HOW MANY LITRES OF WATER SHOULD A PERSON DRINK DAILY?

இந்த விசயத்தில் பலருக்கும் பல குழப்பங்கள் உள்ளது. சிலர் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரண்டு லிட்டர் அருந்த வேண்டும். சிலர் கூறுகிறார்கள் ஐந்து லிட்டர் சிலர் மூன்று லிட்டர். இப்படிப் பல மருத்துவர்கள் ஒரு நாளில் ஒரு மனிதன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி யார் அளவு பார்த்து குடிக்கிறீர்களோ உங்களுக்கு சிறு நீரக சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் வாரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு மனிதன் இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் கிடையவே கிடையாது. சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற குளிர்ச்சி அதிகமாக உள்ள நாடுகளில் நீங்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை பருகினால் ஒரு வாரத்திற்குள் உங்கள் சிறுநீரகம் பழுதடைந்து விடும். இராஜஸ்தான், சகாரா போன்ற பாலைவனங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் போதாது.
ரோடு வேலை செய்யும் ஒரு நபர் கலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை சூரிய வெயிலிலே சுடும் தாரிலே காலில் பூட்ஸ் அணிந்து தலையில் ஹெல்மெட் அணிந்து வேலை செய்யும் போது அவருக்குக் கண்டிப்பாக ஐந்து லிட்டருக்கு மேல் தேவைப்படும். ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஏசி அறையிலே வேலை செய்யும் போது ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லிட்டர் போதும். ஒரு நாள் ரோடு வேலை செய்யும் ஒருவர் அடுத்த நாள் அவரது நண்பருடன் ஏசி காரில் பயணம் செய்யும் போது அவருக்குத் தண்ணீரின் அளவு மாறி விடுகிறது.
எனவே ஒரு மனிதன் ஒரு நாள் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது யாரும் சரியாகக் கூற முடியாது. இது வயது, உயரம், உடல் எடை, தட்ப வெப்ப நிலை, நாடு அவரது மன நிலை, அவரது வேலை, அவர் வேலை செய்யும் இடத்தில் உள்ள அறைகள், ஏசி இதைப் பொருத்து மாறும். எனவே மனிதன் ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இப்படி யாராவது ஒரு நாள் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தண்ணீர் குடிக்கும் பொழுது சிறுநீரகம் தேவை இல்லாமல் வேலை செய்து பழுதாகிறது.
சரி. ஒரு நாள் ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஆனால் அவரவர் உடலுக்கு மட்டுமே தெரியும். எனவே தாகம் எடுக்கும் பொழுது மட்டுமே நீரை அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது உங்களுக்குத் தேவையான அளவு மனதிற்கு பிடித்த அளவு, ஆசை தீர தண்ணீர் குடிக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை மறந்து விட்டு உங்களது வேலையைச் செய்து வர வேண்டும். மீண்டும் எப்பொழுது தாகம் எடுக்கிறதோ அப்பொழுது தான் தண்ணீர் அருந்த வேண்டும். குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் கால் லிட்டர் தண்ணீர் அருந்தினால் தாகம் தீர்ந்து விடும். வெயில் பிரதேசத்தில் ஒரு நாளைக்குப் பத்து முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் தேவைப்படும். குளிர் பிரதேசத்தில் இன்று இருக்கும் ஒரு நபர் அடுத்த நாள் வெயில் பிரதேசத்திற்குச் சென்று விட்டால் அவரது தாகம் மாறும். எனவே தயவு செய்து ஒரு நாளில் இவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் யார் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கிறீர்களோ அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ உடலுக்குள் சென்று நோயை ஏற்படுத்துகிறது. எனவே தயவு செய்து அளவு பார்த்துத் தண்ணீர் குடிக்காதீர்கள். தாகம் எடுத்தால் தேவையான அளவு மீண்டும் தாகம் எடுத்தால் தேவையான அளவு குடித்தால் இன்று உங்கள் உடம்புக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று என்பதை உடம்பே சரியான முறையில் நமக்கு தகவல் தெரிவித்துப் பெற்றுக் கொள்ளும். இதுவே ஒரு நாளில் நாம் குடிக்கும் தண்ணீரின் சரியான அளவாகும்.
சில மருத்துவர்கள் தண்ணீர் நிறைய குடியுங்கள் என்று கூறுவார்கள். இப்படி யார் யாரெல்லாம் தேவையான அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்களோ உங்களது சிறு நீரகம் தேவையில்லாமல் வேலை செய்து பழுதடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீர் தாகம் இல்லாமல், மருத்துவர் கூறுகிறார் என்று நீங்கள் தேவையில்லாமல் தண்ணீரை அருந்தினால் சிறுநீரகம் நம்மை திட்டும். சிறுநீரகம் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நமக்குத் தாகம் என்ற உணர்ச்சி ஏற்படாது. தாகம் எடுக்காத போது நாம் அருந்தும் தண்ணீர் சிறுநீரகம், தான் செய்யும் வேலையை விட்டு விட்டு நாம் குடித்த நீரை ஜீரணம் செய்ய வந்து விடும். இந்த தண்ணீரை தேவையில்லாமல் நாம் அருந்திய தண்ணீரை ஜீரணம் செய்து முடித்து விட்டு மறுபடியும் தான் வேலையை செய்ய செல்வதற்குள் மீண்டும் நாம் நீர் அருந்தினால் சிறுநீரகத்தின் வேலைகள் பார்ப்படைந்து சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிறுநீரகம் பழுதடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதே போல் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீரகம் பழுதடையும். தாகம் என்பது என்னவென்றால் சிறுநீரகம் நம்மிடையே பேசும் பாசை. சிறு நீரகத்திற்கு எப்பொழுது நீர் தேவைப்படுகிறதோ அது நமக்குத் தாக உணர்ச்சியை ஏற்படுத்தும். நாம் நீர் அருந்தினால் அது சரியான முறையில் ஜீரணம் செய்யும்.
சிலர் பேருந்தில் அமர்ந்து பத்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து விடுவார்கள் நன்றாக தாகம் வரும். நாம் ஊருக்குச் சென்று வீட்டில் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம் என்று அமைதியாக அமர்ந்து விடுவார்கள். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்துவார்கள். இந்த ஐந்து மணி நேரமும் நம் உடல் நம்மிடம் தண்ணீர் கேட்டுக் கொடுக்காமல் இருந்தால் சிறுநீரகம் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் உள்ள அனைத்து நீரையும் உறிஞ்சி தன் வேலையை ஆரம்பிக்கும் பொழுது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்காமல் இருந்தால் நோய். அதே போல் தாகம் இல்லாமல் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. தாகம் இல்லாமல் தண்ணீரைக் குடித்தாலும் நோய். ஆகவே தயவு செய்து ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தேவையில்லாதது. மேலும் தண்ணீர் அதிகமாகக் குடித்தால் நோய் குணமாகும் என்ற தவறான செய்தியையும் மறந்து விடுங்கள். இனிமேல் தாகம் எடுத்தால் உடனே நீர் அருந்துங்கள். ஆசை தீர மனதிற்கு பிடித்தது போல நீர் அருந்துங்கள். மீண்டும் தாகம் எடுக்கும் வரை காத்திருங்கள். மீண்டும் தாகம் எடுத்தால் ஆசை தீர தண்ணீர் அருந்துங்கள். நம் உடம்பு இன்றைக்கு எவ்வளவு நீர் வேண்டும் என்பதை அதுவே சரியான முறையில் நம்மிடமிருந்து வாங்கிக் கொள்ளும்.
Category: தமிழ் மருத்துவம்