WHY DO WE CATCH COLD WHEN WE CHANGE THE DRINKING WATER?

ஒரு ஊரில் இருக்கும் தண்ணீரை குடித்தே பழக்கப்பட்ட நமக்கு அடுத்த ஊர் தண்ணீர் குடிக்கும் பொழுது சளி பிடிக்கிறது. சிலர் அவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து பழகி வருவார்கள். திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அவர்களுக்கு சளி பிடிக்கும். இப்படி நாம் குடிக்கும் நீரை மாற்றிக் குடிக்கும் போது சளி பிடிக்கிறது. இதன் காரணம் என்ன? கொதிக்க வைத்த தண்ணீரில் எந்த ஒரு தாதுப் பொருட்களும் இல்லாமல் பல வருடங்களாக குடித்து வரும் பொழுது அவரது உடலில் உள்ள இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் நோய் வாய்ப்பட்டிருக்கும். ஒரு நாள் திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அதில் பல விதமான தாதுப்பொருட்களும்,சத்துப் பொருட்களும் இருக்கும். அதை அவரது சிறுநீரகம் எடுத்து இரத்தத்தில் கலந்து விடும். பல வருடங்களாக இரத்தத்தில் சில பொருட்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் திடீரென சில நல்ல பொருட்கள் இரத்தத்திற்குள் நுழைந்தவுடன் நமது உடலில் பல வருடங்களாக கழிவுகளை நீக்க வேண்டிய வேலையை இந்த தாதுப் பொருட்களை வைத்து கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. இப்படி கழிவுகளை வெளியேற்றும் போது அது சளி வழியாகவோ அல்லது காய்ச்சல் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ அனுப்பும். இதை நாம் நோய் என்று பயந்து விடுகிறோம். நம் உடலில் அனைத்து நோய்களுக்கும் ஐந்து காரணங்கள் என்று பார்த்தோம். இந்த ஐந்து விசயங்களும் ஒருவர் உடலில் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய சோதனை உண்டு. எந்த ஊர் தண்ணியையும் மாற்றி மாற்றி குடித்தால் ஒருவருக்கு சளியும் பிடிக்காமல் காய்ச்சலும் வராமல் எந்த வித உபாதையும் செய்யாமல் இருந்தால் அவருக்கு உடலில் ஐந்து விஷயமும் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீரை மாற்றிக் குடித்தால் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கிறது என்றால் அவர் உடலில் பல நோய்கள் உள்ளது. அதை குணப்படுத்த தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்றவை எடுக்கத் தேவையில்லை. தண்ணீரை மாற்றிக் குடித்தால் சளி பிடித்தாலே உங்கள் உடலில் நோய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். எனவே தயவு செய்து இன்று முதல் சாதாரண குழாய் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து சாப்பிட ஆரம்பியுங்கள். இப்படி திடீரென சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் கண்டிப்பாக முதல் பத்து நாட்களுக்கு உங்களுக்கு சளி பிடிக்கும், காய்ச்சல் வரும். ஆனால் அதற்கு தயவு செய்து பயப்பட வேண்டாம். அந்த சளியை சிந்தி விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது இந்த புத்தகத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியிருப்போம். அதை படித்து விட்டு அதன் படி நடந்துக் கொண்டால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் உங்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது. நான் ஒன்றும் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இப்படி ஏதோ ஒரு இணையதளத்தை படித்து விட்டு எழுதவில்லை. நான் 1992 முதல் இன்று வரை நான் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறேன். எனக்கு எந்த சளியும், எந்த காய்ச்சலும் வருவதில்லை. இப்படி யார் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்கிறீர்களோ உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மெட்ராஸ் ஐ வரும் போது உங்களுக்கு வராது. சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற காய்ச்சல்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் வரும் பொழுது உங்களுக்கு மட்டும் வராது. உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி குழாய் தண்ணீர் தான். குழாய் தண்ணீரை எப்படி குடிப்பது, தொட்டி சுத்தமாக இல்லையே என்று பலர் கேட்கிறார்கள். தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியது உங்களது வேலை. வாட்டர் பில்டர் வாங்குவதற்கு முப்பதாயிரம் செலவு செய்யும் நீங்கள் தொட்டியை சுத்தம் செய்ய ஐம்பது ருபாய் அல்லது நூறு ருபாய் செலவு செய்தால் போதுமே. எனவே நாம் குடிக்கும். தண்ணீரி உள்ள தொட்டியை சுத்தம் செய்வது நமது கடமை. சிலர் குழாய்களில் இரும்புத் துகள்கள் உள்ளது. தூசு உள்ளது அதனால் நோய் வரும் என்று பயப்படுகிறார்கள். முதலில் குழாயில் உள்ள எந்த தூசுக்களாலும், கிருமிகளாலும் நமக்கு நோய்கள் வரவே வராது. அப்படி ஒரு வேளை உங்களுக்கு பயமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளை அனைத்து குழாய்களையும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்றி விடுங்கள். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம். தயவு செய்து பணத்தை உங்கள் வங்கியில் செமிப்பதையும், நகைகளிலும் செலவு செய்வதை விட்டு விட்டு ஆரோக்கியத்திற்காக செலவு செய்யுங்கள்.

