ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!

ஆசனவாய் எரிச்சல்
ஒருவருக்கு மூல நோய் இருந்தால், எப்போதும் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக இம்மாதிரியான தருணத்தில் ஆசனவாயில் எரிச்சலும், குடைச்சலும் எந்நேரமும் இருந்தவாறு இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் சொல்லவும் பலரும் வெட்கப்படுவார்கள். இந்த வெட்கத்தினாலேயே மருத்துவரிடம் கூட பலர் செல்லமாட்டார்கள்.
ஆனால் ஆசன வாயில் ஏற்படும் கடுமையான எரிச்சல் மற்றும் குடைச்சலை, நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் உடனடி நிவாரணம் வழங்கும். சரி, இப்போது அதுக்குறித்து காண்போமா…
கற்றாழை
கற்றாழையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தடுக்கும் பண்புகள் உள்ளது. எனவே ஆசன வாயில் எரிச்சல் அல்லது குடைச்சல் அதிகமாக இருந்தால், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கும் மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் சிறிது நேரம் தேய்த்து உலர வைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சீமைச்சாமந்தி
ஆசன வாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்க சீமைச்சாமந்தி உதவும். அதற்கு சீமைச்சாமந்தியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைத் துடைத்து எடுக்க வேண்டும்.
டீ-ட்ரீ ஆயில்
விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, ஆசன வாயில் காட்டன் பயன்படுத்தி தேய்த்தால், எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தரும் வீக்கம் குறையும்.
பூண்டு
3 பூண்டு பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் ஆசன வாய் பகுதியைக் கழுவுங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, ஆசன வாய் பகுதியில் தடவினால், எரிச்சல் மற்றும் குடைச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வைட்டமின் ஈ
மூல நோய் இருப்பவர்களின் ஆசன வாய் மிகவும் வறட்சியுடன் இருந்தால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். ஆனால் வைட்டமின் ஈ எண்ணெயை ஆசன வாய் பகுதியில் தடவினால், வறட்சி குறைவதோடு, மூல நோயும் விரைவில் குணமாகும்.Source:tamil4health.com

Category: தமிழ் மருத்துவம்

- March 22, 2017

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.