இருமல், அஜீரணம், அமில சுரப்பு – வீட்டு வைத்தியம்
இருமல் வீட்டு வைத்தியம்
தொண்டைப்புண்களுக்கு தேன் நல்லது. தேனை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் தொண்டையில் பரவும். தொண்டையின் அழற்ச்சியை தணிக்கும். மஞ்சளும் நல்ல வீட்டு மருந்து. அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் சூடான பாலில் இட்டு, சர்க்கரை சேர்த்து, தினமும் இரு வேளை பருகவும்.
இருமல்
எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.
நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.
துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளவர்கள், படுக்கைக்குச் செல்லுமுன் கனத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதுடன், இரவு உணவிற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அஜீரணம்
அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி எனும் கடுகு ரோகினி நல்ல மருந்து ஆகும்.
கடுகு ரோகினி ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்.
அதிக அமில சுரப்பு (Acidity)
நான்கைந்து மிளகை, நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை சிறிது சர்க்கரை கலந்து பாலில் சேர்த்து, தினமும் சாயங்காலம், 15 நாட்களுக்கு குடித்து வரவும்.
இளநீர் குடிக்கலாம். இளநீர் வழுக்கை (இளம் தேங்காய்) யை எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.
படுக்கும் முன் குளிர்ந்த பாலை குடிக்கலாம்.
Category: தமிழ் மருத்துவம்