HOW TO LEARN YOGA EXERCISES

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் மனவளக்கலை மன்றம் என்ற வகுப்பில் கலந்து கொண்டு அவர் வடிவமைத்த எளிய முறை உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்வதன் மூலமாக நாம் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து உடலின் வெப்பத்தை ஒழுங்குப்படுத்த முடியும். எனவே தயவு செய்து அருகிலுள்ள அறிவுத்திருக்கோவில் அல்லது மனவளக்கலை மன்றம் என்ற பெயரில் உள்ள மையங்களுக்கு சென்று பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள்.
நமது உடலின் வெப்பநிலை 37 C(98.4 F F) இதை எப்பொழுதும் சராசரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமது உடலில் ஆரோக்கியம் இருக்கும். எனவே எந்த நாட்டில் இருந்தாலும் எவ்வளவு வயது ஆனாலும் நம் உடலின் வெப்பநிலை 37 C மட்டுமே எப்பொழுதும் இருக்கும். எனவே யோகா பயிற்சிகள் என்பது இந்த 37 C ஐ ஒழுங்காக பார்த்துக் கொள்வதற்கான பயிற்சி ஆகும். அனைத்து நாட்டு மக்களுக்கும் இது தேவைப்படும். யோகா என்ற பயிற்ச்சியில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்டது என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். உடலின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதற்கு ஒரு பயிற்சி அவ்வளவு தான் எனவே மீண்டும் கூறுகிறோம். இந்த செவி வழி தொடு சிகிச்சை என்ற Anatomic Therapy யும் யோகா பயிற்சிகளும் எந்தவொரு குறிப்பிட்ட மதமும் சம்பந்தப்பட்டது கிடையாது. எனவே தயவு செய்து இந்த சிகிச்சைக்கு ஒரு மதத்தின் முத்திரையை குத்த வேண்டாம்.
Category: தமிழ் மருத்துவம்