ்வில் இன்பம் ஆல்லது துன்பத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும். எனவே நாம் நமக்குக் கெடுதல் செய்யும் எண்ணங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் கற்றுக் கொண்டால் மனது என்றும் அமைதியாக இருக்கும்.
மனதில் எண்ணம் தோன்றும், அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் எந்த துன்பமும் இருக்காது என்பது எங்களுக்கே தெரியும். இதை நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம். அந்த எண்ணங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்பது தான் எங்கள் பிரச்சனை என்று நீங்கள் கூறுவது நமக்குப் புரிகிறது. பலர் கூறுகிறார்கள். மனதில் தோன்றும் எண்ணத்தை ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடிவதில்லை. இதற்கு நாங்கள் என்ன செய்வது? உண்மையில் அது ஒரு பெரிய வித்தை கிடையாது. அது எல்லோராலும் முடிந்த ஒரு சாதாரணமான விஷயம்தான். அதற்கு ஒரு சில உதாரணம் கூறுகிறேன்.
ஒரு நூறு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நின்று கொண்டு கீழே பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு எண்ணம் தோன்றும். இப்படியே கீழே விழுந்தால் நாம் இறந்து போய்விடுவோம் என்று தோன்றுகிறது அல்லவா. உடனே நீங்கள் கீழே குதித்து மண்டை உடைத்து இறந்து விடுகிறீர்களா? இந்த எண்ணத்தை என்ன செய்கிறீர்கள். ஒன்றும் செயல்படுத்தாமல், கண்டு கொள்ளாமல் சும்மா விட்டு விடுகிறீர்கள் அல்லவா? அதேபோன் ஒவ்வொரு கணவருக்கும் தன் மனைவி கொடுக்கும் டார்ச்சரில் வீட்டிற்குச் சென்று ஓங்கி அறைய வேண்டும் என்றும் தோன்றுகிறது அல்லவா? இந்த எண்ணத்தை என்ன செய்கிறீர்கள். உங்களால் அறைய முடியுமா? அந்த எண்ணத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே சும்மா கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறீர்கள் அல்லவா? அது மட்டும் எப்படி முடிகிறது. எல்லா தொழிலாளிக்கும் தன் முதலாளியை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துகிறீர்களா? இப்படி நிறைய உதாரணம் கூறலாம்.
எனவே, மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் பல விஷயங்களில் நாம் கண்டு கொள்ளாமல், வேறு வழியில்லாமல் சும்மா இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டு கோபம், டென்சன், பயம் போன்ற கெட்ட எண்ணங்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பது மூலமாக நம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும், தனியாக அமர்ந்து யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும். இன்று ஆரம்பித்தால் குறைந்தது ஆறுமாதம் முதல் ஒரு வருடத்திற்குள் நீங்கள் இதைப் பழகிவிட்டால் இனி உங்கள் வாழ்க்கையில் உங்கள் மனதிற்குக் கெட்ட எண்ணங்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் என்றும் அமைதியாக மட்டுமே இருப்பீர்கள்.
Category: தமிழ் மருத்துவம்