WORK (FIRE ENERGY)

நமது உடலில் இரத்த ஓட்டத்தைப் பம்ப் செய்வதற்கு இருதயம் என்று உறுப்பு உள்ளது. இந்த இருதயம் நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும்,ஞாபகம் வைத்திருந்தாலும், மறந்தாலும், அது தன் வேலையை மறக்காமல் செய்து கொண்டே இருக்கும் . நம் உடலில் இரத்த ஓட்டத்தைப் போலவே நிணநீர் ஓட்டம் என்று ஒன்று உள்ளது இதை ஆங்கிலத்தில் லிம்பாட்டிக் சிஸ்டம் என்று கூறுவார்கள், இதைப்பற்றி யாரும் பேசுவதும் கிடையாது. கவலைப்படுதுவதும் கிடையாது. நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவை எடுத்துச் செல்வது இரத்த ஓட்டம் அதே சமயம் அனைத்து உறுப்புகளுக்கும் உள்ள நோய்களிக் குணப்படுத்துவதற்கு மருந்து எடுத்து செல்வது நிணநீர் ஓட்டம். இரத்த ஓட்டம் போலவே இந்த நிணநீரும் எப்பொழுதும் உடலில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நிணநீர் ஓட்டத்தைப் பம்ப் செய்வதற்கு நமது உடலில் எந்த இருதயமும் கிடையாது. யாருடைய உடலில் உழைப்பு இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்த நிணநீர் ஓட்டம் இருக்கும். உடல் உழைப்பு இல்லையென்றால் நிணநீர் ஓட்டம் நின்றுவிடும்.
ஆட்டோமெட்டிக் வாட்ச் என்று ஒரு வாட்ச் உள்ளது. இதை பார்த்திருக்கிறீர்களா? இந்த வாட்ச்க்குப் பேட்டரி கிடையாது. சூரிய ஒளியில் ஓடாது. கையில் காட்டினால் ஓடும். கழற்றி டேபிளில் வைத்துவிட்டால் ஓடாது. இப்பொழுது அந்த வகை வாட்ச் அதிகம் இல்லை. ஆனால் முதலில் நாம் பயன்படுத்தி வந்தோம். அந்த வாட்ச் ஆடிக்கொண்டிருந்தால் ஏதாவது ஒரு அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தால் ஓடிக்கொண்டே இருக்கும். அசைவு இல்லாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டால் அது இயக்க சக்தி இல்லாமல் நின்று விடும். இந்த வாட்சைப் பற்றி புரிந்து கொண்டால் நிணநீர் ஓட்டத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். யாருடைய உடலில் அசைவுகள் இருந்து கொண்டே இருக்கிறதோ அதாவது உடலுக்கு வேலை கொடுப்பவர்களுக்கு இந்த நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். உடலிற்கு வேலை கொடுக்காமல் சோம்பேறியாக இருக்கும் நபர்களுக்கு இந்த நிணநீர் ஓட்டம் சரியாக ஓடாது. எனவே தான் பலருக்கு நோய்கள் வருகின்றன. மேலும் வந்த நோயும் குணமாவது கிடையாது.
எனவே தான் வாக்கிங் போனால், உடற்பயிற்சிகள் செய்தல், யோகா ஆசனங்கள் செய்தால் நமக்கு நோய்கள் குணமாவது தெரிகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் தன் உடலிலுள்ள அனைத்து சதைகளுக்கும், இணைப்புகளுக்கும் ஏதாவது ஒரு அசைவை, அதிர்வை, வேலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிணநீர் ஒழுங்காக ஓடி உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். எனவே தான் உடல் உழைப்பு இருப்பவர்களுக்கு எந்த நோயும் வருவதில்லை. உடலில் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே அதிகமாக நோய்கள் வருகின்றன.
என்னிடம் பல பேர் எனக்குப் பல வருடமாக நோய் இருக்கிறது. ஆனால் பல வைத்தியம் பார்த்தும் குணமாக வில்லை என்று வருகிறார்கள். அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் யோகா செய்கிறீர்களா? பலரும் அதெல்லாம் செய்வது கிடையாது. அதற்கு நேரம் இல்லை என்று கூறுகிறார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் கிடையாது. ஆனால் நான் தினமும் ஏதாவது ஒரு பயிற்சிகளைச் செய்து கொண்டே இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கும் நானே தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஏதாவது ஒரு பயிற்சியைச் செய்யும்பொழுது நோய் வந்த பிறகு நீங்கள் ஏன் யோகா பயிற்சிகளைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் யோகா கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே தயவு செய்து யோகா கற்றுக்கொள்ளுங்கள். தினமும் உடலுக்காக ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்கி அதில் சில பயிற்சிகள் செய்யும் பொழுது நம் உடலிலுள்ள அனைத்து நிணநீர் ஓட்டங்களும் ஒழுங்காக ஓடும்பொழுது நம் நோயை நாமே குணப்படுத்தி கொள்ளலாம்.
