WE SHOULD NOT CONSUME TEA COFFEE AND OTHER INTOXICANTS.

புகைப்பிடித்தல் மது அருந்துதல் மற்றும் பல போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களுக்கு தூக்கம் ஒழுங்காக வராது. இந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தாமல் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்காது. இந்த போதைப் பொருள்கள் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் என்பதை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்திருக்கும் என்பதால் அதைப்பற்றி இங்கு அதிகமாக கூற விரும்பவில்லை. டீ மற்றும் காபி குடித்தாலும் தூக்கம் கெட்டுப்போகும் என்பதைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம். நமக்கு தூக்கம் கெட்டுப்போகும் என்பதைப்பற்றி நாம் பார்க்கப்போகிறோம். நமக்கு தூக்கம் வரவேண்டும் என்றால் மூளைப்பகுதியில் செரடோனின் மற்றும் டோப்பாமின் என்ற சுரப்பிகள் சுரக்கவேண்டும். இந்த சுரப்பிகள் சுரந்தால் மட்டுமே நமக்கு தூக்கம் வரும்.
டீ என்ற தேயிலையில் டேனின் என்ற நச்சுப் பொருளும், காபி என்ற பொருளில் காஃபின் என்ற நச்சுப்பொருளும் உள்ளது. இந்த இரண்டும் நம் உடலுக்குள்ளே செல்லும்பொழுது நேரடியாக மூளைப்பகுதிக்குச் சென்றுச் தூக்கத்திற்கான சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஏற்கனவேத் தூக்கத்திற்காக சுரந்த அந்தத் திரவங்களை மூத்திரம் வழியாக வெளியே அனுப்புகிறது. இப்படி டீ, காபி குடித்துத் தூக்கத்தைத் தள்ளிப்போடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெடுகிறது. சுமாராக ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிட்டால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நமக்கு தூக்கத்திற்கான சுரப்பிகள் உடலில் சுரக்காது. அது நீங்கள் சாப்பிடும் ஸ்டாரங்கை பொருத்திருக்கிறது.
நமக்கு மாலை 6 மணிக்கு லேசாக தூக்கம் வருவது போல இருக்கும். ஆனால் நாம் படுத்து தூங்கமாட்டோம். தூக்கம் வருவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டால் என்ன அர்த்தம். மூளைக்குள் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரந்து விட்டது என்பது அர்த்தம் ஆனால் நாம் நமக்கு இருக்கும் அற்ப வேலைகளுக்காக ஒரு டீ அல்லது காபி சாப்பிட்டுத் தூக்கத்தை துரத்திவிட்டு பின்பு அந்த காரியத்தைச் செய்கிறோம். பிறகு இரவு 8 மணிக்கு உணவு அருந்திவிட்டு பின்பு 9 மணிக்குப் படுத்து தூக்கம் வரவில்லையே, தூக்கம் வரவில்லையே என்று நாம் கவலைப்படுகிறோம்.
எப்பொழுது மாலை 6 மணிக்கு டீ அல்லது காபி சாப்பிடுகிறீர்களோ அதன் ஸ்ட்ராங்கைப் பொருத்து உங்கள் தூக்கம் பல மணி நேரத்திற்கு வராது. இதைப் புரிந்துக் கொள்ளாமல் டீ, காபி, சாப்பிடுவதால் தூக்கம் தடைபடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் நாம் தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டு மேலும் பல நோய்களை நாம் சம்பாதித்துக் கொள்கிறோம். எனவே ஒரு நாளில் நீங்கள் 5 டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் கண்டிப்பாக உங்களுக்குத் தூக்கத்தில் பிரச்சினை இருக்கும். எனவே தூக்கம் இல்லாமல் கவலைப்படும் நபர்கள் தயவு செய்து டீ,காபி மற்றும் போதைப் பொருளில் இருந்து வெளியே வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
டீ, காபி எந்த ஊரில் விளைகிறதோ அந்த ஊர்மக்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். உதாரணமாகத் தேயிலைகள் குளிர்ச்சியான பிரதேசத்தில் மட்டும்தான் விளையும். குளிர்ச்சியான பிரதேசத்தில் டீ, காபி சாப்பிட்டால் உடலில் நோய்கள் வராது. ஏனென்றால் குளிர்ச்சியான பிரதேசங்களில் நம் உடலுக்கு உஷ்ணம் போதுமான அளவு இருக்காது. நாம் சோம்பேறித் தனமாக இருப்போம். எந்த வேலையும் செய்வதற்கு விருப்பம் இருக்காது. எனவே அப்பொழுது டீ, காபி சாப்பிட்டால் அதிலுள்ள கசப்பு, சுவை மற்றும் அதிலுள்ள அந்தப் பொருள்கள் நம் உடலை ஊக்குவித்து, வேகமாக வேலையைச் செய்ய வைக்கும். எனவே எந்த ஊரில் டீத்தூள், காபித்தூள் விளைகிறதோ அந்த ஊர் மக்கள் சாப்பிடுவதால் தவறு ஏதும் இல்லை. ஆனால் அது விளையாத ஊர்களில் நாம் அதைச் சாப்பிடுவதால் அது உடலுக்கு நோயை உண்டு செய்கிறது. சைனாவில் சாப்பிட்டவுடன் குறைவான அளவில் பால் இல்லாத வரக்காப்பி அல்லது வர்ட்டீ சாப்பிடுவார்கள். அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். அவர்கள் அஜீரணத்திற்காக இப்படிச் சாப்பிடுகிறார்கள். எனவே நாமும் தேவைப்பட்டால் மிகவும் குறைவாக கால் டம்ளர் டீ அல்லது காப்பியை பால் இல்லாமல் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் பயன்படுத்தலாம். இரண்டு (சிப்)வாய் சாப்பிட்டால் மருந்து. ஆனால் ஒரு டம்ளர் சாப்பிட்டால் விஷம்.
