HOW TO DIGEST THE AIR WELL

உணவே மருந்து, மருந்தே உணவு என்று பொதுவாகக் கூறுவார்கள். உணவு மட்டும் மருந்து கிடையாது. ஒரு நாளில் சுமார் மூன்று முறை உணவு சாப்பிடுகிறோம். ஆனால் 24 மணி நேரமும் நாம் சுவாசிக்கிறோம். ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் காற்றை நாம் சுவாசிக்கிறோம். சோற்றைப் பற்றி கவலைப்படும் நாம் காற்றைப் பற்றி என்றுமே கவலைப் படுவது கிடையாது உணவை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்வது என்பதை நாம் பார்த்தோம். இப்பொழுது காற்றை எப்படி நாம் நல்ல முறையில் ஜீரணம் செய்து இரத்தத்தில் கலக்குவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.
நம்மில் பலர் இரவு நேரங்களில் தூங்கும் பொழுது படுக்கை அறையில் கொசுக்கள் கடிக்கும் என்பதற்காக கொசுவிற்குப் பயந்து அல்லது திருடன் வந்து விடுவான் என்று பயந்து மேலும் குடும்பம் நடத்தும் வீட்டில் மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்த மூன்று காரனத்திற்காக நாம் படுக்கை அறையை காற்று வசதி இல்லாமல் ஜன்னல், கதவு ஆகியவற்றை அடைத்துப்படுக்கிறோம். இப்படி படுக்கை அறையில் இருக்கும் காற்று வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் ஜன்னலை அடைத்து வைத்து படுப்பவர்களுக்கு கண்டிப்பாக பல நோய்கள் வரும். ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து நுரையீரலுக்குக் கொடுக்கிறான். நுரையீரல் அந்த காற்றிலுள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் காற்றிலுள்ள பிராண சக்தி உட்பட பலப் பொருட்களை இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும் நல்லப் பொருட்கள் உடலிலுல் அனைத்து உறுப்புகளிலுள்ள செல்களுக்கும் பரிமாறப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் நல்ல சக்தியை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்திய உடன் கெட்டப் பொருளாக மாறி அந்த கெட்டப் பொருள் மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது.
இரத்தத்திற்கு வந்த கெட்டப் பொருள்கள் நுரையீரலுக்கு வரும்பொழுது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாகக் காற்று வெளியேறுகிறது. எனவே, ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும் பொழுதும் நல்ல காற்றை சுவாசித்துக் கெட்டக் காற்றை வெளியே விடுகிறோம். இப்படி ஒரு அறையில் நான்கு மனிதர்கள் படுத்திருந்தால் இந்த நான்கு பெரும் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் விதமாக அரை மணி நேரத்தில் அந்த அறையிலுள்ள அனைத்துக் காற்றையும் கெட்டக் காற்றாக மாற்றிவிடுகிறார்கள். சுமாராக நாம் இரவு ஒரு 8 மணி நேரம் தூங்குகிறோம். முதல் அரை மணிநேரம் மட்டுமே நமது உடலுக்கு நல்ல காற்று செல்லும். மீதமுள்ள 7 1/2 மணி நேரமும் நம்மால் கெடுக்கப்பட கெட்டக் காற்று மட்டுமே நம் உடலுக்குள் செல்லும்பொழுது நம் உடலுக்குத் தேவையான பிராணசக்தி மற்றும் காற்றிலுள்ள அனைத்துப் பொருள்களும் கிடைக்காமல் நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் ஏற்படுகிறது. இப்படி 7 1/2 மணி நேரம் கெட்டக் காற்றில் நாம் படுத்து அதை சுவாசித்தால் நமக்கு 7 1/2 நாட்டுச் சனி பிடிக்குமா? பிடிக்காதா ? இதைப் பற்றி யாருமே யோசிப்பதே கிடையாது. காற்றுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் காற்றாடி பயன்படுத்துறோம் என்று பலரும் கூறுகிறார்கள். காற்றாடி என்ற கருவி அறையில் இருக்கும் காற்றைச் சுற்றி விடுமேத் தவிர கெட்ட காற்றை நல்ல காற்றாக மாற்றாது. எனவே தயவு செய்து படுக்கை அறை மட்டுமல்ல, அலுவலகம், வீடு, கல்யாண மண்டபம் ஆகிய எந்த ஒரு அறையிலும் புதுக்காற்று உள்ளே வந்து பழைய கெட்டக் காற்று வெளியேச் செல்வதற்கு வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஜன்னல் கதவை அடைத்து காற்று வசதி இல்லாமல் இருக்கும் பொழுது உடலில் நோய்கள் வரும் என்பதை நாம் இப்பொழுது புரிந்து கொண்டோம். ஜன்னல் கதவை அடைத்து வைத்து படுத்தாலே நோய் வரும் என்றால் ஜன்னலையும் அடைத்து வைத்து அதனுள்ளே கொசுவர்த்தி போன்ற பொருள்களைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய நோயே வரும். கொசு சிறியதாக இருப்பதால் அன்றே அந்த கொசுவர்த்தியிலுள்ள விஷத்திற்கு இறந்து விடுகிறது. மனிதம் என்ற நாம் ஒரு வகையில் ஒரு பெரிய கொசுதான். நமது உயிர் போவற்குச் சில வருடங்கள் மட்டுமே ஆகும். கொசுவர்த்தி என்பது மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு விஷம். இதைப் பயன்படுத்தவே கூடாது. தினமும் நாம் நம் செலவிலேயே கொசுவர்த்தி வாங்கி வந்து நமக்கு நாமே விஷம் சாப்பிடுகிறோம். இதைப் பற்றி எந்த மருத்துவரும் பேசுவது கிடையாது.