யோகா என்றால் அனைவருக்கும் ஒரு பயம். ஏனென்றால் கை, கால்களை மடக்க வேண்டும். குனிய வேண்டும். நிமிர வேண்டும். நம்மால் முடியுமா என்ற சந்தேகம் உள்ளது யோகா என்றால் கை களையும், கால்களையும் மடக்குவது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் யோகா என்பது நம் உடலையும் மனதையும் மூச்சையும் புத்தியையும், உயிரையும் ஒன்று சேர்க்கும் ஒரு கலை.
யோகாவில் ஒரு அங்கம் தான் இந்தக் கை, கால்களை மடக்குவது என்ற ஆசனம் செய்வது ஆகும். ஆசனங்கள் மட்டுமே யோகா கிடையாது. யோகா என்பது மொத்தம் எட்டு வித அங்கங்களைக் கொண்டது.
(1)இமயம்
(2)நியமம்
(3)ஆசனம்
(4)பிராணாயாமம்
(5)பிரக்தியாகாரம்
(6)தாரணை
(7)தியானம்
(8)சமாதி
1. இமயம்
இமயம் என்பது என்னவென்றால் நாம் எதை எதை செய்யக் கூடாது என்பதை புரிந்து கொள்ளும் ஒரு கலை. நாம் எந்தெந்த தவறான பழக்க வழக்கங்களினால் உடல், மனம், புத்தி, உயிரைக் கொடுக்கிறோம் என்று புரிந்து கொண்டு அந்தக் காரியங்களை செய்யாமல் இருப்பதைப் புரிந்து கொள்வது இமயம் ஆகும்.
2. நியமம்
நாம் எதை எதை செய்ய வேண்டும், நல்ல பழக்கங்கள் என்ன, அதைச் செய்வதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு கலை நியமம் ஆகும்.
3. ஆசனம்
ஆசனம் எனது நம் உடலிலுள்ள அனைத்து தசைகளுக்கும், எலும்புகளுக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் அசைவைக் கொடுத்து உடலிலுள்ள நிணநீர் ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஒரு பயிற்சிதான் ஆசனம். ஆனால் நம்மில் பலர் ஆசனம் செய்வதை மட்டுமே யோகா என்று தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.
4. பிராணாயாமம்
நமது உடலில் பிராண உடல் என்று ஒன்று உள்ளது. மூச்சுப் பயிற்சிகள் மூலமாக குறிப்பாக நாடிஸ்ருதி, பஸ்திரிகா, கபாலபதி, பிராணாயாமம், அக்னிஷார் இது போன்ற பல பயிற்சிகள் மூலமாக நமது உடலிலுள்ள மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்தி பிராண உடலை சரிசெய்யும் ஒரு கலைக்குப் பெயர் பிராணாயாமம் ஆகும்.
5. பிரத்தியாகாரம்
பிரத்தியாகாரம் என்பது நமது உடலிலுள்ள ஐந்து இயந்திரங்களை அதாவது, பார்த்தால், நுகர்தல், கேட்டால், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய ஐந்து உணர்ச்சிகளை அடக்கி அல்லது மறந்த ஒரு நிலைக்கு பெயர் பிரத்தியாகாரம்.
6. தாரணை
தாரணை என்பது நம் மனம் ஒரே ஒரு விஷயத்தை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் இதற்குப் பெயர் தாரணை என்று கூறுவார்கள். நம் மனம் ஒரு பொருளையோ, ஒரு பூவையோ, குல தெய்வத்தையோ, நமக்குப் பிடித்த நபரையோ மட்டுமே நினைத்துக் கொண்டு வேறு எந்த விசயத்தையும் கவனிக்காமல் ஒரே விஷயத்தை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மனம் ஒடுங்கும். இதற்குத் தாரணை என்று பெயர்.
