BITTER AND ASTRINGENT TASTE TREATMENT (FIRE ENERGY HEART SMALL INTESTINE TONGUE AND JOY)

(நெருப்புப் பிராணன், இருதயம், சிறுகுடல், நாக்கு – சந்தோஷம்)

நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அதை நெருப்புப் பிராணனாக(சக்தி) மாற்றி உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது, நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இருதயம், இருதயத்தின் மேல் உறை, சிறுகுடல் மற்றும் உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு, இதற்கான வெளி உறுப்பு நாக்கு இதற்கான உணர்ச்சி சந்தோஷம்.

நம்மில் பலருக்குத் திடீரென சந்தோஷம் வந்தால் உடனே நெஞ்சு பட படக்கும் வியர்வை வரும், இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான சந்தோஷம் உடலிலுள்ள நெருப்புச் சக்தியை சாப்பிடுகிறது, உடலில் நெருப்புச் சக்தி குறைவானால் இருதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காததால் இருதயம் படபடக்க ஆரம்பிக்கிறது, திடீரென நம்மை யாராவது மேடையில் ஏறி பேச சொன்னாலோ அனைவர் மத்தியிலும் நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் பொழுதோ, பள்ளிகளில் கல்லூரிகளில் திடீரென மேடை ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்தப் படபடப்பு ஏற்படும். எனவே கசப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இரு சுவைகளுக்கும், சந்தோசத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

நாக்கும் இருதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும் இருதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும் மருத்துவர்கள் நோயாளிகளின் நாக்கை ஏன் பார்க்கிறார்கள் என்றால் நாக்கில் நிறம் அதில் ஏற்படும் மாற்றத்தை வைத்து இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

இப்பொழுது நம்மில் பலருக்குத் தைரியமும் கிடையாது துணிவும் கிடையாது நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம், பல விசயங்களில் நாம் தைரியமாக எந்த வேலையும் யாரும் செய்வதில்லை இதற்கு அடிப்படைக் காரணாம் நம் உணவில் கசப்பு. மற்றும் துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்வதே கிடையாது, கசப்பான பொருள்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் தைரியசாலியாக இருப்பதைப் பாருங்கள். இன்றைய குழந்தைகள் கோழைத்தனமாக இருக்கிறார்கள் தைரியம் யாருக்கும் இருப்பதில்லை இதற்கும் காரணம் குழந்தைகள் யாரும் கசப்பு துவர்ப்பு சாப்பிடுவதே கிடையாது, எனவே நமது எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான பொருள்களை மற்றும் துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் மூலமாக இருதயம் சம்பத்தப்பட்ட மற்றும் தைரியம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்,

நம்மைப் பாம்பு கடித்தால் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவும் உடலிலுள்ள அனைத்து செல்களும் பாம்பு விஷத்தை வேலியற்றுவதற்காக இருதயத்திடம் BP கேட்கும், இருதயம் BP யை அதிகரிக்கும் அப்பொழுது உடலிலுள்ள நெருப்பு சக்தி குறையும் உடலில் எப்பொழுது நெருப்பு சக்தி குறைகிறதோ நாக்கு என்ற மருத்துவர் கசப்பு, துவர்ப்பு என்ற சுவையைக் கேட்பார். பாம்பு கடித்தால் கொடுக்கும் மூலிகையின் பெயர் சிறியா நங்கை, பெரிய நங்கை, இந்த மூலிகைகள் மிகவும் கசப்பானதாக இருக்கும். அந்த மூலிகையில் மருந்து இருக்கிறதோ இல்லையோ அதிலுள்ள கசப்பான சுவை நாக்கி பட்டு நாக்குக்கு நெருப்பு சக்தி கிடைத்து. அந்த நெருப்பு சக்தி இருதயத்திற்கு கொடுப்பதன் மூலமாக இருதயத்தை நன்றாக வேலை செய்ய வைத்து, உடலிலுள்ள விஷத்தை வெளியேற்றுகிறது.

எனவே யாருக்காவது பாம்பு கடித்தால் பாகற்காய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுங்கள். பாம்பின் விஷம் உடலில் இருக்கும் பொழுது பாகற்காய் சாப்பிட்டால், பாகற்காய் கசக்காது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாக்குக் கசப்பு என்ற மருந்தை கேட்கிறதே தவிர மருந்து மாத்திரைகளைக் கேட்பது கிடையாது. இப்படிப் பாகற்காயும், வெப்பம் இலையையும் சாப்பிட்டுக் கொண்டு வரவேண்டும். நிறையாக சாப்பிட வேண்டும். எப்பொழுது நாக்கில் கசப்பு தெரிகிறதோ சந்தோசப்படுங்கள். உடலில் உள்ள விஷம் வெளியேறி விட்டது என்று. ஏனென்றால் நாக்குக்குத் தெரியும்.எப்பொழுது எந்த சுவை வேண்டுமென்று விஷம் வெளியேறிய பிறகே நாக்குக் கசப்பு சுவையின் தேவை தீர்ந்து விடவே பாகற்காய் கசக்க ஆரம்பிக்கிறது.