நெஞ்சுசளி, ஆஸ்துமா, டிபி, வீசிங், மூக்கு அடைத்தல், சளி பிடித்தல், தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கொசுவர்த்திகள் பயன்படுத்துவதும் காற்று இல்லாத அறையில் வசிப்பதுமே. உண்மையில் கொசுவர்த்தியின் புகையில் மிகப்பெரிய விஷம் உள்ளது. அதைச் சுவாசிக்கும் கொசுக்கள் உயிர் இழக்கிறது. அதேபோல் அந்த கிருமிகள் விஷங்கள் நம் உடலினுள் சென்று நம் உடலுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிலர் கூறுவார்கள் கொசுவர்த்திப் பயன்படுத்தினால் மட்டுமே நான் நன்றாக தூங்குகிறேன் என்று.உண்மையில் கொசுவர்த்தியிலிருந்து வரும் புகை மனித உடலுக்குள் போகும் பொழுது நம்மை மயக்கமடைய செய்கிறது. கொசுவர்த்தி புகையில் உறங்கும் எவரும் உண்மையில் ஆரோக்கியமான தூக்கம் தூங்குவதே கிடையாது. அது ஒரு வகையான மயக்கம். சிலச் சமயங்களில் கொசுவர்த்தியின் மயக்கத்திற்கு நாம் உணர்ச்சியற்று தூங்கிக் கொண்டிருப்போம். இப்பொழுது வரும் கொசுவர்த்திகளுக்கு கொசுக்கள் மயக்கம் அடைவது கிடையாது. அது நம்மை நன்றாக கடிக்கிறது. இரத்தத்தை முழுவதும் உறிஞ்சி எடுக்கிறது. நாம் கொசுவர்த்தியின் புகையில் மயக்கமாகிக் கிடப்பதால் நமக்கு அதுத் தெரிவது கூட கிடையாது. உண்மையில் கொசுவர்த்தி என்பது கொசுவுக்கு நல்லது என்று தான் தோன்றுகிறது. மனிதனுக்குக் கண்டிப்பாக அது ஒரு கெட்ட விஷயம்.
பல மருத்துவர்கள் குழந்தைக்குச் சாம்பிராணி புகை போடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். அரசாங்கள் கூட டிவி, பேப்பர் போன்ற ஊடகங்களில் சாம்பிராணி புகை பயன்படுத்தாதீர்கள் என்ற விளம்பரம் செய்து வருகிறார்கள். சாம்பிராணி புகை உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும். ஆனால் சாம்பிராணி பயன்படுத்தக் கூடாது. என்ற சொல்லும் மருத்துவர்களும், அரசாங்கமும் ஏன் கொசுவர்த்தியைப் பயன்படுத்தாதீர்கள், அதனால் உடலுக்கு மிகப் பெரிய நோய் வரும் என்று ஏன் பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறார்கள். ஆஸ்துமா, வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட என நோயாளியும் பத்து வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறீர்களே உங்கள் வீட்டில் காற்று ஒழுங்காக இருக்கிறதா என்று எந்த மருத்துவராவது உங்களிடம் கேட்டார்களா அந்த காற்றை சரி செய்யாத வரை உலகில் யாருக்கும் நுரையீரல் மூக்கு சம்பந்தப்பட்ட எந்த நோயும் குணமாகாது. காற்றை சரி செய்தால் மட்டுமே தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். எனவே தயவு செய்து நல்லக் காற்று உள்ளே வருவதற்கும், கெட்ட காற்று வெளியேச் செல்வதற்கும் வீடு, அலுவலகம், கம்பெனி ஆகிய அனைத்து இடங்களிலும் வசதிகள் இருக்க வேண்டும்.