உங்கள் ஊரில் அதிகமாக எந்த உணவு வகை காய்கறிகள், பழங்கள் விளைகிறதோ அது உங்களுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவாகக் கருந்துங்கள். சில நாடுகளில் அரிசி அதிகமாக விளையும், சில நாடுகளில் கோதுமை அதிகமாக விளையும். அப்பொழுது நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த நாட்டு மக்கள் அரிசிக் சாதத்தைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள். அந்த நாட்டு மக்கள் கோதுமையைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனென்றால் கடவுள் யோசிக்கிறார் கடவுள் ஒரு மிகச் சிறந்த புத்திசாலி அவர் எந்த நாட்டு மக்கள் எந்த ஊர் மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்கிறார். எனவே உங்கள் ஊரில் அதிகமாக விளையும் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்களை தாராளமாகச் சாப்பிட்டால் நம் உடலில் ஆரோக்கியம் அதிகமாகும்.
ஆனால் நாம் ஆப்பிள், பிளம்ஸ் போன்ற குளிர் பிரதேசத்தில் விளையும் பழங்களை மற்ற ஊர்களுக்குச் சிரமப்பட்டு எடுத்து வந்து அதிக விலை கொடுத்துச் சாப்பிடுகிறோம். குளிர் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடினமான பொருள்களாகிய சப்பாத்தி, புரோட்டா, சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என்பதற்காக அந்த ஊரில் இது போன்ற மென்மையான உணவுகள் உற்பத்தியாகின்றன. இது அந்த நாட்டு மக்களுக்குப் பொருந்தும். ஆனால் மற்ற ஊர்களுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் ஆசைக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நாம் செலவு அதிகமாக செய்த சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். அதே போல் ஆஸ்திரேலியாவில் விளையும் ஒரு கோதுமையைக் கொண்டு வந்த மற்ற நாடுகளில் ஓட்ஸ் என்று சாப்பிடுவதும் இந்த நாட்டில் விளையும் கோதுமையைக் கொண்டு சென்று ஆஸ்திரேலியாவில் வேறு பெயர் சொல்லி விற்பதும், நகைச்சுவையாக உள்ளது.
எனவே தயவு செய்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி என்று ஒரு பொருள் வெயில் காலத்தில் மட்டுமே அதிகமாக விளைச்சல் கொடுக்கும். மக்கள் வெயிலில் வாடுகிறார்கள் என்பதற்காக இறைவன் அந்த நேரத்தில் இந்தப் பழங்களை அனுப்பி வைக்கிறார். இந்திப் புரிந்து கொண்டால் நீங்கள் காய்கறி, பழங்கள் கடைக்குச் சென்று இப்பொழுது எந்த சீசன் எந்த பழம் எந்தக் காய்கறி அதிகமாக விளைகிறதோ அதை வாங்கி உங்கள் வீட்டில் பயன்படுத்தினால் செலவும் மிச்சமாகும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
படுத்தவுடன் யாருக்குத் தூக்கம் வரவில்லையோ நீங்கள் இந்த நாளை ஒழுங்காக வாழவில்லை என்ற அர்த்தம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதிற்குப் பிடித்தாற்போல சந்தோஷமாக, ஆனந்தமாக வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் கண்டிப்பாகப் படுத்தவுடன் தூக்கம் வரும்.
நாம் புதிய விஷயங்களை இன்று எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறமோ அந்த அளவுக்கு நமது தூக்கம் நன்றாக இருக்கும். எனவே தினமும் ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலமாகவும் நாம் நிம்மதியாக தூங்க முடியும்.