எனவே பாம்பு கடித்தால் முதலில் நமக்குத் தேவைப்படுவது தைரியம், இரண்டாவது கசப்பானச் சுவையை சாப்பிடவேண்டும், ஆனால் பலர் பாம்பின் விசத்தால் இறப்பது கிடையாது. பாம்பு கடித்து விட்டது என்ற எண்ணம் மனதில் பயத்தை ஏற்படுத்தி பயம் சிறுநீரகத்தைப் பாதித்து சிறுநீரகம் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் பாம்பு விஷத்தை வெளியேற்ற முடியாது, ஏனென்றால் பாம்பின் விஷத்தை வெளியேற்றுவது சிறுநீரகம், எனவே பாம்பு மட்டுமல்ல எந்த விஷப்பூச்சியும் கடித்தால் முதலில் நாம் நம் உடல் நம்மைக் காப்பற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஒருவருக்குத் தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது பாம்பு கடித்து விட்டது அவர் அதை பார்க்கவேயில்லை மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் காலைப் பார்த்து பாம்பு கடித்தது போல் இருக்கிறதே என்று கேட்டார், அதைப் பார்த்தவுடன் அவரும் ஆமாம் இது பாம்பு கடித்த பற்கள் போல் இருக்கிறதே என்று நினைத்து உடனே அவர் மயங்கி கிழே விழுந்து இறந்தது விட்டார், இது போல நிறைய கதைகள் உலகத்தில் உள்ளது, பாம்பு கடித்த பிறகு அந்த விஷம் அவரைக் கொலை செய்யவில்லை ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்பு பாம்பு கடித்து விட்டது என்று அவருக்கு எப்பொழுது புரிந்ததோ அவர் மனம் பயத்தை உண்டு செய்து பயம் சிறுநீரகத்தை பாதித்து சிறுநீரகம் வேலையை நிறுத்தும் பொழுது உயிர் பிரிகிறது. எனவே தயவு செய்து விசப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிக்கத் தெரியும் அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமஹ்டு நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அந்த சுவையை உடனே தாராளமாகக் கொடுப்பது மூலமாகக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அந்தக் காரியத்தை மட்டுமே செய்வதால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

உடனே பாம்பு கடித்தவுடன் இலையையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம். இது ஒரு தற்காப்பு வைத்தியம். மனதில் தீர்க்கமான தைரியமும் கசப்பானச் சுவையை சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷம் முறியடிக்கும். இருந்தாலும் பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிடுங்கள் அதே சமயத்தில் மருத்துவமனைக்கும் செல்லுங்கள், ஏனென்றால் ஒரு சில பாம்புகள் இந்தக் கசப்பான சுவைக்கும் மீறி வேலை செய்ய வாய்ப்புள்ளது.

கோவில்களில் திருவிழாவின் போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்பவர்கள் முழுஎலுமிச்சம் பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள், வெப்பம் இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கல்ம் ஏன் அவ்வாறு சாப்பிடுகிரர்கல்ம் ஏனென்றால் உடலுக்கு இந்த சக்தியால் சில காயங்களை ஏற்படுத்தும் பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள BP யை அதிகரிக்கும் பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும், நெருப்புச் சக்தியை மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நமக்குக் கசப்பானச் சுவையைக் கேட்கிறது. எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும் பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை, அதே நபர்கள் அடுத்த ஆனால் வீட்டில் தனியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள், அவருக்கு அது கசக்கும்.

எனவே கசப்பு சுவைக்கும் நெருப்புப் பிராணனுக்கும் இருதயம், இருதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு, சந்தோஷம் ஆகிய இவ்வளவு விஷயத்திற்கும் சம்பந்த முண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சம்பந்தங்களை புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோய்களைக் குணப்படுத்த முடியும். இந்த சம்பந்தம் தெரியாத மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து ஆப்ரேஷன் செய்து மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

Thanks to : ValaiTamil

Category: தமிழ் மருத்துவம்

- February 7, 2017

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.