ஜன்னலைத் திறந்து வைத்தால் நல்ல காற்று உள்ளே வந்து கெட்ட காற்று வெளியே செல்லும். ஆனால் கொசுக் கடிக்கிறது என்ன செய்ய வேண்டும்? திருடன் வந்து விடுவான் என்ன செய்ய வேண்டும்? குடும்பம் நடத்தும் நமது வீட்டில் மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது! இப்படி இந்த மூன்று விசயத்திற்காக நாம் ஜன்னலைத் திறந்து வைக்கப் பயப்படுகிறோம். இல்லையா? இதற்கு ஒரு அருமையானத் தீர்வு என்னவென்றால் நீங்கள் ஜன்னல் கதவு அனைத்தையும் அடைத்து வைத்துப் படுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் அறையில் ஒரு பக்கச் சுவற்றின் மேல் பகுதியில் கூரையிலிருந்து அரை அடி அல்லது ஒரு அடி கீழே சுவற்றில் ஒரு வட்ட வடிவமான ஓட்டையை ஏற்படுத்துங்கள். அதில் காற்றை வெளியேத் தள்ளும் காற்றாடியைப் பொருத்துங்கள். அந்த காற்றாடிக்கு நேர் எதிரே உள்ளிச் சுவற்றின் மேல் பகுதியில் கூரைக்குச் சற்று கீழே இதேபோல் ஒரு ஓட்டையை ஏற்படுத்தி ஒரு கொசு வலையை அடைத்து விடுங்கள். இப்பொழுது இந்த பேன் வழியாக எவ்வளவு கெட்டக் காற்று வெளியே செல்கிறதோ அதே அளவு நல்ல காற்று எதிரில் உள்ள ஓட்டை வழியாக நமது அறைக்குள் வரும். நல்லக்காற்று எப்பொழுதும் அறையின் கீழ் பகுதியிலும் கெட்டக் காற்று எப்பொழுதும் அறையின் மேல் பகுதியிலும் இருக்கும். கெட்டக்காற்றுக்கு அடர்த்தி குறைவு. எனவே, அதுமேல் நோக்கி பயணம் செய்யும். எனவே, எப்பொழுதும் ஒரு அறையில் தரைக்கு அருகே படுப்பதால் நல்ல காற்றை சுவாசிக்க முடியும். ஒரு அறையில் எவ்வளவு உயரமாக நாம் படுக்கிறோமோ அந்த அளவுக்கு காற்று மாசுபட்டு இருக்கும். இப்படி பேன் பொருத்துவதால் ஜன்னல் மற்றும் கதவை நாம் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. கொசு உள்ளே வராது, திருடன் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நம்மை வேறு யாரும் வேடிக்கைப் பார்க்கவே மாட்டார்கள். இப்படி இந்த வசதி செய்வதற்கு குறைந்த பணம் மட்டுமே செலவாகும். ஆஸ்துமா, வீசிங், நெஞ்சு சளி போன்ற நோய்களுக்கு பத்து வருடமாக மாத்திரைக்குச் செலவு செய்த தொகையை விட இது கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்.
பரவாயில்லை. ஜன்னலைத் திறந்து வைத்துப் படுக்க எங்களால் முடியும் என்று கூறுபவர்களுக்கு கொசுக்கடியில் இருந்து மட்டுமே தப்பிப்பதற்கு ஒரு சிறந்த யோசனை. கொசு வலையை கட்டி அதற்குள் படுப்பதால் கொசுக்கள் நம் அறைக்குள் வரும். ஆனால் கடிக்காது. கொசு வலையின் கீழ் பகுதியை நமது படுக்கைக்கு கீழே அல்லது பாயிற்கு கீழே லேசாக சுருட்டி அழுத்தி வைப்பதால் காலை வரை எந்த கொசுவும் கடிக்காது. காற்றைப் பொறுத்தவரை மொத்தம் இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும்.
1. கொசுவர்த்திகள் லிக்யுட் கொசுவர்த்திகள், கொசுவர்த்திச் சுருள், மெட் போன்ற எந்த ரூபத்திலும் எந்த கொசுவர்த்தியும் பயன்படுத்தக் கூடாது.