ஒரு ஊரில் இருக்கும் தண்ணீரை குடித்தே பழக்கப்பட்ட நமக்கு அடுத்த ஊர் தண்ணீர் குடிக்கும் பொழுது சளி பிடிக்கிறது. சிலர் அவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து பழகி வருவார்கள். திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அவர்களுக்கு சளி பிடிக்கும். இப்படி நாம் குடிக்கும் நீரை மாற்றிக் குடிக்கும் போது சளி பிடிக்கிறது. இதன் காரணம் என்ன?

கொதிக்க வைத்த தண்ணீரில் எந்த ஒரு தாதுப் பொருட்களும் இல்லாமல் பல வருடங்களாக குடித்து வரும் பொழுது அவரது உடலில் உள்ள இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் நோய் வாய்ப்பட்டிருக்கும். ஒரு நாள் திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அதில் பல விதமான தாதுப்பொருட்களும்,சத்துப் பொருட்களும் இருக்கும். அதை அவரது சிறுநீரகம் எடுத்து இரத்தத்தில் கலந்து விடும். பல வருடங்களாக இரத்தத்தில் சில பொருட்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் திடீரென சில நல்ல பொருட்கள் இரத்தத்திற்குள் நுழைந்தவுடன் நமது உடலில் பல வருடங்களாக கழிவுகளை நீக்க வேண்டிய வேலையை இந்த தாதுப் பொருட்களை வைத்து கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. இப்படி கழிவுகளை வெளியேற்றும் போது அது சளி வழியாகவோ அல்லது காய்ச்சல் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ அனுப்பும். இதை நாம் நோய் என்று பயந்து விடுகிறோம்.

நம் உடலில் அனைத்து நோய்களுக்கும் ஐந்து காரணங்கள் என்று பார்த்தோம். இந்த ஐந்து விசயங்களும் ஒருவர் உடலில் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய சோதனை உண்டு. எந்த ஊர் தண்ணியையும் மாற்றி மாற்றி குடித்தால் ஒருவருக்கு சளியும் பிடிக்காமல் காய்ச்சலும் வராமல் எந்த வித உபாதையும் செய்யாமல் இருந்தால் அவருக்கு உடலில் ஐந்து விஷயமும் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீரை மாற்றிக் குடித்தால் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கிறது என்றால் அவர் உடலில் பல நோய்கள் உள்ளது. அதை குணப்படுத்த தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்றவை எடுக்கத் தேவையில்லை. தண்ணீரை மாற்றிக் குடித்தால் சளி பிடித்தாலே உங்கள் உடலில் நோய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

எனவே தயவு செய்து இன்று முதல் சாதாரண குழாய் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து சாப்பிட ஆரம்பியுங்கள். இப்படி திடீரென சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் கண்டிப்பாக முதல் பத்து நாட்களுக்கு உங்களுக்கு சளி பிடிக்கும், காய்ச்சல் வரும். ஆனால் அதற்கு தயவு செய்து பயப்பட வேண்டாம். அந்த சளியை சிந்தி விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது இந்த புத்தகத்தில் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியிருப்போம். அதை படித்து விட்டு அதன் படி நடந்துக் கொண்டால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் உங்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது.

நான் ஒன்றும் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இப்படி ஏதோ ஒரு இணையதளத்தை படித்து விட்டு எழுதவில்லை. நான் 1992 முதல் இன்று வரை நான் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறேன். எனக்கு எந்த சளியும், எந்த காய்ச்சலும் வருவதில்லை. இப்படி யார் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்கிறீர்களோ உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மெட்ராஸ் ஐ வரும் போது உங்களுக்கு வராது. சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற காய்ச்சல்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் வரும் பொழுது உங்களுக்கு மட்டும் வராது. உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி குழாய் தண்ணீர் தான்.

குழாய் தண்ணீரை எப்படி குடிப்பது, தொட்டி சுத்தமாக இல்லையே என்று பலர் கேட்கிறார்கள். தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியது உங்களது வேலை. வாட்டர் பில்டர் வாங்குவதற்கு முப்பதாயிரம் செலவு செய்யும் நீங்கள் தொட்டியை சுத்தம் செய்ய ஐம்பது ருபாய் அல்லது நூறு ருபாய் செலவு செய்தால் போதுமே. எனவே நாம் குடிக்கும். தண்ணீரி உள்ள தொட்டியை சுத்தம் செய்வது நமது கடமை. சிலர் குழாய்களில் இரும்புத் துகள்கள் உள்ளது. தூசு உள்ளது அதனால் நோய் வரும் என்று பயப்படுகிறார்கள். முதலில் குழாயில் உள்ள எந்த தூசுக்களாலும், கிருமிகளாலும் நமக்கு நோய்கள் வரவே வராது. அப்படி ஒரு வேளை உங்களுக்கு பயமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளை அனைத்து குழாய்களையும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்றி விடுங்கள். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம். தயவு செய்து பணத்தை உங்கள் வங்கியில் செமிப்பதையும், நகைகளிலும் செலவு செய்வதை விட்டு விட்டு ஆரோக்கியத்திற்காக செலவு செய்யுங்கள்.

Thanks to : ValaiTamil

Category: தமிழ் மருத்துவம்

- February 7, 2017

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.