7. தியானம்
தியானம் என்பது என்ன? தாரணையின்பொழுது ஒரே ஒரு விஷயத்தை நினைத்து கொண்டிருக்கும் நாம் அந்த விஷயத்தையும் மறந்து எதையும் நினைக்காமல் ஐந்து இந்திரியங்கள் மூலமாக எதையும் கேட்காமல் எதையும் உணராமல் சும்மாவாக இருப்பது தியானம் ஆகும்.
தியானம் எனது குறுகிய காலத்தில் அதாவது ஒரு நிமிடம். இரு நிமிடம் இது போன்ற குறுகிய காலத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் இருந்தால் இதற்குத் தியானம் என்று பெயர்.
8. சமாதி
நீண்ட நேரமாக அதாவது ஒரு மணி நேரம் இரண்டும் மணி நேரம் நாம் தியானத்தில் இருந்தால் இதற்கு பெயர் சமாதி.
எனவே யோகா என்பது மொத்தம் 8 அங்கங்கள் உள்ளது. இதில் நமது செவி வழித் தொடு சிகிச்சை(Anatomic Therapy) என்ற சிகிச்சை யோகாவில் முதல் இரண்டு அங்கங்களே. இந்தச் சிகிச்சையும், யோகாவையும் தனித்தனியாக தயவு செய்து பார்க்கவேண்டாம். யோகாவில் இரண்டு அங்கங்களைப் புரிந்து கொண்டால் அதற்குப் பெயர் Anatomic Therapy. யோகாவில் முதல் இரண்டு அங்கங்கள் எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது. ஆனால் எல்லா யோகா மையங்களிலும் நேரடியாக எடுத்தவுடன் ஆசனத்திலோ அல்லது தியானம் செய்வதற்கோ அல்லது மூச்சுப் பயிற்சியோ கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் குறைவாகவே இருக்கும்.
முதலில் ஒரு மனிதன் என்ன செய்யக்கூடாது என்பதை நிறுத்த வேண்டும். இரண்டாவது என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு பழக வேண்டும். மூன்றாதாக மட்டுமே அவர்கள் ஆசனங்களைச் செய்யவேண்டும். இது தான் முறை. எனவே யோகா பயிற்சிகளை ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள் நமது சிகிச்சையின் மூலமாக முதல் இரண்டு அங்கங்களையும் புரிந்து கொண்டு, பிறகு நீங்கள் செய்யும் பயிற்சியைச் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். அதில் உபயோகமாகவும் இருக்கும்.
நம் முதலில் இந்தச் சிகிச்சைக்கு ஆச்சாரம், அனுஷ்டானம் என்று பெயர் வைத்திருந்தோம். சாரம் என்றால் பழக்கம், ஆச்சாரம் என்றால் நல்ல பழக்கம். அனுஷ்டானம் என்றால் கடைபிடித்தல். நாம் கோயம்புத்தூரில் பல வருடங்களுக்கு முன்பாக ஆச்சாரம், அனுஷ்டானம் என்ற பெயரில் பயிற்சிகளை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நோட்டீஸ்களை அடித்து, அனைவருக்கும் விநியோகம் செய்தோம். ஆனால் யாரும் வரவில்லை. எனக்குத் தெரியாத நல்ல பழக்கம் மற்றவர்களிடம் சென்று கற்றுக்கொள்ள வேண்டுமா? என்று அனைவரும் கேட்டார்கள்.
அதன் பிறகு தச மருந்து செய்வது எப்படி என்று பயிற்சிகள் ஏற்பாடு செய்தோம். நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து தச மருந்து என்ற ஒரு மருந்தைத் தயாரித்து அந்த மருந்தின் மூலமாக உலகிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று விளம்பரம் செய்தோம். வருபவர்களுக்கு நமது இந்தச் சிகிச்சை முறையை விளக்கமாக எடுத்துக் கூறி நாம் சாப்பிடுகிற உணவை தரமான சக்தி வாய்ந்த இரத்தமாக மாற்றுவதன் மூலமாக நோய்கள் குணப்படுத்த முடியும் என்று கூறி வந்தோம். அதற்கும் யாரும் வரவில்லை. இப்படிப் பல வருடங்களாக நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்லும் பொழுது யாரும் வரவில்லை. கடைசியாக யாருக்கும் புரியாத பாசையில் பேர் வைத்தால் இதில் என்னவோ இருக்கிறது என்று நமக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டு நாம் அதை கற்றுக் கொள்ளவருகிறோம். என்று,
மிகவும் குளிர்ச்சியான நாடுகளாகிய சுவிட்சர்லாந்து, நார்வே, US போன்ற நாடுகளில் நாம் அதிகமாக உடல் அசைவுகளை ஏற்படுத்த வேண்டும். சூடான நாடுகள் குவைத், கத்தார், செளதி அரேபியா போன்ற நாடுகளில் குறைவாக உடல் உழைப்பு இருந்தால் போதும். ஏனென்றால் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.
நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வீட்டு வேளைக்கு யாராவது சென்று இருக்கிறீர்களா? ஆனால் வெப்ப நாடுகளாகிய குவைத், கத்தார், செளதி அரேபியா போன்ற நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அதிக ஆட்கள் பிற நாடுகளிலிருந்து செல்வார்கள். அதாவது குளிர்ச்சியான நாடுகளில் அவரவர் தன் வேலைகளைச் செய்வதன் மூலமாக உடல் உழைப்பை அதிகம் செய்து வெப்ப சக்தியை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். நமது இரத்தத்தில் சூடு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வீரியமாக ஓடும். அதே சமயம் வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் யார் உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நோய் வரும். எனவே அவர்கள் உழைப்பைக் குறைக்க வேண்டும்.
எனவே குளிர்ச்சியான நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் அதிக நேரம் உடல் பயிற்சி செய்யவேண்டிய அவசியம் உள்ளது. வெப்ப நாடுகளில் உடற்பயிற்சி, ஆசனம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர்கள் வெப்பத்தைக் குறைப்பதற்குத் தேவையான சவாசனம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும், யோகா ஆசான்கள் உடலை வெப்பப்படுத்தும், சவாசனம் என்ற சாந்தியாசனம் என்று படுத்துக்கொண்டு உடலை தளர்த்தும் பயிற்ச்சியில் உடல் குளிர்ச்சியடையும் மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் வெப்பம் அதிகரித்து உடல் உஷ்ணமாகும். இதைப் புரிந்து கொண்டு, நாம் இருக்கும் நாடுகளில் தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு எதைக் குறைவாக செய்ய வேண்டும். எதை அதிகாக செய்யவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு பயிற்சி செய்தால் உடலில் ஆரோக்கியம் என்றுமே இருக்கும். எனவே வெப்பநாடுகளில் உடற்பயிற்சி ஆசனம், மூச்சுப் பயிற்சியை குறைத்துக்கொண்டு, சவாசனம், தியானத்தை அதிகமாக செய்ய வேண்டும். குளிர்ச்சியான நாடுகளில் சவாசனம், தியானத்தைக் குறைத்துக்கொண்டு உடற்பயிற்சி, ஆசனம், மூச்சுப் பயிற்சி அதிகமாகச் செய்ய வேண்டும். மித வெப்பநாடுகளில் எல்லா பயிற்சியும் சமமாகாச் செய்ய வேண்டும்.
எனவே நாம் நாலூமா யோகா என்ற பெயரில் ஒரு பயிற்சியை வடிவமைத்துள்ளோம். இதில் அனைத்து நோய்களுக்கும் 1 1/4 மணி நேரம் பயிற்சி செய்வதால் தீர்வு கிடைக்கும். இந்த நாலூமா யோகா DVD ஐ நீங்கள் வாங்கி அதன் மூலமாக வீட்டில் இருந்த படியே பயிற்சிகளைச் செய்து கொள்ளலாம். இந்த நாலூமா யோகாவைப் பற்றி இந்த இணையதளத்தில் தனியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி, ஆசனங்கள், சவாசனம், மூச்சு பயிற்சி, தியானம் ஆகிய ஐந்தும் ஒவ்வொன்றும் அரைமணி நேரம் செய்வதால் கிடைக்கும் மொத்த பலனையும் ஐந்து நிமிட பயிற்சியில் கிடைப்பதற்கு ஆகா ஒளி தியானம் என்ற ஒரு பயிற்சியும் நாம் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தப் பயிற்சி நேரடியாகப் புதிதாக யோகா என்றால் என்ன என்றே தெரியாத ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது சற்று கடினம், எனவே நாலுமா யோகாவை குறைந்தது ஒருவருடமாகப் பயிற்சி செய்தால் மட்டுமே இந்த அக ஒளி தியானத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும். இப்படி அவசர காலத்தில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு ஐந்து நிமிடத்தில் உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி, குறைத்து, சமநிலை படுத்துவதற்கு இந்த அக ஒளி தியானத்தை பயன்படுத்த முடியும். இதைப் பற்றி இந்த புத்தகத்தில் தனி தலைப்பில் உள்ள விஷயத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
Category: தமிழ் மருத்துவம்