2. 24 மணி நேரமும் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகிய அனைத்து இடங்களிலும் நல்லக் காற்று உள்ளே வருவதற்கும், கெட்டக் காற்று வெளியேச் செல்வதற்கும் அமைப்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இப்படி நமது உடலை காப்பற்றுவதற்காக பழங்கால சுவர்களிலும் வேண்டிலேசன்கேப் என்ற ஒரு ஓட்டை இருக்கும் இதை நான்கு சுவர்களிலும் கூரைக்குக் கீழே சுவற்றின் மேல் 2 அடிக்கு 1/4 அடி சுமாராக ஒரு ஓட்டை கொடுத்திருப்பார்கள். இந்த ஓட்டை இருக்கும் எந்த வீடுகளிலும் காற்றுச் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராது. ஏனென்றால் கெட்ட காற்று எப்பொழுதும் மேல் நோக்கிச் சென்று ஏதாவது ஒரு வழியில் ஆகாயத்தில் கலந்து மேல் நோக்கி செல்வதற்கு மட்டுமே முயற்சி செய்யும். நம் முன்னோர்கள் வாஸ்து என்ற பெயரில் இதைத்தான் பார்த்து கொண்டிருந்தார்கள். எனவே வாஸ்து என்பது ஒரு வீட்டிற்குள் பஞ்ச பூதங்கள் சரியாக உள்ளதா என்பதைப் பார்த்து அதை சரி செய்வது தான் வாஸ்து. அதை பலர் தவறாகப் பயன்படுத்தியதால் வாஸ்து என்பது ஒரு மூட நம்பிக்கை என்று நாம் இப்பொழுது குப்பையில் எரித்து விட்டோம். ஆனால் நோய்களோடு மருத்துவமனைக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறோம். விரையில் வாஸ்து சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை நாம் எழுத உள்ளோம். அதில் வாஸ்துவைப் பற்றி மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். எனவே, யோகா பயிற்சிகள் செய்பவர்கள் முதலில் காற்றை சரி செய்து விட்டு பிறகு மூச்சு பயிற்சியினைக் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, இனிமேல் கொசுவர்த்தியை நாம் பற்ற வைத்துப் படுப்பதும் விட அதைச் சாப்பிட்டு படுப்பதும் இரண்டும் ஒன்றுதான். லிக்யூட் கொசுவர்த்திகள் கரண்டின் மூலமாக சொருகி பயன்படுத்துவதை விட இனிமேல் தயவு செய்து குடித்துவிட்டுப் படுத்து விடுங்கள் இரண்டும் ஒன்றுதான். கொசுவர்த்தியில் இருக்கும் கெட்ட விஷயங்கள் எரிந்து இரவு முழுவதும் காற்றோடுக் கலந்து நம் மூக்கின் வழியாக நுரையீரலுக்கு சென்று இரத்தத்தில் கலக்கிறது. எனவே, தயவு செய்து கொசுவத்தியை எந்த ரூபத்திலும் பயன்படுத்தக் கூடாது.
காற்றை நல்ல காற்றாக ஒழுங்காக ஜீரணம் செய்வதற்குப் பிராணாயாமம், பஸ்திரிகா, கபால பதி, நாடிஸ்ருதி போன்றப் பல பயிற்சிகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் உள்ள காற்றே சுத்தமாக இல்லாத பொழுது இந்தப் பயிற்சிகளை செய்வதால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது. எனவே, இந்தப் பயிற்சிகள் மூலமாக நமக்கு பலன் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அறையில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்துங்கள். ஒவ்வொரு முறை மூக்கின் வழியாக காற்றை வெளியே அனுப்பும் பொழுது நமது பிராணசக்தி உடலிலிருந்து வெளியேறுகிறது. எனவே, மூச்சு பயிற்சி செய்பவர்கள் நாடிஸ்ருதி, பிராணாயாமம், கபாலபதி போன்ற பயிற்சிகளைச் செய்யுங்கள். இவை உடலில் பிரானசக்தியை அதிகரிக்கும். பஸ்திரிகா என்ற பயிற்சியை மட்டுமே குறைந்த அளவில் மட்டுமே செய்ய வேண்டும். சிலர் பஸ்திரிகா பயிற்சியை அறை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று தேவையில்லாமல் மூச்சு காற்றை அதிகமாக வெளியே, வேகமாக செலுத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே, கூடிய விரைவில் யோகா என்ற தலைப்பில் நாம் எழுதும் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக இந்த பயிற்சிகளை நாம் ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, காற்றை பொறுத்தவரை கொசுவர்த்திகள் பயன்படுத்தக் கூடாது. 24 மணி நேரமும் நல்ல காற்று உள்ள இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயத்தை மட்டும் நாம் ஒழுங்குப்படுத்தினால் நமது உடலிலுள்ள அறிவு அந்த காற்றிலுள்ள பிராணசக்தி மற்றும் அனைத்து நல்ல பொருள்களையும் சுத்தமாக இரத்தத்தில் கலந்து நமது நோய்களைக் குணப்படுத்தும்.
Category: தமிழ் மருத்துவம்