எனவே தூக்கம் வரவில்லை என்றால் இரவு கடைசியாக எல்லா காரியத்தையும் முடித்து விட்டு தூங்குவதற்கு முன்பாக சம்மணம் இட்டு அமர்ந்து முதுகை நேராக வைத்துக்கொண்டு, கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து சின்முத்திரையில் தொடைக்கு மேலே கைகளை வைத்துக் கொண்டு கண்களை மூடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்து "ம்" என்ற அதிர்வில் மெதுவாக உங்கள் மூச்சுக்காற்றை மூக்கின் வழியாக வெளியே செலுத்தும் பொழுது "ம்" என்ற சபதத்துடன் மெதுவாக உங்களால் எவ்வளவு நேரம் கஷ்டப்படாமல் சொல்ல முடியுமோ அவ்வளவு நேரம் உச்சரியுங்கள். எப்பொழுது காற்று வெளியே முழுவதும் சென்று விட்டதோ மீண்டும் மூச்சுக் காற்றை மெதுவாக உள்ளே இழுத்து மீண்டும் "ம்" என்ற வார்த்தையை உச்சரித்தால் இந்த "ம்" என்ற உச்சரிப்பு நேரடியாக தலைப்பகுதி முழுவதும் குறிப்பாக மூளைப்பகுதி முழுவதும் சென்று இந்த அதிர்வு அங்கே உள்ள அனைத்து செல்களுக்கும் சிறந்த இரத்த ஓட்டமும் பிராண சக்தியைக் கொடுத்து விரைவாக உங்கள் புத்தியையும், மனதையும் சரிசெய்து ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய்யும். எனவே இரவு படுப்பதற்கு முன்பு குறைந்தது 50 முறை "ம்" என்ற சபதத்தைக் கொடுத்து தியானம் செய்து பின்னர் தூங்குவதால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு நமது வாழ்க்கையில் சாதாரண சின்ன சின்ன விஷயங்களை நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு ஆன்மீகப் புத்தகங்களை ஒரு கால் மணி நேரம் அல்லது அரைமணி நேரம் படித்து பின்னர் படுப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கம் தூங்கலாம்.
இரவு தூங்குவதற்கு முன்பு எந்த விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு தூங்குகின்றீர்களோ அதே விஷயத்தைப் பற்றிக் காலை எழுந்தவுடன் ஞாபகம் வந்தது என்றால், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்று அர்த்தம். இரவு யோசித்த விஷயம் இரவு முழுவதும் உங்கள் மூலையில் திரும்ப திரும்ப வட்டமடித்து கொண்டிருந்தால்தான் நீங்கள் காலை எழுந்தவுடன் அந்த விஷயத்தை ஞாபகம் படுத்திருக்கிறீர்கள். எனவே இப்படி யார் தூங்குகிறார்களோ உங்களுக்கு தூக்கம் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது. மேலும் முடி கொட்டிவிடும் மற்றும் அனைத்து மனரீதியான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நாம் ஆரோக்கியமாக தூங்கினோமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் நாம் ஒவ்வொரு முறை காலை எழுந்திருக்கும் பொழுதும் நான் யார் ? நான் எங்கே இருக்கிறேன் இன்று என்ன நாள், என்ன கிழமை என்பதை நீங்கள் ஒரு சில நிமிடம் யோசித்தால் மட்டுமே தெரிய வேண்டும். அந்த அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தினமும் மணி அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை மூடி குறைந்தது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அதாவது குறைந்தது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அதாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும். இப்படியிருந்தால் அந்த 2,3 மணி நேரத்திற்கு முன்பாக கலைத்துப்போட்ட மனதையும், புத்தியையும் அந்த 2 நிமிடத்தில் நமது மனம் அடுக்கிவைத்து விடும். இதனால் தான் பல ஆஸ்ரமங்களில் ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களில் தியானம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். ஐந்து வேலை தொழுகும் ஒரு இஸ்லாமியர்க்கு தூக்கம் கண்டிப்பாக நன்றாக வரும். அதேபோல் பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வார்கள், இவர்கள் அனைவரும் நன்றாக தூங்குகிறார்கள். இவர்களுக்கு மனதில் புத்தியில் எந்த குழப்பமும் இருக்காது. மிகவும் தெளிவாக இருப்பார்கள். எனவே உங்கள் மனதையும், புத்தியையும் தெளிவாக வைத்துக் கொள்ள தேவைப்பட்டால் அருகில் உள்ள பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பிற்கு சென்று சில பயிற்சிகளை எடுப்பதன் மூலமாக நீங்கள் உங்கள் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.
Category: தமிழ் மருத்துவம்