WE SHOULD NOT DRINK WATER. WE SHOULD CONSUME IT BY SLOWLY SIPPING IT.

தண்ணீரைக் சாப்பிட வேண்டும். உணவைக் குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல செய்து நீராகாரமாக மாற்றிக் குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பிச் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள் தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது. தண்ணீரை மெதுவாக சப்பி சப்பிக் குடிப்பது மூலமாக. நாம் உடலுக்கு தேவையான ஆறு சுவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்குப் பல விதமான நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்துக் கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அண்ணாந்து கடகடவென தண்ணீரி குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் டான்சில் எனப்படும் உறுப்பில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக டான்சில் வழியாகக் கடக்கும் போது டான்சில் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் நோய்கள வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட மூக்கு சம்பந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதியும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகி விடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பிச் சுவையை ரசித்து குடிக்கலாம்.
சிறுநீர் கழித்தவுடன் நீர் குடிக்க வேண்டும்
எப்பொழுதெல்லாம் நாம் சிறுநீர் கழிக்கிறமோ அப்பொழுதெல்லாம் நமக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருள். எனவே சிறுநீர் கழித்தவுடனேயே குறைந்த அளவாவது நீரைச் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வாய்ப்பிருந்தால், முடிந்தால் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் சிறிதளவு சாப்பிடுவோம்.
நல்ல குடிநீர் என கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு குடிதண்ணீர் நல்லதா? கெட்டதா? என்பதை ஆராய்ச்சி செய்வதற்குச் சுலபமான ஒரு வழி. தண்ணீரில் மீனை வளர்த்து அந்த மீன் எந்தத் தண்ணீரில் உயிருடன் இருக்கிறதோ அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்த நீர். போர்வாட்டார் எடுத்து அதில் மீனை போட்டால் அது மூச்சுத் திணறினாள் அந்த போர் வாட்டரில் உயிர்ச்சத்து இல்லை என்று பொருள். நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம். நிலத்திற்குக் கீழே 10 அடி, 15 அடி வரைக்கும் தான் தண்ணீரில் உயிர்ச்சத்து என்ற பிராண சத்து இருக்கும். 50 அடி, 100 அடி ஆழத்தில் உள்ள போர் தண்ணீரை எடுத்து அதில் மீனை விட்டால் உடனே மீன் இறந்து விடும். எனவே நீங்கள் குடிக்கும் தண்ணீர் நல்ல தண்ணீரா அல்லது கெட்ட தண்ணீரா எனபதைக் கண்டறிவது மிகவும் சுலபம். குடிக்கும் நீரில் மீனை வளர்த்து 24 மணி நேரம் மீன் எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் வாழ்ந்தால் அந்த நீரை நாம் குடிக்கலாம்.
எனவே மேலேச் சொல்லப்பட்ட வழிமுறைகளில் நாம் நீரை குடிப்பது மூலமாக தண்ணீரை நல்ல முறையில் ஜீரணம் செய்து இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள நீர்ச்சக்தியையும் நீர் சம்பந்தப்பட்ட பொருளையும் நல்லப் பொருளாக சரியான அளவு வீரியத்துடன் வைப்பதற்கு உதவி செய்யும்.
Category: தமிழ் மருத்துவம்